மேற்கு திசை வாஸ்து குற்ற விபத்து | இன்று காலண்டர்

இன்று
#தமிழ்_காலண்டர்.

இன்றைய நாள்காட்டி 2.5.2022 சுபக்கிருது சித்திரை மாதம்
19ந் தேதி .திங்கட்கிழமை.

விடியற்காலை 3.27  வரை பிரதமை திதி  பிறகு    வ.துதியை திதி.  இன்று இரவு 9.56 வரை பரணி நட்சத்திரம். பிறகு கிருத்திகை நட்சத்திரம்.

இன்றைய
ராகுநேரம்:  7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று   யோகநாள் குறைவு.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 9 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.51.
___________________

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

    விபத்து சார்ந்த வாஸ்து பதிவுகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஒவ்வொரு திசையாக நான் குறிப்பிட்டு வருகிறேன். இன்றைய பதிவில் மேற்கு திசை குற்றங்கள் விபத்தை எந்த வகையில் கொடுக்கும் என்பதை தெரிந்துகொள்வோம். மேற்கு பகுதியில் கிழக்கு விட பள்ளமாக இருக்கும் பொழுது விபத்தை கொடுக்கும். மேற்கு பகுதி கிழக்கு விட அதிக இடங்களாக இருக்கும் பொழுது விபத்தைக் கொடுக்கும். மேற்குப் பகுதியில் கால்வாய்கள், ஓடைகள், கழிவு நீர் செல்லும் பாதை மிகவும் ஆழமாக இருக்கும் பொழுது, இல்லத்தை ஒட்டிய அமைப்பில் இருக்கும் பொழுது விபத்தை கொடுக்கும் . மேற்குப் பகுதிகளில் சாலைகள் இருந்து, கிழக்கு பகுதியில் சுற்றுச் சுவருக்கு அருகில் வீடுகள் இருக்கும் பொழுதும் விபத்தை கொடுக்கும். மேற்கு பகுதியில் தெருவுக்கு வளர்ந்த வீடுகள் இருந்தால் விபத்தை கொடுக்கும். மேற்குப் பகுதியில் கழிவு நீர் தொட்டிகள் இருந்தாலும் விபத்து கொடுக்கும். தண்ணீர் தொட்டிகள் இருந்தாலும் விபத்து கொடுக்கும். மேற்கு பகுதியில் கட்டடங்கள் கட்டமைப்பில் குறுகி அல்லது விரிந்த அமைப்பில் இருந்தாலும் அல்லது, வளர்ந்த அமைப்பில் இருந்தாலும் விபத்தை கொடுக்கும். மேற்குப் பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாமல் பக்கத்து வீடு தண்ணீர் தொட்டி எல்லையில் இருந்தாலும் விபத்தை கொடுக்கும். மேற்கூறிய வாஸ்து சார்ந்த குற்றங்கள் என்பது பெரிய அளவில் பேசும் . இந்த இடத்தில் வாஸ்து தவறுகள் இருந்தால் போர்க்கால அடிப்படையில் சரி செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை இந்த இல்லத்தின் ஆண்கள் வெளிநாட்டில் இருக்கும் பொழுது அவர்கள் தப்பித்து சென்று விட்டார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எது எப்படி இருந்தாலும் உடனடியாக வாஸ்து ரீதியாக சரி செய்து கொள்வது நல்லது.

Loading