Tamil vastu calendar 22.6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

22.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 22.6.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
8ந் தேதி புந்திவாரம். இரவு 8.47 வரை தே. நவமி திதி.  பிறகு தே.தசமி திதி. நாள் முழுவதும்  ரேவதி நட்சத்திரம்.

ராகுநேரம்:12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து வகையில் ஒரு இடம் என்பது 35 டிகிரிக்கு திரும்பி இருக்கிறது என்று சொன்னால் ஏதாவது ஒரு திசை வடகிழக்கு பார்த்து இருக்கும். இந்த இடத்தில் எந்த திசை வீடாக இருந்தாலும் வாசல் என்பது வடகிழக்கு 35 டிகிரி காட்டுகிறதோ அங்கு மட்டுமே வைக்க வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் உச்ச பகுதிகளாக இருக்கக்கூடிய வடக்கிலிருந்து மையத்தில் இருந்து கிழக்கு மையத்தின் வரை இருக்கக்கூடிய நல்ல பாசிடிவ் ஆக இருக்கக் கூடிய இடத்தில் வாசல் வைத்துக்கொள்ளலாம். இதனை தவிர மனம் போன போக்கில் கட்டடம் கட்டி திசைகாட்டி பார்க்காது, மாடி கட்டிடம் கட்டி திசைகாட்டி அனுசரிக்காத ஒரு இல்லத்தை கட்டி வாழும் பொழுது வாஸ்து என்பது ஒரு மனிதருக்கு பொய் என்பது போலத்தான் தெரியும். தெரிந்து செய்தால் வாஸ்து என்பது உண்மை என்று உங்களுக்கு புரியும். இந்த இடத்தில் இதுபோல எனது வாஸ்து பயணத்தில் நிறைய மக்களுக்கு தீர்வுகளை கொடுத்திருக்கிறேன். அந்த வகையில் ஒரு இல்லத்திற்கு தெற்கு பகுதியில் எடையை வைக்காது, வடக்கு பகுதியில் வைக்க வேண்டாம். ஒரு இல்லத்திற்கு கிழக்குப் பகுதியில் வைக்காமல் மேற்குப் பகுதியில் வைக்க வேண்டாம். ஆக வாஸ்துவில் மிக மிக முக்கியமானது சம எடை என்கிற விஷயம்தான். ஆக சம எடை இந்த விஷயத்தை கவனிக்காது ஒரு இல்லத்தை அமைக்கும் பொழுது அனைத்து விஷயங்களிலும் மனித வாழ்க்கையில் சமநிலை என்பது இருக்காது.
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- லாபம்
ரிசபம்-  சுகம்
மிதுனம்- நட்பு
கடகம்- கவனம்
சிம்மம்- வெற்றி
கன்னி- போட்டில்
துலாம் – வரவு
விருச்சிகம்- மறதி
தனசு – தெலுங்கு
மகரம்- சிக்கல்
கும்பம்- நலம்
மீனம் – ஆர்வம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#june_22

பிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825)

கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)

புளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)

சுவீடன் தேசிய கொடி பெறப்பட்டது(1906)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 139 total views,  1 views today