குடியிருக்கும் வீட்டில் மரங்கள் வாஸ்து

குடியிருக்கும் வீட்டில் மரங்கள் வாஸ்து ,வாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்,trees Vastu inside the house,வாஸ்து மரங்கள் /செடிகள்,vastu for trees,

நாம் குடியிருக்கும் வீட்டில் மரங்கள் மற்றும் செடிகள் சார்ந்த விஷயத்தை வாஸ்து ரீதியாக தெரிந்து கொள்வோம்.

வீட்டின் அருகே வெளிப்புறப் பகுதியில் இருந்தாலும்,  உட்புற பகுதிகளில் இருந்தாலும்,  மரங்கள் செடிகொடிகளை எங்கு வைக்கலாம் என்பதை தெரிந்துகொள்வது நல்லது. அந்த வகையில் வெளிப்புற பகுதியாக இருந்தாலும் சரி, உட்புற பகுதியாக இருந்தாலும் சரி , தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உயர்ந்த மரங்களை செடிகளை வைத்துக்கொள்ளலாம். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுற்றுச்சுவருக்கு மிக உயரத்தில் செல்கின்ற செடிகளை வைத்துக்கொள்ள கூடாது. அதே சமயம் சிறிய பூச்செடிகள் மற்றும், துளசி சார்ந்த செடிகளை  கிழக்கு மத்திய பாகத்திலும், வடக்கு மத்திய பாகத்திலும், வட மேற்குப் பகுதியிலும் தாராளமாக வைத்துக்கொள்ளலாம். வடகிழக்குப் பகுதியில் எப்பொழுதுமே செடிகொடிகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். இந்த இடத்தில் கொடி என்கிற விஷயத்தை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். கொடிகளை பொருத்த அளவில்  சுயமாக அதனுடைய வளர்ச்சி என்பது இருக்காது. அதனை தாங்கிப்பிடிக்க ஏதாவது ஒரு சார்பு நிலை வேண்டும். அந்த வகையில் ஒரு பந்தல் அமைத்தல்,அல்லது ஒரு  கட்டிடத்தின் மீது ஒரு கயிறு,அல்லது கம்பி அமைப்புகளைக் கட்டி வைத்தால் தான், அந்த கொடிகள் என்கிற செடிகளை வளர்க்க முடியும். ஆகவே வாஸ்து ரீதியாக ஒரு இல்லத்தில் செடிகொடிகளை வைக்கும் பொழுது அதில் வசிக்கும் மக்களின் நிலை கூட, ஒரு கட்டத்தில்  மற்றவர்களை சார்ந்த நிலைக்கு கொண்டு போகக் கூடிய நிலையை அந்த இல்லம் அமைத்து விடும்  ஆகவே கொடிகளை வளர்ப்பது என்பது 100% தவிர்க்கவேண்டும். செடிகளை பொறுத்தளவில் உதாரணமாக துளசிச் செடியை வைத்துக் கொள்ளலாம். சிறிய மரங்களை பொறுத்தளவில் சப்போட்டா போன்ற உயரம் அதிகமில்லாத மரக்களை கிழக்கு வடக்கு பகுதியில் வைத்துக்கொள்ளலாம். அதே போல உயர்ந்த மரங்கள் என்று பார்க்கும்பொழுது மா, பலா தென்னை, வேம்பு, முந்திரி, தைலம், சந்தனம், தேக்கு, சவுக்கு, பூவரசு போன்ற மரங்களை தாராளமாக வைத்துக் கொள்ளலாம். கண்டிப்பாக வீட்டில் புளியமரம் மற்றும், அரச மரம் மற்றும், ஆலமரம் மேலும் தெய்வீக குணங்களை கொண்ட மரங்களான நெல்லி மரம், மற்றும் வில்வ மரம், கருவேல மரம், வெள்ளைவேலான் மரம் சார்ந்த  மரம் மற்றும் செடிகள் கொடிகளை  தவிர்த்துக் கொள்வது நல்லது.

 15 total views,  1 views today