வாஸ்து நாள் இன்று / Vastu Days Today

வாஸ்து நாள் இன்று / Vastu Days Today

மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தற்கால  வாஸ்து சாஸ்திர ஒரு நேர்மை பதிவு..*

*பொதுவாக ஒரு வீடு கட்டும் அமைப்பு மற்றும் அதன் கட்டுமானம் என்பது ஒரு குடும்பத்தின் கணவன், மனைவி மற்றும் குழந்தை சார்ந்த மிகப்பெரிய கனவாகவும் அது அவரவர்களின் வசதி வாய்ப்புகளை பொருத்தும் மற்றும் அன்றாடம் கட்டப்படும் மிக பிரம்மாண்டமான வீடுகளின் முன் தோற்றங்கள் மற்றும் உள்ளே உள்ள அதன் குடியிருக்கும் வசதிகளை எண்ணிப் பார்த்து பல வருடங்களாக தங்களுக்குள்ளே அதனுடைய  பிரமாண்டத்தின் கற்பனைகளாக நினைத்து கோட்டை கட்டி வைத்திருப்பார்கள் என்பது உண்மை.

*இன்றைய நவீன கால அவசர உலகில் ஒரு வீடு கட்ட தேர்வு செய்யும் இடத்தின் அன்றாட விலை ஏற்றம் மற்றும் அந்த வீடு கட்டும் அத்தியாவசிய ஆடம்பர கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம், அதற்கு மேலாக அவ்வப்போது ஏறி வரும் இந்த கட்டுமானத்தின் விலையேற்ற நிலை இவையெல்லாம் ஒரு வீடு கட்ட நினைப்பவர்களின் அன்றாட ஏக்கமாகவும் அது பெரும்பாலும் மிக பலருக்கு மிகப்பெரிய கனவாகவும், சவாலாகவும், அதை கட்ட வேண்டும் என்ற தீராத ஆசை மற்றும் மனதிற்குள் ஒரு பயம் சார்ந்த வருத்தம் இருப்பது உண்டு.

*ஏனெனில் அந்த அளவிற்கு ஒரு வீடு கட்டுவது என்பது  திருமணத்தை விட இன்று அதிக செலவாக அவரவர்கள் தேவைக்கு ஏற்ப ஒரு வீடு கட்டுவது என்பது அவ்வாறு ஏற்பட்டு விடுகின்றது.
முதலில் ஒரு இல்லம் அமைக்க நினைக்கும் போது ஒரு பணம் சார்ந்த நிதி நிலமை கணக்கு போடுவார்கள். ஆனால் கட்டி முடிக்கும்போது அதைவிட கூடுதலாக செலவு ஆகி இருக்கும் .
இதனை பலர் கடன் வாங்கியும் அல்லது சேமிப்பு மற்றும் நகைகளை வைத்தும் அல்லது ஒரு சில சொத்துக்களை விற்றும் வீடுகளை கட்டுவதும் உண்டு.

*அந்த அளவிற்கு ஒரு வீடு கட்டுவது என்பது நாளுக்கு நாள் மிகப்பெரிய தேவையாகவும் அத்தியாவசியாவும் மாறிவிட்ட சூழ்நிலையில் ஒரு சிலர்  சிலவற்றை அலட்சியமாகவும் அது ஒரு பெரிதான விஷயம் இல்லை என்று நினைத்துக் கொள்ளும் சூழ்நிலையும் இருக்கின்றது.*

*அதில் மிக முக்கியமான ஒன்றுதான் ஒரு வீட்டிற்க்கான வாஸ்து என்பதாகும்.*

*நம்மிடம் பணம் இருக்கின்றது. அதனால் வீடு கட்ட என்ன தடை தாமதம் ஏற்பட்டு விடப் போகின்றது. அப்படியே ஒரு தடை தாமதம் ஏற்பட்டாலும் நம்மிடம் உள்ள பணத்தால் அவற்றை சரி செய்து விடலாம் என்று பலர் என்று நினைத்து வீடு கட்டுகின்றார்கள்*

. *அப்படி நினைத்த பல பேர் சிறப்பாக வாஸ்து பூஜை செய்த வீடுகள் இன்று கட்டப்படாமல் பாதியிலேயே நிற்கின்றது. எத்தகைய ஜாதி மதம் இனம் என்ற பாகுபாடு இல்லாமல்… அப்படியே வாஸ்து பூஜை செய்த வீடுகள் பாதியில் நிற்பதற்கான காரணங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் எளிய முறையில் தெளிவாக இங்கே நான் குறிப்பிட்டுள்ளேன் ஒன்றுக்கு இரண்டு தடவை படித்துப் பார்த்தால் என்னுடைய வாஸ்துவின் ஆழ்மன சூட்சுமங்களை அனைவரும் முழுமையாக புரிந்து கொள்ளலாம்.*

*இன்றைய வாஸ்து ஜோதிட கட்டுரையின் மிக முக்கிய நோக்கம் மற்றும் சாராம்சம் என்பது ஒரு வீடு கட்ட வாஸ்து பூஜை போடும் நாட்கள் என்பது தற்கால பஞ்சாங்கம் மற்றும் காலண்டர் உரிய நாட்கள் நேர அளவுகளின் தீமை பலன்களையும் அதன் நன்மை இல்லா தன்மைகளையும் மிக சிரமப்பட்டு தாங்கள் சேர்த்த பணத்தில் ஒரு வீடு கட்டும் போது அது சிறப்பான நேரத்தில் வாஸ்து பூஜை போட வேண்டும் எனும் நல்ல நோக்கத்தில் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.*

*மேலும் இனிவரும் காலங்களில் வாஸ்து பூஜை என்பது நாட்களை உரிய முறையில் முறைப்படுத்த வேண்டும் அந்த நாட்கள் என்பது எட்டு நாட்கள் என்பதை விடுத்து எட்டு மாதங்களின் நல்ல வளர்பிறை நாட்களை தேர்வு செய்து இனி ஒரு புதிய வாஸ்து விதிமுறை வாஸ்து பூஜை அட்டவணையை உருவாக்க வேண்டும் தற்கால வாஸ்து ஜோதிட பண்டிதர்கள் அதற்கான முயற்சியை செய்ய வேண்டும் எனும் நல்ல நோக்கத்தில் இங்கு நான் இதனை குறிப்பிடுகின்றேன்.*

*இதனை இனிவரும் காலங்களில் வாஸ்து பூஜையின் பயங்களை சந்தேகங்களை மக்களிடையே போக்க வேண்டும். வாஸ்து பூஜை முக்கியத்துவத்தை உணர வேண்டும் எனும் வாஸ்து பகவானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற வேண்டும் எனும் தீராத தாகத்தில் நல்ல பொறுப்புணர்வில் தான் இங்கே மிக ஒரு நீண்ட பதிவாக வெளிப்படுத்துகின்றேன்.*

*தயவுசெய்து அனைவரும் தக்க ஆதரவும் ஒத்துழைப்பு தர கேட்டுக் கொள்கின்றேன்.*

*ஒரு சிலர் உண்மையிலேயே வாஸ்துவின் அருமை பெருமைகளை உணர்ந்து ஒரு மனையை தேர்வு செய்வது என்பது ஒரு மனைவியை அல்லது ஒரு பெண் தன் கணவனை தேர்வு செய்வது போல் ஆரம்பத்திலேயே அதனை பலரும் முறையாக செய்து விடுகின்றார்கள்.*

*மேலும் தங்களது சொந்த அனுபவத்தாலும் அதற்கென்று உள்ள கட்டிட பொறியாளர் மற்றும் ஆர்க்கிடெக்சர், கட்டிட மேஸ்திரிகள் மற்றும் ஒரு சிறந்த வாஸ்து ஜோதிடர் மூலம் மிக சிறப்பாக வாஸ்து மூலம் வீடுகளை கட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.*

*இன்று வாஸ்து நாள். ஒரு மிகப்பெரிய கொடுமையான விஷயம் என்பது நான் காலம் காலமாக பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கும் வாஸ்து நாளின் கொடுமைகள் ஒவ்வொரு மாதமும் அது நடக்கும் போது என் மனதில் தீராத கவலையும் அதன் சார்ந்த மக்களின் பொது நலன் கருதி இதனை வெளியிடுகின்றேன்.*

*இதனை நான் மேம்போக்காக மிக சாதாரணமாக  நான் சொல்லவில்லை.*

*ஆம்!.. காலம் காலமாக நம் பொது மக்களிடம் சில சாஸ்திர பண்டிகை பண்டிதர்கள் தங்களுடைய சுய லாபத்திற்காகவும் மக்களிடையே எத்தகைய சாஸ்திரத்திற்கு விரோத மாற்றங்கள் வந்து விடக்கூடாது என்ற சுயநலம் மக்களின் பேராசைகள் அறியாமையை மனதில் வைத்து அவர்களுடைய ஒரு பய அச்ச உணர்வை காலம் காலமாக ஊட்டி வந்திருக்கின்றார்கள்  என்பது மிக மிக வேதனையான கொடுமையான விஷயம் இதில் படிக்காத பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்களுக்கு இதன் பயமும் பதட்டமும் இன்னமும் போகவில்லை என்பதும் நிதர்சன உண்மையாக இருக்கின்றது*.

*அனைத்து விதமான காது குத்து திருமண வளைகாப்பு சுப விழாக்கள் மாற்றம் வீடு குடி போகும் நிகழ்ச்சிக்கு அனைத்து வகையான முக்கியத்துவம் தரும் சாஸ்திர பண்டிதர்கள் வாஸ்து பூஜைக்கு என்று உரிய கீல்நோக்கு மற்றும் சுபநாட்கள் வளர்பிறை தேய்பிறை திதிகள் மற்றும் உரிய நேத்திரன் ஜீவன் நாட்களை கண்டறிந்து இனி ஒரு புதிய அந்தந்த வருட பஞ்சாங்க பெருமைகளை மேம்படுத்த வேண்டும்.*

*மேலும் ஜோதிட பெரியோர்கள் இந்த உண்மைகள் நிச்சயம் தெரியாமல் இருக்காது. இதை ஏன் தெரியப்படுத்த வேண்டும் தேவையில்லாமல் இதனை வெளியில் சொல்லி வம்பில் மாட்டிக் கொண்டு நமக்கு வரும் வருமானத்தையும் இழக்க வேண்டும் என்று நினைக்கும் சுய நலப் போக்கை தயவு செய்து சிந்தித்து பஞ்சாங்கத்தில் சில நல்ல விஷயங்களை சேர்த்து தேவையற்ற விஷயங்களை அகற்றி  வாஸ்துவின் விழிப்புணர்வை அதன் அறியாமையை அகற்றி நம் பெரியோர்கள் அடுத்த இளைய தலைமுறைக்கு முறையாக  ஆவண படுத்த வேண்டுகின்றேன்.*

*ஆகவே அறிவார்ந்த ஜோதிட பெருமக்களே!.. ஆன்மிக சிந்தனையாளர்களே!.. தயவுசெய்து விழித்துக் கொள்ளுங்கள் .*

*அதன் கடந்த கால சாஸ்திர மோசடி களின் இருட்டை விட்டு உண்மையான வாஸ்துவின் வெளிச்சத்திற்கு வாருங்கள் என்று நான் தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கின்றேன் .*

*இதனை சொல்வதால் இவர் பாரம்பரிய சம்பிரதாய பஞ்சாங்க வாஸ்து மனையடி சாஸ்திரத்திற்கு எதிராக இருக்கின்றார் என்று நினைக்கத் தோன்றும்.*

*அப்படி அவ்வாறு சிலர் நினைத்தால் என்னுடைய வாஸ்து பதிவை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்னுடைய வாஸ்துவின் ஆழங்களை சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்று நான் எதுவும் பேசாமல்  கடந்து விடுகின்றேன். இதை படிக்கும்  நல்ல ஆன்மீக* *பொதுமக்களே இதற்கான உரிய மதிப்பெண்களை எனக்கு கொடுக்க வேண்டுகின்றேன்.*

*இன்றும் ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.*

*வாஸ்து என்றால் வாஸ்து பூஜை போடுவதோடு அந்த வேலை முடிந்துவிட்டது.*

*மேலும் அதற்கான பரிகாரம் மற்றும் வாஸ்து பூஜைக்கான இறுதி முற்றுப்புள்ளி புள்ளியாக ஒருவர் வீடு குடி போகும் நாளில் ஒரு சிறந்த கணபதி யோகம் நடத்திவிட்டால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் சிலர் நினைத்துக் கொள்கின்றார்கள்.*

*இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு தற்காலத்தின் வாஸ்து பூஜையின் சில தவறான மாறுபட்ட விஷயங்களை சொல்வதற்கு எனக்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.*

*பொதுவாக வாஸ்து பகவான் என்பவர் ஒரு வருடத்தின் 8 நாளில் கண் விழித்து அவர் தன்னுடைய அன்றாட கடமைகளை செய்துவிட்டு அவர் சாப்பிட்டுவிட்டு தாம்பூலம் தரிக்கும் பட்சத்தில் அவர் இன்பமான சூழ்நிலையில் நம் பூமி என்னும் அந்த வயிற்றை கிழித்து வாஸ்து பூஜை செய்யும் போது மிக சிறப்பான பலன்கள் ஏற்பட்டு அந்த வீட்டில் இருப்பவர்கள் மிக மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று சொல்லப்படுகின்றது .அதையெல்லாம் நான் மறுப்பதற்கு இல்லை.*

*அவ்வாறு இருந்தால்தான் இன்னும் சில காலங்கள் ஆவது வாஸ்து பூஜை பற்றிய அத்தகைய பயத்தால் மக்கள் வாஸ்துவின் ஒரு மரியாதை, மாண்பை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது. அதனை மேம்படுத்தும் விதமாகத்தான் இங்கே நான் ஒரு சில உண்மை தன்மைகளை குறிப்பிட விரும்புகின்றேன்.*

*இங்கே நான் குறிப்பிட விரும்புவது என்னவெனில் எனக்கு இதனை சொல்வதால் அல்லது இதற்கென்று நேரம் ஒதுக்கி நான் பேசுவதால் எனக்கு என்ன பயன்கள் மற்றும் இது போல் நான் பேசினால் எனக்கு வாஸ்து ரீதியாக எதிர்ப்புகள் வரும் மற்றும் ஒரு மனையை தேர்வு செய்து வீடு   கட்டுபவர்கள் என்னை எப்படி கூப்பிடுவார்கள் எனும் அடிப்படை தன்மைகளை புரிந்து கொள்ளாமல் நான் இங்கே குறிப்பிடவில்லை.*

*இங்கே சில வாஸ்து வல்லுநர்கள் கட்டிட பொறியாளர்கள் மற்றும் கட்டிட மேஸ்திரிகள் மற்றும்* *கட்டிட வாஸ்து பூஜை செய்யும் பண்டிதர்கள்* *தயவுசெய்து உங்கள்* *மனசாட்சியை* *கேட்டுக் கொள்ளுங்கள்.*

*நான் இங்கே பஞ்சாங்கரீதியாக தான் பேசுகின்றேன். தனியாக நான் எதையும் குறிப்பிடவில்லை.*

*ஒரு பஞ்சாங்கம் என்பது எதைக் குறிக்கின்றது ஒரு மனித வாழ்வில் ஏற்படும் பல  நல்ல விஷயங்களையும், அது ஏற்படாமல் தடுக்கும் தீய விஷயங்களில் எச்சரிக்கை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்பதை யாரும் மறுக்க இயலுமா?..*

*அந்த வகையில் தான் ஒரு பஞ்சாங்கரீதியாக நான் எவ்வித மாறுபட்ட தன்மை இல்லாத வகையில் இங்கே வாஸ்து பற்றிய முக்கியத்துவத்தையும் அதன் எதிர்கால நல்ல தலைமுறைகள் சிறப்பாக வாழ்வதற்கும் தேவையற்ற சில கேள்விகள், சந்தேகம் எனும் ஐயம்  மக்களிடம் இருக்கக் கூடாது.. மற்றும் அதற்கான காரண காரியங்களில் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இங்கே நான் களம் இறங்கி இருக்கின்றேன்.*

*ஒரு திருமணத்திற்கு உள்ள நேரம் என்பது அமிர்தாதி யோகம் சித்தயோகம் என்று இல்லாத ஒரு திருமணத்தை ஒரு வைதீக பிராமண பண்டிதர் நடத்துவாரா?..*

*ஒரு குடி போகும் நாளில் அது போன்ற காரியத்தையும் அதற்கு ஏற்ப சில மாறுபட்ட சுபம் இல்லாத நாட்களை நேரங்களை அவர் குறித்து கொடுப்பாரா?.. என்பதையும் இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன்.*

*ஒரு மிக முக்கியமான வாஸ்து சூட்சுமத்தை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.*

*ஒரு வீட்டிற்க்கான *அதன்  மனைக்கான உள்ள வீடு *கட்டுவதற்கான*
*மற்றும்*  *அதன்* *வாசக்கால் வைப்பதற்கான நல்ல சுப முகூர்த்த நாட்கள், அதன் வீட்டின் ரூப் கான்கிரீட்  போடுதல் எனும் மிக முக்கியமான அந்த வீட்டின் தலைமகனின் தலைவரின்  தலையின் மேல்* *உள்ள கபாலம் எனும் மண்டை ஓட்டில் உள்ள மூளையை பாதுகாப்பது போல் அந்த வீட்டில் உள்ளோரை* *பாதுகாக்கும் ஒரு மிகப்பெரிய வாஸ்து சூட்சுமங்கள் அதன் பேரில் நடக்கும்  மிகப் பெரிய சடங்கு* *அன்றைய நாளில் தொழிலாளர்களுக்கான அசைவ உணவு பரிகாரங்கள் என்பது போன்ற வாஸ்துவின் முக்கியத்துவம் மிக மகத்தானது .*

*அது பண்டைய காலத்தில் மிகப்பெரிய மனித நல்வாழ்வியல் சூட்சுமங்களை ஒரு தீய சக்திகளின் எதிர்ப்பு தன்மைகளை அதனை திருப்திப்படுத்தும் விதமாக உள்ளடக்கியதாக இருந்து வந்துள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.*

*அத்தகைய நுணுக்கமான வாஸ்துவின் சூட்சுமங்களை பேசும் நான் இந்த ஒரு விஷயங்களை நான் ஏன் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போகின்றேன்… என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் என் அன்பானவர்களே!..*

*மீண்டும் கடுமையாக, வலிமையாக நான் நம் சாஸ்திர பஞ்சாங்கம் வழியாக ஒரு சில உண்மைகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.*

*இன்று கேட்டை நட்சத்திரம்… ஆனால் பஞ்சாங்கத்தில் இன்றைய நட்சத்திரம் என்பது ஒரு வீடு கட்டும் குடும்பத்தில் உள்ள சேஷ்ட புத்திரி அந்த வீட்டின் மகளுக்கு தோஷம் என்று குறிப்பிடப்படுகின்றது.*

*அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம் ஒரு வீடு கட்டும் குடும்பத்தில் உள்ள தலைவனின் மகளுக்கு தோஷம் என்று ஒரு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் அந்த குடும்பத்தில் எதிர்காலத்தில் ஏற்படும் திருமண சுப காரியங்கள் அந்த பெண்ணுக்கு தோஷம் ஏற்படும் என்று மறைமுகமாக சொல்லப்படுவதை நம் சாஸ்திர பண்டிதர்கள் ஏன் மறைத்து வாஸ்து பூஜை செய்கின்றார்கள் என்ற உண்மையை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு என்னிடம் தக்க பஞ்சாங்க ஆதாரம் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.*

*இதை எல்லாம் என் வாஸ்து சிற்றறிவுக்கும் மேலான சாஸ்திர பண்டிதர்கள் தயவு செய்து உரிய ஆய்வுகள் செய்ய வேண்டும். தக்க தீர்வுகள் நல்ல முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.*

*பஞ்சாங்கம் என்பது என்ன பஞ்ச அவயங்களை கொண்ட ஒரு மனிதன் நல்வாழ்வின் சுக துக்கங்களை வெளிப்படுத்தும் ஒரு அதி சூட்சும நுட்பமாகும்.*

*அத்தகைய பஞ்சாங்கங்களில் கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள், மேல்நோக்கு நாள் என்று குறிப்பிடப்படுகின்றது.*

*அதற்கான காரணம் காரியம் என்ன?..*

*அதாவது நாம் பிறந்த இந்த பூமியின் மண்ணில் உள்ள நம் முன்னோர்களின் தோஷங்கள் பாவம் புண்ணியங்கள் இந்த மண்ணிற்குள் தான் செலுத்தப்படுகின்றது. அதன் வழியாகத்தான் நமக்கு எல்லா விதமான நன்மைகள் தீமைகள் நடைபெறுகின்றது.*

*அந்த வகையில் ஒரு மனையில் புதிதாக வீடு கட்டுவதற்கு உரிய நேத்திரம் மற்றும் ஜீவன் உள்ள நாட்களில் மற்றும் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமை  அல்லாத பாவர் நாட்களை தவிர்த்து நாட்களான திங்கள், புதன், வியாழன், வெள்ளி எனும் நாட்களில் முதலாக வாஸ்து பூஜை எனும் பூமி பூஜை செய்வது உரிய கீழ் நோக்கு  நாளிலும் முதல் பரிந்துரையாக வளர்பிறை சிறந்த திதியிலும் அல்லது தேய்பிறை சிறந்த திதியிலும் இன்னும் பல்வேறு வகையான பஞ்சாங்க சூட்சும விஷயங்களை கொண்டு தான் வாஸ்து பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அது  தான் அதற்குரிய நியாயம், நீதி மற்றும் வாஸ்து பகவானுக்கு நாம் செய்யும் நன்றி கடன் என்பதையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.*

*நேத்திரம் ஜீவன் என்பது அதன் முறையே நேத்திரம் கண்கள் ஆகும் இரு கண்கள் மற்றும் ஒரு கண்கள் அல்லது கண்கள் இல்லாத நாட்கள் 2,1,0 என்று இருக்கும். ஜீவன் என்பது 1,1/2 அரை அல்லது பூஜ்ஜியம் எனும் 0 இருக்கும்.*
.

*இவையெல்லாம் சரிபார்த்து தான் ஒரு வாஸ்து பூஜையை போடும் பட்சத்தில் அந்த வீடு சிறப்பாக கட்டப்பட்டு குடியரினாலும் அது இப்போது தெரியாது ஒரு வீடு கட்டுவோரின் இறுதி காலத்திலும் அல்லது அவருக்கு அடுத்த காலகட்டத்தில் அந்த வீடு குடியிருக்க தகுதியற்றது மற்றும் ஏலம் தேவையற்ற முன்னோர் தோஷங்கள் வழியாக அது வெளிப்படுகின்றது.*

*அப்போது அதனை தெரியப்படுத்தும் விதமாக முன்பே நாம் வாஸ்து பூஜையின் போது இதனை சரி செய்து கொண்டால் அதற்குப் பிறகு வரும் விஷயங்கள் மிக சிறப்பாக நடக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சமாகும். அடுத்த தலைமுறைகளுக்கான அந்த விஷயம் தான் இந்த நேத்திர, ஜீவன் எனும் வாஸ்து அதி சூட்சும ரகசியங்கள் ஆகும்.*

*நான் நம் பண்டைய கால வாஸ்து, ஜோதிட ஆன்மீக சாஸ்திரத்துக்கு முழுமையாக கட்டுப்பட்டவன்.*

*ஒரு சில வாஸ்து வல்லுநர் மற்றும் அதற்குரிய பிராமண பண்டிதர்களுக்கு தெரிந்தாலும் நாம் ஏன் இதையெல்லாம் கிளற வேண்டும்.. இது நமக்கு தேவையில்லாத விஷயம் இதை சொல்வதால் நமக்கு வருமானம் வந்து விடப் போகின்றதா.. எனும் அவர்களின் சுயநலம் மக்களின் பேராசை, அறியாமையை அப்படியே வைத்துக் கொண்டு அவர்களை அதன் உண்மை சூட்சுமங்களை  தெரிந்து கொள்ள விடாமல் காசு பணம் பார்க்கும் ஒரு சிலர் இருக்கிற இடம் தெரியாம போய் விடுவோம்.. என்ற ரீதியில் என்னால் இருக்க இயலவில்லை என்ற இந்த வைகாசி வாஸ்து பிரதமை எனும் அசுப மறைந்த நன்னாளில்  அந்த முருகப்பெருமானின் உரிய மனை காரகன் செவ்வாய் கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்ட புதன் சுக்கிரன் எனும் கிரகங்களின் கட்டிட மனை வீட்டு உரிமைகளுக்கும்   வாஸ்து சாஸ்திரத்தின் எதிர்கால பெருமைகளை அதன் அன்றாட வாழ்வியல் வாஸ்து மோசடிகள் என்பது இன்று பலர் கைப்பாவையாக மாறிக் கொண்ட உலகில்  ஒரு சிலர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட விஷயங்களை என்றேனும் ஒரு நாள் இந்த உலகத்து மூலையில் என்னுடைய சாதாரண ஒரு சொல் மிக பிரமாண்டமான நல்ல மாற்றங்களை உண்டு செய்யும் எனும் நம்பிக்கையில் இந்த நவகிரக அதிபதி சூரியன் உள்ள நாளில் ஒரு ஆத்ம விதையை தூவ ஒரு சிறு முயற்சியை செய்கின்றேன் என்ற ஆதங்கத்தில் ஆழ்மன கோபத்தில் இவற்றையெல்லாம் குறிப்பிட விரும்புகின்றேன். என் வேலைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில்.*

*ஒரு சிலர் சொல்கிறார்கள் வாஸ்து பகவானுக்கு எவ்வித தோஷம் இல்லை. ராகு காலம், எமகண்டம் மற்றும் பஞ்சாங்கத்தில் உள்ள எந்த தோஷமும் இல்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற சொல்லாடல் பழமொழி வாஸ்து ஜோதிட சாஸ்திரத்திற்கு பொருந்தாதா?.. அதை சிறந்த ஆன்மீக பெருமக்கள் மற்றும் ஜோதிட குருமார்கள்  தான் இதனை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.*

*அது மட்டுமல்ல*
*அதன் மனையை குறிப்பிட்ட இடத்தில் அந்த மண்ணை எடுத்துவிட்டு* *உரிய வாஸ்து பூஜைகள் செய்யும் பட்சத்தில் வானில் பருந்து வட்டமிடும் எனும் அதிசயத்தை என் வாழ்வில் கண்டுள்ளேன்.*

*இதற்குப் பிறகு இதை மண்ணிற்கு மேல்* *அன்றாடம் நம் வாழ்வில் முறைகளை அமைத்துக் கொண்டு* *மிகச் சிறப்பாக நடமாடும் விதங்களை தெரியப்படுத்துகின்றது.*

*அதுதான் ஒரு மனிதனின் அந்த குடும்பம் அதன் அடுத்த தலைமுறை ஆண், பெண் வம்சம் சிறப்பாக தழைத்து அன்றாடம் இந்த பூமி என்னும் சமபரப்பில் தன் வாழ்வியலை மிக சிறப்பாக அமைத்துக் கொள்வதற்காக நிலைக்கால் பூஜை மற்றும் கான்கிரீட்  ரூப் பூஜை போன்றவை ஒரு சமநோக்கு நாளில் உரிய சுப நாளில் தான் அதற்குரிய நட்சத்திரங்களை தேர்வு செய்து நடத்துவது மிக உத்தமம் ஆகும்.*

*அடுத்ததாக ஒரு வீடு குடி போகும் நாளில் உள்ள சூட்சுமத்தின் அந்த குடும்பத்தின் உள்ள கணவன் மனைவி மற்றும் பிள்ளைகளின் சந்ததி வளர்ச்சிக்காக அடுத்த தலைமுறையின் உயர்வு முன்னேற்றத்திற்காக மேல்நோக்கு நாளில் தான் அதன் வீடு குடி போகும் பால் காய்ச்சும் சூட்சுமம் அதில் அடங்கியுள்ளது அதுவும் மிக உத்தமம் ஆகும் என்பதை அனைவருக்கும் இந்த வாஸ்து மரணயோகம் எனும் அசுப நாளில் தெரிவிப்பதற்கு மிகவும் வருத்தப்படுகின்றேன்.*

*இன்றைய நாளில் ஒரு சில வாஸ்து பூஜை செய்வதற்கான வாய்ப்பு வந்தது.என் மனசாட்சி இடம் கொடுக்காமல் இன்றைய நாளில் தாங்கள் வாஸ்து பூஜை செய்ய வேண்டாம்*. *இருந்தாலும் அதன் வீட்டு வாஸ்து பிளானை சரி செய்து அவர்களுக்கு கொடுப்பதோடு சரி.



நான் கடைசியில் தெரிவிக்க விரும்புவது என்னவெனில் தயவுசெய்து ஒரு வீடு கட்டுவதற்கு முன் ஒரு சிறந்த வாஸ்து வல்லுநர் மூலம் அதன் மனையை  தேர்வு செய்வது என்பது தான்  ஒரு வாஸ்து மூலம் வீடு கட்டி மற்றும் அந்த வீட்டில்  கணபதி பூஜை செய்து குடியேறுவதை  விட   பல மடங்கு நன்மைகள், முன்னேற்றங்கள் மேலானது என்பதை என் வாஸ்து அனுபவங்கள் மூலமாக தெரிவித்தும் அத்தகைய ஒரு வாஸ்து நாளில் பூஜை போட்டு இன்று வரை எவ்வளவோ பாதையில் கட்ட முடியாமல் நின்று போன கட்டிடங்களை திரும்ப அதன் மனை வழியாக வாஸ்துவை சரி செய்து அந்த வீட்டை மீண்டும் கட்டி குடியேறி அந்த வீடுகளில்  மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள் மற்றும் நான் கடந்த காலங்களில் காலண்டர் மற்றும் பஞ்சாங்கங்களில் குறிப்பிட்ட வாஸ்து பூஜை நாட்களை தவிர்த்து வேறு ஒரு  நல்ல சுபநாளில் வாஸ்து பூஜை செய்து மிக குறுகிய காலங்களில் வீடு குடியேறி மிக மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள் .

Vastu days வாஸ்து நாள் இன்று

Loading