Dining room vastu | உணவு உண்ணும் அறைக்கு வாஸ்து

Dining Table & Dining Room Vastu 

வாஸ்து சாஸ்திர அடிப்படையில் உணவு உண்ணும் அறை எந்த அமைப்பில் அமைக்க வேண்டும் என்கிற முறையை தெரிந்துகொண்டு அமைத்தால் நல்லது என்பேன். அந்த வகையில் உணவு உண்ணும் அறை என்பது வாஸ்து ரீதியாக என்னால் முதல் கணக்காக பார்க்கப்படுகிறது. எப்படி என்று சொன்னால் ஒரு இல்லத்தில் அனைத்து அறைகளுமே முக்கியமாக பார்க்கப்பட்டாலும் உணவு உண்ணும் அறைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  உணவு இன்னும் அறைகள் என்பது மிக விசாலமாக , அகலமாக நீளமாக, இருக்கவேண்டும் என்பேன். உதாரணத்திற்கு ஒரு வரவேற்பு இருக்கிறது. அதற்கு இணையாக உணவு உண்ணும் அறை கொடுப்பது நல்லது என்பேன். எப்படி என்று கேட்டால் தெற்குப் புறத்தில் ஒரு படுக்கை அறையும், அதற்கு இணையாக கிழக்குப் புறத்தில் ஒரு சமையலறையும் ஏற்படுத்திக் கொண்டு, அந்த படுக்கை அறைக்கு வடக்குப் புறத்தில் கழிவறை மற்றும் பூஜைஅறையை மேற்கு பகுதியில் அமைத்துகொண்டு  மாடிக்கு செல்வதாக இருந்தால் , படிகளையும்  அமைத்துக் கொண்டு,  படிக்கட்டு மற்றும், பூஜை கழிவறை வரைக்கும் இணையாக வீட்டின் கிழக்கு எல்லை வரை உணவு உண்ணும் முறையை கொடுப்பது சாலச் சிறந்தது என்பேன். என்னைப் பொருத்தளவில் இதனைத் தான் முதல் தரமான உணவு உண்ணும் அறை, டைனிங் ரூம் என்று சொல்லவேண்டும். ஆக முதல் தரமான டைனிங் ரூம் என்பது இது தான் என்பேன் . உணவு உண்ணும் அறையில் எந்த இடத்திலும் ஒரு நெருக்கடியான இட பற்றாக்குறை என்பது இருக்கக்கூடாது.  நிறைய மக்கள் சமையலறையை பெரியதாக அமைப்பார்கள். விவரம் தெரிந்த மக்கள் சமையல் அறையை சிறியதாகவும், உணவு உண்ணும் அறையை பெரியதாகவும்  அமைப்பார்கள். நிறைய இடங்களுக்கு வாஸ்து சொல்ல செல்கின்ற பொழுது இதனை சுட்டிக் காட்டினாலும் ஆனால் மக்கள் கேட்பது கிடையாது. ஒரு எல்லைக்கு மேலாக நம்மால் சொல்வது என்பது இயலாது. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளலாம். இல்லை என்றால் விட்டுவிடுவது நல்லதுதான் என்று நினைப்பேன்.

அந்த வகையில் இரண்டாம் தர உணவு உண்ணும் அறையாக சமையலறையிலிருந்து உணவை எடுத்து வடக்கு புறத்தில் வைத்து சாப்பிட கொடுக்கிற நிகழ்வாக உணவு உண்ணும் அறை இருக்க வேண்டும். இதற்குப் பிறகு மூன்றாம் பட்சமாக சமையல் அறையில் இருந்து சமையல் செய்து மேற்புறத்தில் வைக்கிற அமைப்பாக இருக்கவேண்டும். இது எப்படி இருந்தாலும் சமையல் அறை பத்துக்கு  பத்தடி சமையலறை இருக்கிறதென்று சொன்னால்  அந்த சமையலறை  மிகச் சிறந்த சமையலறையாக இருக்கும் அல்லது, தென்கிழக்கில் பத்துக்கு பத்து சமையல் அறை இருக்கு என்று சொன்னால், அந்த அறையின் வடக்கு பகுதியிலிருந்து சமையலறைக்கு மேற்குப் புறத்தில் இருந்த படுக்கை அறை வரை அதன் வடக்குப் பகுதி வரை விரிவடைந்த நிலையில் இருக்கும் சமையலறை முதல்தரமான உணவு உண்ணும் அறை ஆகும்.  இதனைத் தவிர எந்த வகையில் சமையல் அறைகளை அமைத்துக் கொண்டாலும் இரண்டாம் பட்சம்தான் என்று சொல்வேன் . அதேபோல வடமேற்கு பகுதியில் ஒரு சில இடங்களில் சமையலறை என்பது இருக்கும். அப்படிப்பட்ட அறைகளில் சமையலறை என்பது வடமேற்குப் பகுதியில் பத்தடிக்கு பத்தடி இருந்தால், அதன் கிழக்கு பகுதியில் உணவு உண்ணும் அறை என்பது 10 க்கு 16 அடி நீளத்தில் இருப்பது சாலச் சிறந்தது. இதனைத்தான் வடமேற்கு சார்ந்த சமையலறையில் முதன்மையான உணவு உண்ணும் அறை ஆகும்.  அதனை தவிர்த்து இரண்டாம்பட்சமாக அந்த சமையலறையின் தெற்கு புறத்தில் 16அடி நீளத்தில் தெற்கு, வடக்கு அல்லது கிழக்கு மேற்காகவும் ஒரு உணவு உண்ணும் அறை அமைக்கும் பொழுது தெற்கு வடக்கு 16 அடி நீளத்தில் இருக்கிற உணவு அறையை விட கிழமேல் நீளத்தில் 16 அடி நீளத்தில் இருக்கிற சமையலறை உயர்ந்தது என்பேன். ஒரு சில மக்கள் சமையலறைக்கு கிழக்கில் தெற்கு வடக்கில் 16அடி நீளத்திலும், கிழக்கு மேற்கில் 10 அடி அகலத்திலும் சமையலறை சார்ந்த உணவு அமைத்திருப்பார்கள் இது கூட சரியாக எடுத்துக்கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும் உணவு உண்ணும் அறை என்பது சமையலறைக்கு நெருக்கத்தில் இருக்க வேண்டும். ஒரு சில மக்கள் தென்மேற்கில் படுக்கை அமைத்து, அதன் கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு சமையலறை இடையே பெரிய அளவில் 16 அடி நீளத்திலும் படுக்கையறை  அமைத்திருப்பார்கள். இதன் இடைப்பட்ட வடக்கு பகுதியில் சமையலறை சார்ந்த உணவு உண்ணும் அறை வேண்டும் என்பதற்காக இல்லத்தின் மேற்குப் பகுதியிலிருந்தும், இல்லத்தின் கிழக்கு பகுதி வரையிலும் மொத்தமாக அமைத்து இருப்பார்கள். ஆனால்   சமையலறையை உணவு  உண்ணும் அறையில் ஒரு உணவகம் போல,கிழக்கு மேற்கு இரண்டு பக்கமும் இல்லத்தை சுருக்கி பூங்காக்களை அமைத்து, பெரிய ஜன்னல்கள் அமைத்திருப்பார்கள். உணவு உண்ணும் அறை என்பது 20 அடி அகலத்தில் நீளத்திலும், 16 அடி அகலத்திலும் இருக்கும். ஆனால் அந்த உணவு அறை   கிழக்கு புறத்திலும் மேற்புறத்திலும் வீட்டை பத்து பத்து அடிக்கு சுருக்கி செடிகள் வைத்திருப்பார்கள். அப்பொழுது இதுபோல உணவு உண்ணும் அறை அமைத்து செடிகொடிகளை பார்த்து உண்பது போல அமைத்து இருப்பார்கள். ஆனால் அந்த வீட்டில் உணவு உண்பதற்கு கூட மக்களின் மனநிலை இருக்காது. இந்த தவறுகளுக்கு இடம் கொடுக்காது உணவு உண்ணும் அறையான டைனிங் ரூம் பொறுத்த அளவில் மிகச் சரியாக அமைக்கவேண்டும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *