அலுவலகத்தில் வாஸ்து | vastu for office tamil

chennai vastu office
chennai vastu office


அலுவலகங்களுக்கு வாஸ்து என்கிற வகையில் சுய தொழில் செய்த மனிதர்கள், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தொழில் செய்கிற மக்கள், வழக்கறிஞர் தொழில் செய்கிற மக்கள், அனைத்து தொழில் சார்ந்த மக்கள், தனியார் அலுவலக மக்கள்,அரசு அலுவலகங்கள், இப்படி பலவகையான அலுவலகங்கள் உண்டு. அந்த அலுவலக அறை  என்பது குறைந்தபட்சம் 8 அடிக்கு 10 அடி ஆக இருப்பது நல்லது. அப்படிப்பட்ட அலுவலக கணக்கு புத்தகங்கள் வைக்கிற மேடை, அலமாரி அல்லது, பீரோ தென்மேற்கில் வைப்பது சிறப்பு. அதற்கு இணையாக அந்த அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி அல்லது, அந்த அலுவலகத்தில் உரிமையாளர் அமரக் கூடிய இடமாக அமைத்துக் கொள்ளலாம். ஒரு அலுவலகம் இருக்கிறது என்று சொன்னால், அந்த அலுவலகத்தில் பால்சிலிங் என்கிற விஷயத்தை உட்புகுவது நன்றாக இருக்கும். அப்படி இருக்கும்போது ஒரு அறைக்கு மட்டும் பால்சிலிங் செய்யக்கூடாது. அனைத்து அறைகளுக்கும் சேர்த்து தான் செய்யவேண்டும். எப்படி என்று சொன்னால் ஒரு ஏர் கண்டிஷனர் வைப்பதற்காக உரிமையாளர் அலுவலக அறைக்கு மட்டும் பால்சிலிங் அடிப்பார்களே அது வாஸ்து ரீதியாக ஒரு சில குற்றங்களை கொடுத்துவிடும் . அதனை செய்யக்கூடாது. அலுவலகத்தின் வாசல் என்பது எப்பொழுதுமே உச்ச பகுதியில் இருக்கும் அமைப்பாக இருப்பது நல்லது. ஏனெனில் வடக்கு திசையில் வடகிழக்கு ,தெற்குதிசைக்கு தென்கிழக்கு,  மேற்கு திசைக்கு மேற்கு வடமேற்கு, கிழக்கு  திசைக்கு ககிழக்கு வடகிழக்கு இருப்பதுதான் உச்சவாசல் என்கிற அமைப்புஆகும். இதனை தவிர்த்து ஒரு அறை கதவை அமைப்பது என்பது வாஸ்துவின் ரீதியாக தவறாக முடிந்து விடும். அந்த தவறுகளை  எப்போதும் செய்ய வேண்டாம்.

அதேபோல தென்மேற்கு பகுதியில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது , தலைமை அதிகாரி அமர்வது சிறப்பு. அதற்குப் பிறகு இரண்டாம் நிலை அலுவலர்கள் என்கிற வகையிலும், மூன்றாவது நிலை ஊழியர்கள் என்கிற வகையிலும் தென்கிழக்கு மத்திய பாகம் அல்லது, மேற்கு மத்திய பாகம் அல்லது, தென்கிழக்கு அல்லது, வடமேற்கு பகுதியில் இருப்பது நலம். இதனை தவிர்த்து மற்ற பகுதி வரும் போது வாஸ்து ரீதியாக அது குற்றம் உள்ள விஷயமாக மாறிவிடும். இந்த விதி என்பது அனைத்து திசையை பார்த்த அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

ஒரு அலுவலகம் இருந்தாலே தென்மேற்கு பகுதியில் உரிமையாளரும் இருக்கலாம். அல்லது மேல் அதிகாரியும் இருக்கலாம்.ஆனால் அப்படிப்பட்ட ஒருசில அலுவலகத்தில் பாரமான கனமான பொருட்களை வைத்து வியாபாரம் செய்யக் கூடிய இடமாக இருந்தால் அந்த இடத்தில் தென்மேற்கு பகுதியில் உரிமையாளரும் மேலாளரும் அமராது கனமான பொருட்களை வைக்க வேண்டும். அதனை தவிர்த்து வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு மத்திய பாகத்திலும், மேற்கு மத்திய பாகத்தில் அமர்ந்து கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் அப்படி இருக்கின்ற பட்சத்தில் தென்மேற்கு பகுதியில் உரிமையாளர்கள் அமரக்கூடாது. அதேபோல அந்த விற்பனை என்கிற ஒரு விஷயத்தில் விற்பனைக்காக கூடிய பொருட்கள் வடமேற்கு இருந்து வெளியில் செல்லும் அமைப்பாக மாற்றிக் கொள்வது நல்லது. ஒரு அலுவலகம் இருக்கிறது அந்த வகையில் பெண் உதவியாளர்கள் இருக்கின்ற பட்சத்தில், தென் கிழக்குப் பகுதியிலும், வட மேற்குப் பகுதியிலும் அமர வைக்கலாம். தென்மேற்கு முதலாளி அமர நிர்வாக அதிகாரிகள் அவருக்கு கீழே வடக்கு கிழக்கு அமரலாம்.மார்கெட்டிங் சம்பந்தப்பட்ட வெளியில் சொல்லக் கூடிய மனிதர்கள் அல்லது, நிர்வாக உதவியாளர்கள், நிறுவனத்தின் தயாரிப்புகள் போன்ற விசயங்களில் வடமேற்கு   பகுதியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எப்பொழுதுமே இருக்கின்ற இடங்களில் வடகிழக்கு காலியாக வைத்திருப்பது நல்லது. ஒரு சில அலுவலகங்கள் கண்களுக்கு தெரியாத அமைப்பில் அல்லது, மக்களின் பார்வைக்கு தெரியாத அமைப்பில் இருக்கும். அது போல இருக்கும் அலுவலக கடைகளை வாடகைக்கு பிடிப்பது தவிர்த்துக்கொள்வது நல்லது.

இந்த இடத்தில் இரண்டு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். தெற்கு சார்ந்த சாலையில் இருக்கிற அலுவலகங்கள் கண்களுக்கு தெரியாது இருந்தால் கூட தவறு கிடையாது.  மேற்குப் பார்த்து இருக்கிற அலுவலகங்கள் கண்களுக்கு தெரியாத இருந்தால் கூட தவறு கிடையாது. ஆனால் கிழக்கு பார்த்து, வடக்கு பார்த்து இருக்கிற அலுவலகங்கள் சாலைக்கு வெளியே தெரியாது  அனைத்து கட்டிடங்களுக்கும் இருக்கும் பொழுது, பெரிய அளவில்  வியாபாரம் ஆகாத அலுவலகமாக மாறிவிடும். அதேபோல தெற்கு பார்த்த கடைகள் சாலை மட்டத்தை விட பெரிய அளவில் உயரத்தில் இருக்க கூடாது. அதே அளவில் மேற்கு பார்த்த கடைகளும் தரைமட்டத்திலிருந்து பெரிய அளவில் உயரத்தில் இருக்கக்கூடாது. கிழக்கு பார்த்த வடக்கு பார்த்த கடைகள் ஓரளவிற்கு சாலை மட்டத்தை விட உயர்ந்து இருந்தாலும் தவறு கிடையாது. இதனை கண்டிப்பாக நீங்கள் தெரிந்து வேண்டும். அனைத்து கடைகளில்  கூரை அமைப்பு நீங்கள் போடுகிறீர்கள். தனிப்பட்ட முறையில் நீங்களே இந்த இந்த அலுவலகத்தை வடிவமைப்பு செய்கிறீர்கள் எனும் பொழுது, கூரை அமைப்பு என்பது கிழக்காகவும், வடக்காக சரிவுகள் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மேற்கு, தெற்கு சரிவுகளை அமைக்க கூடாது. நிறைய இடங்களில், தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த கடை களில் இந்த தவறுகளை செய்திருப்பார்கள் . தயவு செய்து இந்த தவறுகளை செய்ய வேண்டாம். அலுவலகங்களில் கழிவறைகள் எனும்போது, எந்த திசை பார்த்த அலுவலகமாக இருந்தாலும், வடமேற்கில் மட்டுமே வைக்க வேண்டும்.

 65 total views,  2 views today

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *