இல்லத்திற்கு இடத்திற்கு திசைகள் கண்டுபிடிக்கும் முறை |How To Find Directions

ஒரு இல்லத்திற்கு, இடத்திற்கு திசைகள் கண்டுபிடிக்கும் முறை.

வாஸ்து அமைப்பில் ஒரு இல்லத்திற்கு திசை என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் எல்லோருக்கும் பொதுவான ஒரு விஷயமாக பார்க்கபடுவது, சூரியனை மையமாக வைத்துத்தான் நாம் திசைகளை கண்டுபிடிக்கிறோம். அந்தவகையில் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு, சூரியன் மறையும் திசை  மேற்கு என்று கூறினாலும், சூரியன்  ஆடிமாதம் முதற்கொண்டு ஆறு மாதங்கள் மற்றும், தை மாதம் முதற்கொண்டு 6 மாதங்கள் உத்ராயண மற்றும் தட்சாயணகளில் பயணங்கள் செய்கிறார். அப்பொழுது சூரியன் இருக்கும் திசை என்பது ஏறக்குறைய ஒரு 15 டிகிரி முதல் ஒரு  20 டிகிரி வரை மாறுகிற ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நேரங்களில் ஒரு வாஸ்து நிபுணர் வாஸ்து ஆலோசனை பயணமாக வரும் பொழுது சூரியன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதனை தனது அன்றாட சூரிய தரிசனம் சார்ந்த நிகழ்வின் அனுபவ அறிவாக இருக்க வேண்டும். அப்போது தான் சரியான வாசலை வைத்து கொடுக்க முடியும்.

இன்றைக்கு சூரியன் இந்த டிகிரியில் இருக்கிறார்  என்கிற விஷயத்தை தெரிந்து வைத்துள்ள நபராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒரு இல்லத்திற்கு வீடு என்பது அதிர்ஷ்டம் பொருந்தி இருக்கிற வீடாக அமையும். கிழக்கு வாசல் வைக்கும் போது,ஆனால் சூரியன் தெற்கே பயணப்படுகிற காலங்களில், கிழக்கு என்று எடுத்துக் கொண்டால், அந்த இல்லம் என்பது தென்கிழக்கில் வாசல் இருப்பது போல மாறிவிடும் மாறிவிடும். இந்த விதி என்பது அனைத்து திசைகளை பார்த்த வீடுகளுக்கும் பொருந்தும். ஆக ஒரு வாஸ்து நிபுணர் என்பவர் சூரியன் இருக்கும்  இடத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  சூரியன் இன்று எத்தனை டிகிரிகள் இருக்கிறார் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு வாஸ்து சொல்லுகிற நபராக இருக்க வேண்டும். ஆகவே மனம் போன போக்கில் இதுதான் கிழக்கு என்று வாசல் வைப்பதோ, இதுதான் வடக்கு வாசல் என்றோ, இதுதான் தெற்கு மேற்கு என்றோ முடிவு செய்து மேற்கண்ட வாசல்கள் வைப்பது மிக மிக தவறானது.

Loading