வாஸ்து சார்ந்த விஷயத்தில் வடகிழக்கு குறைவது என்பது ஒரு இடத்தில் மிக மிக தவறு. இருக்கக்கூடிய தவறுகளிலேயே வாஸ்து தவறு வகையில் பெரியதாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கக்கூடிய இடங்களில் அந்த தவறை திருத்த வேண்டும் என்று முடிவு செய்தால் ஒரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அது போன்ற இடங்களில் நீங்கள் கட்டி முடித்து விட்டீர்கள். இடையில் ஏதோ ஒரு தொய்வு ஏற்படுகிறது அந்த நேரத்தில் ஒரு வாஸ்து நிபுணரை அழைக்கின்றீர்கள். அப்படி அழைக்கின்ற பொழுது அந்த இடத்தில் மாற்றம் என்பது கட்டடத்தை இடிக்க வேண்டுமா? என்று சொன்னால் 100% தேவை கிடையாது என்று சொல்லுவேன். அந்த இடத்தில் வடகிழக்கில் இருக்கிற சுற்றுச்சுவரை உடைத்து விடுங்கள். வடகிழக்கு சாலையோடு இணைந்து நமக்கென்று ஒரு எல்லை நிர்ணயம் செய்யாதபோது வாஸ்து வகையில் யோகத்தை செய்கிற மனையாக அது மாறிவிடும். இதனை வாய்ப்பு இருக்கிற மக்கள் தான் செய்ய முடியும். எல்லோரும் செய்ய முடியாது. அதற்கு விருப்பப்பட்டால் மட்டுமே அது நடக்கும். இது வாஸ்து சார்ந்த ஒரு விழிப்புணர்வு பதிவு.
In the matter of Vastu, the northeast is a very, very wrong place. It is considered the biggest mistake in terms of Vastu. If you decide to correct that mistake in such places, you should keep one thing in mind. In such places, you have completed the construction. If there is some slack in between, at that time you call a Vastu expert. When you call like that, if you say that the change in that place means demolishing the building? I will say that there is 100% no need. Break the wall in the northeast at that place. When we do not define a boundary for ourselves along the northeast road, it will turn into a place where we practice yoga in terms of Vastu. Only people who have the opportunity can do this. Not everyone can do it. It will happen only if they want to. This is an awareness post based on Vastu.