ராசியில் நட்சத்திர நிலைகள்

ராசிகளில் நட்சத்திர நிலைபற்றி தெரிந்து கொள்வோம். மேஷம் முதல் மீனம் வரை இருக்கக்கூடிய பன்னிரண்டு ராசிகளில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் அடக்கம். அந்தவகையில் ஒவ்வொரு ராசியிலும் எத்தனை பாதங்கள் கணக்கில் இருக்கின்றன என்பதனை தெரிந்து கொள்வோம். ஒரு ராசியில் மொத்தம் ஒன்பது பாதங்கள்  உள்ளது.ஒரு நட்சத்திரத்தில் 4 பாதங்கள்உள்ளது. ஆக ஒவ்வொரு ராசிகளில் நட்சத்திரத்தின் நிலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதன் படத்தைப்பார்த்து அறிந்து கொள்வோம்.

முதல் ராசியான மேஷ ராசியில் அஸ்வினி மற்றும் பரணி முழு நட்சத்திரங்கள் உள்ளது. கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷ ராசியில் இருக்கின்றது. அடுத்த ராசியான ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரத்தில் 3 பாதங்களும், ரோகிணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும், மீதியுள்ள மிருகசீரிஷ நட்சத்திரத்தில் முதல் மற்றும் இரண்டு பாதங்களும் இருக்கின்றன. அடுத்த ராசியான மிதுனத்தில் மிருகசீரிஷத்தில் , மூன்று மற்றும் நான்காம் பாதமும், திருவாதிரையின் 4 பாதங்களும், புனர்பூசத்தில் முதல்  மூன்று பாதங்களும் இருக்கின்றன, அடுத்த ராசியான கடக ராசியில் புனர்பூசம் 4ஆம் பாதம், பூச நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும், ஆயில்ய நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் இருக்கின்றன.

அடுத்த ராசியாக இருக்கக்கூடிய சிம்ம ராசியில் மகம்  4 பாதங்களும், பூரம் 4 பாதங்களும், உத்திரம் 1ஆம் பாதம் இருக்கின்றது. அடுத்த ராசியான கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் இருக்கின்ற 2 3 4 பாதங்களும் இருக்கின்றது. அஸ்த நட்சத்திரத்தில் 4 பாதங்களும்,சித்திரை நட்சத்திரத்தின் இரண்டு பாதங்களும் இருக்கின்றன. அடுத்த ராசியாக இருக்கக்கூடிய துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் மூன்றாம் நான்காம் பாதம், சுவாதி நட்சத்திரத்தில் 4 பாதங்களும் , விசாக நட்சத்திரத்தின் முதல் இரண்டு மூன்று பாதங்களும் இருக்கின்றன. அடுத்த ராசியாக இருக்கக்கூடிய விருச்சிக ராசியில், விசாக நட்சத்திரத்தின் நான்காம் பாதமும், அனுஷம் நட்சத்திரத்தில் 4 பாதங்களும், கேட்டை நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் இருக்கின்றன.

அடுத்த ராசியான தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும், பூராடம் நட்சத்திரத்தில் நான்கு பாதங்களும், உத்திராடம் நட்சத்திரத்தில் முதல் பாதம் இருக்கின்றது. அடுத்த ராசியான மகர ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் 2 3 4 பாதங்களும், திருவோண நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும், அவிட்ட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களும்
இருக்கின்றன. அடுத்த ராசியான கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தின் 3 4 ம் பாதங்கள், சதய நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும், பூரட்டாதி நட்சத்திரத்தில் முதல் 3 பாதங்களும் இருக்கின்றன. அடுத்த ராசியான மீன ராசியான கடைசி ராசியில், பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதமும், உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும், ரேவதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் இருக்கின்றன. இதன் பட்டியலை கீழே படமாக கொடுத்துள்ளேன். நன்றி வணக்கம்.

Loading