மேற்கு பார்த்த வீடு வாஸ்து | west facing house

மேற்கு பார்த்த வீடுகளுக்கு வாஸ்து பார்ப்பது என்பது எளிதான விஷயம் கிடையாது. மேற்கு பார்த்த வீடுகளை பொருத்தளவில் மனம் போன போக்கில்  வீடுகள் கட்டுவது என்பது என்னைப் பொறுத்த அளவில் தவறு என்று சொல்வேன். அந்த வகையில் மேற்கு பார்த்த வீடுகளை, மேற்கு பார்த்துத்தான் கட்ட வேண்டுமா என்றால் என்னைப்பொறுத்த அளவில் வேண்டாம் என்பேன். மேற்கு பார்த்த வீடுகளை chennaivastu பொறுத்தளவில் முதல் தரமாக கட்டிடம் கட்டுவது என்பது, வடக்கு பார்த்து கட்டிடம் கட்டும் போது, வடக்கு பார்த்த மனைக்கு என்ன பலனை கொடுக்குமோ, அதே பலனை மேற்கு பார்த்த மனைகளில் கொண்டுவரமுடியும். அந்த வகையில், வடக்கு பார்த்த மனை, கிழக்கு பார்த்த மனை என்று சொல்லும் போது, கிழக்கு பார்த்த மனையும், மேற்கு பார்த்த மனையும், கட்டிடத்தை வாஸ்து விதிகளுக்கு சரியான முறையில் கட்டும்பொழுது இரண்டுமே ஒரேவிதமான பலன்களைக் கொடுக்கும் மனைகளாக இருக்கும். எனவே அந்த வகையில் மேற்கு பார்த்த மனைகளில் தலைவாசல் என்பது வடக்கில் அதிக இடங்களை விட்டு அந்தப் பகுதியில் ஒரு கார் நிறுத்தக்கூடிய அல்லது, இரு சக்கர வாகனங்களை நிறுத்த கூடிய அமைப்பில் இடங்களை விட்டு , கட்டிடத்தின் வடகிழக்கு பகுதியில் வடகிழக்கு சார்ந்தோ அல்லது, புதன் வாசல் அமைப்பிலோ வாசல்கள் வைத்து, வீடுகளை கட்டும் பொழுது அதி அற்புதமான பலன்களைக் கொடுக்கும் வீடாக இருக்கும். அதனை விடுத்து மேற்கு பார்த்த வீடு களுக்கு நாம் மேற்குத்தான் வாயில் வைப்பேன் என்று சொன்னால் அதுவும் தவறு கிடையாது. ஆனால் மொத்த இடத்தையும் குத்தகைக்கு எடுப்பது போல, காலி இடம் பெரிய அளவில் வடக்கில் விடாது மேற்கில் வாசல் வைத்து, மேற்கில் பால்கனி அமைப்பை உருவாக்கி, கார் நிறுத்தக்கூடிய இடத்தை மனை இடத்திலிருந்து வெட்டப்பட்ட நிலையில் ஒரு வீடு கட்டும் பொழுது, மேற்கு பார்த்த வீடுகள் மிகப் பெரிய தவறுகளை கொடுக்கிற வீடுகளாக மாறி விடும். தயவுசெய்து இந்த விஷயத்தை எந்த இடத்திலும் செய்ய வேண்டாம் என்பது எனது கருத்து. இந்த விஷயத்தை அடுக்குமாடி குடியிருப்புகளில் வேண்டுமானால் கொண்டு வரலாம். பல அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கின்ற போது, மேற்கில் வாயு மூலையில்  உள்ளாக இருப்பது போல் அமைத்துக் கொள்ளும்போது நல்ல பலன்களைக் கொடுக்கும். அதனை விடுத்து வீட்டின் எந்த மூலையையும் உடைத்து ஒரு இல்லத்தை கட்டி, மேற்கு திசையில் வாயில் வைக்கும்போது, வாஸ்து ரீதியாக தவறுகளை கொடுக்கும். நிறைய இடங்களில் வடமேற்கில் கார் பார்க்கிங், இருசக்கர வாகனங்கள் நிறுத்த வேண்டும் என்பதற்காக ஒரு பள்ளம் அமைப்பை ஏற்படுத்தி சாலைகள் மட்டத்தில் வைத்து இருப்பார்கள்.  என்னைப் பொறுத்த அளவில் வாஸ்துவின் ரீதியாக அது தவறுதான் என்று சொல்லுவேன். ஒரு வீடு மேற்கு பார்த்து இருந்து, வடக்கில் காலி மனை வாங்கினால் சிறப்பு . ஒரு வீடு மேற்கு பார்த்து இருந்து அதன் கிழக்கில் காலி மனை வாங்கினால் சிறப்பு. அதே சமயம் ஒரு மனை மேற்கு பார்த்து இருந்து அதற்கு தெற்கு புறத்தில் காலிமனை விலைக்கு வரும்பொழுது வாங்கினால் மிகமிகத் தவறு. இந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. ஒரு இல்லத்திற்கு மேற்கு தலைவாசல் வைக்கும் பொழுது , அதிக அகலம் வைத்து ஒரு கட்டிடம் கட்டும் பொழுது அந்த தலைவாசலில் உயரம் மற்றும் அகலம் மற்ற வாசல்களுக்கு  இணையாக இருக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் தாழ்ந்து விடக்கூடாது .மேற்கு பார்த்த வீடுகளில் உபயோகிக்கும் தண்ணீர் வடகிழக்கு சென்று அதற்குப் பிறகு, பைப்லைன் வழியாக வடமேற்கு வழியாக வெளியில் செல்வது சரியான வாஸ்து விதியாகும். அதாவது மேற்கு பார்த்த இடங்களில் கழிவுநீர் கிழக்கிலோ, வடக்கிலோ, கிழக்கிலோ செல்ல முடியாது. ஆகவே அனைத்து கழிவுநீரையும், வடகிழக்கு இடத்தில் சேமித்து பிறகு அங்கிருந்து வடக்கு மதில் சுவர் ஒட்டிய அமைப்பில் ஒரு கால்வாய் அமைத்து அது திறந்தவெளி கால்வாயாக கூட இருக்கலாம்.  அதன் வழியாக மேற்கு வாயு பகுதிக்கு அனுப்பி வெளியேற்ற நிகழ்வு செய்ய வேண்டும். மேற்கு பார்த்த வீடுகளில் தூண் அமைப்பின் பில்லர் நிறுத்தி வீடுகளை அமைக்கும் பொழுது, அந்த தூண் வருகிற இடம் என்பது பள்ளமாக மாறிபடுகிறது. ஆகவே அந்த தவறுகளை செய்யக்கூடாது. மேற்கு பார்த்த மனைகளை, வாங்கி கட்டிடம் கட்டும் பொழுது கண்டிப்பாக சுற்றுச்சுவர் என்கிற ஒரு விஷயம் அவசியம். ஏனென்றால்  சுற்றுச்சுவர் அமைக்கவில்லை என்று சொன்னால்,  மேற்கு சாலை எஇருக்கும் இடமும் நமது மொத்த இடத்திற்கு காலி இடமாக மாறி தவறுகளை கொடுத்துவிடும். மேற்குப் பகுதிகளில் வீட்டு சுவர்களும் மதில் சுவர்களும் உயரமாக இருக்கும் பொழுது நன்மையை கொடுக்கும். மேற்கு புறம் இருக்கும் வீட்டிற்கு, மேற்குப் புறத்தில் சிறிய வீடுகளை கட்டுவதும், மேல் தள உயரம் குறைவாக அமைப்பதும் மிகமிகத் தவறு. அதே போல மேற்கு பார்த்த வீடுகளுக்கு, ஒரு சில இடங்களில் தென்மேற்கு பகுதியில் வாசல் வைத்திருப்பார்கள். தென்மேற்கு பகுதி சுற்றுச்சுவரில் காம்பவுண்ட் சுற்றுச்சுவரில்  தென்மேற்கு கதவு வைத்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் இந்த தவறுகளை செய்யக்கூடாது. அப்படி இருக்கக் கூடிய வீடுகளில் வியாதிகள் ,அகால மரணங்கள், பணத்தட்டுப்பாடு போன்ற விஷயங்களை கொடுக்கிற இல்லமாக இருக்கும்.

 435 total views,  1 views today

Leave a Comment

Your email address will not be published.