யார் எந்த மரங்கள் வளர்க்க வேண்டும்?

ஒரு சில மக்கள் ஒரு சில மரங்களை வளர்க்கும் பொழுது நன்மையும் கொடுக்கும். தீமையும் கொடுக்கும். அந்த வகையில் ஒருவரின் நட்சத்திரத்திற்கு பொருத்தமான மரங்களை வளர்ப்பது சாலச்சிறந்தது. அந்த வகையில் ஒருவரின் நட்சத்திரமான அவரின் நட்சத்திரத்திற்கு இரண்டாம், நான்காம் நட்சத்திரம்,மற்றும் ஆறாம், மற்றும் 8, 9 நட்சத்திரங்கள் சார்ந்த மரங்களை வளர்க்கும் பொழுது நன்மையை கொடுக்கும். அதனை தவிர்த்து மூன்றாம், ஐந்தாம், ஏழாம் நட்சத்திரங்கள் சார்ந்த மரங்களை வளர்க்கும் பொழுது தீமையைக் கொடுக்கும். இதனை தாரா பலன் நட்சத்திரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நன்மையை கொடுக்கிற நட்சத்திரங்களாக மேற்கூறிய நட்சத்திரங்களும் விளங்கும். அந்த வகையில் ஒரு சுபகாரியம், ஒரு நல்ல நிகழ்வு போன்ற நிகழ்வுகளை கூட, தனது நட்சத்திரத்திலிருந்து இரண்டாம் , நான்காம், ஆறாம் மற்றும், 8,9 நட்சத்திரங்கள் சார்ந்த நாட்களில் செய்து கொள்ளலாம்.

அஸ்வினி-எட்டி மரம்,

பரணி-நெல்லி மரம்,

கிருத்திகை-அத்தி மரம்,

ரோகிணி-நாவல் மரம்,

மிருகசீரிஷம்-கருங்காலி மரம்,

திருவாதிரை-செங்கருங்காலி / செங்காலி மரம்,

புனர்பூசம்-மூங்கில் மரம்,

பூசம்-அரச மரம்,

ஆயில்யம்-புன்னை மரம்,

மகம்-ஆலமரம்,

பூரம்-புரசு மரம்(புரசை) / பலா,

உத்திரம்-அலரி எனும் அரளி.,

அஸ்தம்-வேல மரம்,

சித்திரை-வில்வ மரம்.,

சுவாதி-மருத மரம்,

விசாகம்-விளாமரம்,

அனுஷம்-மகிழமரம்,

கேட்டை-பிராய் / பராய் மரம்.

மூலம்-மராமரம்,

பூராடம்-வஞ்சி மரம்,

உத்திராடம்-பலா மரம்,

திருவோணம்-எருக்கு மரம்,

அவிட்டம்-வன்னி மரம்,

சதயம்-கடம்பு மரம்,

பூரட்டாதி-தேற்றா மரம்.,

உத்திரட்டாதி-வேப்ப மரம்,

ரேவதி-இலுப்பை மரம். மரங்கள் வளர்க்க வாஸ்து ஜோதிடம்,வீடுகளில் மரம் வளர்ப்பு பற்றிய வாஸ்து,வீட்டில் வளர்க்கும் வாஸ்து செடிகள்,வாஸ்து முறைப்படி வீட்டில் வளர்க்க ஏற்ற மரம்,வீட்டில் வளர்க்கக்கூடாத சில தாவரங்கள்,

Loading