Saranarayana perumal- Thiruvadhigai

இன்றைய ஆலய_தரிசனம்;
அருள்மிகு
ஶ்ரீ (செங்கமலத்தாயார்)
ஹேமாம்புஜவல்லித் தாயார் சமேத
ஶ்ரீ சரநாராயணப்பெருமாள் திருக்கோயில்,
திருவதிகை (ஊர்),
பண்ருட்டி வட்டம்,
கடலூர் மாவட்டம்.
( பல்லவர்களால் கட்டப்பட்ட,
சுமார் 2000-ஆண்டுகள் பழமையான இந்த வைணவ திருத்தலத்தில்,
நளினக விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் நம் வேங்கடவன், (உப்பிலியப்பன் ஶ்ரீநிவாசனை போல)
ஶ்ரீ தேவியை திருமணம் செய்துகொண்டு,
சாளக்கிராம திருமேனியராய்
நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார்.
(சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)
ஒரு புராண நிகழ்வின்படி;
திரிபுர சம்ஹாரத்தில்,
சிவபெருமானுக்கு சரம் கொடுத்து உதவியதால்,Saranarayana perumal- Thiruvadhigai
இத்தல இறைவனுக்கு ஶ்ரீ சரநாராயணப்பெருமாள் எனும் திருநாமமாம்.
தனி சன்னதியில்,
ஹேமாம்புஜவல்லி தாயார்
அமர்ந்த கோலமாக வீற்றிருக்கிறாள்.
பொதுவாக, அமர்ந்த நிலையிலும், நின்ற கோலமாகவும் காட்சி தரும் நரசிம்மர்,
(திருவக்கரையில், வக்ராசூரனை அழித்துவிட்டு அதன் பரிகாரத்திற்காக) இத்தலத்தில், *காண்பதற்கு அரிய*
*சயன திருக்கோலமாய்* தாயாருடன்
தெற்கு நோக்கி வீற்றிருப்பது தலச்சிறப்பாகும்.
தாயாருடன் எழுந்தருளியிருப்பதால்,
இது *’போக சயனம்’* என்றழைக்கப்படுகிறது.
(ஈசனுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெறுவதுபோல,
இவருக்கும் பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது விசேஷம்)
700-ஆண்டுகளுக்கு முன்பு, வேதாந்த தேசிகர் திருவஹிந்திபுரம் செல்லும் வழியில்,
இத்தல நரசிம்மரை வழிபட்டு சென்றதாகவும்,
அர்ஜுனன்
குருஷேத்திரப்போர் முடிந்து பிராயச்சித்தத்திற்காக
இத்தல பெருமாளை வழிபட்டதாகவும் தலபுராணம் கூறுகிறது.Saranarayana perumal- Thiruvadhigai
புரட்டாசி மாதம் முழுவதும் திருக்கல்யாண (மஹோத்ஸவம்) உற்சவம், சித்திரையில் விசேஷ திருமஞ்சனம்,
வைகாசியில் வசந்த உற்சவம் என,
வருடத்தின் எல்லா மாதங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும்
இத்தலத்தில்,
நலமும் வளமும் சிறக்க, பெருமாள் தம்பதியருக்கு
நடைபெறும் அமாவாசை வழிபாடு
சிறப்புமிகு சிறப்பு).
ஓம் நமோ நாராயணாய நமக:
217 total views, 1 views today