வாஸ்து போர்ட்டிக்கோ | Portico Vastu | chennaivastu

வாஸ்துவின் ரீதியாக முன்முகப்பு மண்டபங்கள் என்கிற  போர்டிகோ என்கிற ஒரு விஷயம் வீடுகள் சார்ந்த கட்டடங்களில், அலுவலகம் சார்ந்த கட்டடங்களில், தொழிற்சாலை சார்ந்த கட்டடங்களில், எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. எந்த இடமாக இருந்தாலும், அந்தக் கட்டடத்தில் ஒரு தூண் நிறுத்தி சிறந்த அமைப்பில் போர்டிகோ என்கிற விஷயத்தை நிறுத்தும் பொழுது வாஸ்துவின் ரீதியாக தவறு என்று சொல்வேன். மனித வாழ்க்கையில் வீடு என்பது அழகு படுத்துகிற விஷயம் கிடையாது. வாழ்க்கை என்பது அழகாக வாழக் கூடிய விஷயம். இதற்காக பெரிய அளவில் பிரம்மாண்டமான அளவில் போர்டிக்கோ அமைப்பு என்பது என்னைப் பொறுத்த அளவில் தவறு. திண்ணை என்று சொல்லக்கூடிய பால்கனி போர்டிக்கோ என்று சொல்லக்கூடிய அமைப்புகளை எந்த திசையை பார்த்த வீடுகளாக இருந்தாலும் அமைப்பது தவறு. ஒரு கட்டடத்திற்கு மேற்கு அல்லது தென் மேற்கு அல்லது தெற்கு பகுதியில் மேல்தளம் தாழ்ந்த நிலையில் போர்டிகோ அமைப்பது, கீழ்த்தளம் தாழ்ந்த நிலையில் போர்டிகோ அமைப்பை உருவாக்குவது மிக மிக தவறு. இந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் பால்கனி போர்டிகோவை செங்கல்கள் கொண்டு மறைத்துப் காட்டுவது கூட வாஸ்துவின் ரீதியாக தவறு. ஓரளவுக்கு வடக்குப்பார்த்த வீடுகளுக்கும், கிழக்கு பார்த்த வீடுகளுக்கு போர்டிக்கோ வைத்துப் கட்டுகிறார்கள். அங்கு வரலாம் என்று சொன்னாலும் என்னை பொருத்த அளவில் கொஞ்சம் எதிரிடை பலனைத் தான் கொடுக்கும். ஒரு சில இடங்களில் ஒரு இல்லத்தின் வடக்குப் பகுதியில் மூடப்பட்டும் , தெற்குப் பகுதியில் பெரிய அளவில் திறந்தும் பால்கனி போன்று போர்டிகோ  அமைத்து இருப்பார்கள். அது வாஸ்துவின் ரீதியாக தவறு. ஒரு சில மக்கள் போர்ட்டிக்கோ வைக்கிறேன் என்று சொல்லி , வீட்டின் கட்டடத்தை தொடாது தனியாக நான்கு தூண்களை நிறுத்தி வடக்குப் பகுதியில் அல்லது, கிழக்கு பகுதியிலோ அமைத்திருப்பார்கள். அதுவும் என்னைப் பொறுத்த அளவில் தவறு என்றுதான் சொல்லுவேன். அதே அமைப்பை தெற்குப் புறத்திலும் மேற்புறத்திலும் அமைந்தாலும் கூட தவறுதான். ஒரு கட்டிடத்திற்கு போர்ட்டிகோ என்று சொல்லக்கூடிய விஷயம் பொருள்களை வைப்பதற்கும், வீட்டிற்கு வெளியே கொஞ்ச நேரம் ஓய்வு எடுப்பதற்கும் அந்த வீடு சார்ந்த மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும் பயன்படுகிறது.  அப்படிப்பட்ட போர்டிகோ அமைப்பு என்பது ஒரு இல்லத்தில் கிழக்குப் பார்த்த வீடுகளாக இருக்கின்ற பட்சத்தில் கிழக்கு பகுதியை  மூடுவது போல தூண் வைத்து அமைக்க கூடாது.  வடக்கு பார்த்த வீட்டிற்கு போர்ட்டிக்கோ அமைக்கும் பொழுது இந்த விதியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த போர்ட்டிகோ அமைப்பு எல்லாமே இல்லத்தின் நேர் ஒழுங்குக்கு வரவேண்டும். கிழக்குப்பகுதியில் இருக்கின்ற பட்சத்தில் தூண் இல்லாமல் அமைக்க வேண்டும். ஒரு சில இல்லங்களில் கேரள அமைப்பில் போர்டிகோ வைக்கிறேன் என்று சொல்லி வீட்டின் மேற்கூரையை தாண்டும் அமைப்பாக அதாவது உயரத்தில் அமைத்து விடுவார்கள். உதாரணமாக தரை தளத்தில் இருந்து ஒரு இல்லம் 12 அடி உயரம் இருக்கும். ஆனால் இந்த கேரளா மாடல் போர்டிகோ என்பது 14 அடி உயரத்தில் இருக்கும் அப்பொழுது வாஸ்துவின் ரீதியாக குற்றமாக முடிந்துவிடும் .அப்படியே ஒரு கேரள மாடல் போர்டிக்கோ அமைப்பதாக இருந்தாலும், வீட்டின் மேல் தள உயரத்தை தாண்டாமல் அமைப்பது சாலச் சிறந்தது . அப்படி அமைக்கின்ற போர்டிகோ அமைப்பு என்பது வடக்கு சரிவுகள் ஆக இருப்பது சாலச் சிறந்தது. கிழக்கு சரிவு  ஓரளவுக்கு நன்மையை கொடுக்கும் அதற்குப் பிறகு பெரிய அளவில் நன்மையை கொடுக்காது. எக்காரணம் கொண்டும் தெற்குத் சரிவு மேற்கு சரிவுகளும்  முன்முகப்பு மண்டபங்கள் என்கிற போர்டிகோ அமைப்பில் ஏற்படுத்துவது வாஸ்துவின் ரீதியாக தவறு.போர்ட்டிக்கோ அமைப்பதே ஒரு நல்ல வாஸ்து நிபுணர் துணைகொண்டு அமைப்பது நல்லது.

போர்டிகோ என்பது வடக்கு பார்த்த வீடுகளுக்கு  அதிகபட்சம் பொறியாளர்கள் என்ன சொல்கிறார்களோஅந்த அடிகளுக்கு  அமைத்துக்கொள்ளலாம். இல்லை என்றால் அமைக்காமல் இருப்பதே சரியானது. அதேபோல கிழக்குப் பார்த்த மனைகளுக்கு போர்டிகோ என்பது குறைந்தபட்சம் ஆறு யாகவும் அதிகபட்சம் 11 அடிகளும் அமைத்துக்கொள்ளலாம். அந்த வகையில் போர்ட்டிக்கோ அமைத்து தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்யும் பொழுது, மேற்கு பார்த்த வீடுகளுக்கும், தெற்கு பார்த்த வீடு களுக்கு தூண் இல்லாது அமைத்துக் கொள்ளலாம். ஆனால் கண்டிப்பாக தெற்கில் போர்ட்டிக்கோ எவ்வளவு அடிகள்   கொடுத்து இருக்கிறீர்களோ அதே அளவிற்கு வடக்கில் அமைக்க வேண்டும். இதே விதிதான் மேற்கு திசைக்கும், மேற்கு திசையில் மேற்கு பார்த்த வீடுகளுக்கு  குறைந்த பட்சம் ஆறு அடிகள் போர்ட்டிக்கோ கொடுப்பதாக இருந்தாலும், அதே ஆறு அடிகளுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். என்னை பொருத்த அளவில் போர்ட்டிக்கோ சார்ந்த விஷயத்தில் எவ்வளவு குறைந்த அடிகளுக்கு அமைகிறதோ அந்த அளவுக்கு வாஸ்துவின் ரீதியாக பயன் இருக்கும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *