தினசரி காலண்டர் இன்று கடைகள் வாஸ்து

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

23.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.47.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 23.6.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
9ந் தேதி புந்திவாரம். இரவு 9.44 வரை தே.தசமி திதி.  பிறகு தே.ஏகாதசி திதி. நாள் முழுவதும்  அசுவினி நட்சத்திரம்.

ராகுநேரம்:1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

கடைகள் கொடவுன், கிட்டங்கிகள் போன்ற இடங்களில் வியாபார ஸ்தலம் மற்றும் விற்பனை செய்யும் இடம் என்பது இணைந்து தான் இருக்கும் . அப்பொழுது எந்த இடத்தில் அலுவலகம் வர வேண்டும் என்கிற விதி மிக மிக முக்கியம். அந்த வகையில் கிழக்கு பார்த்த கடைகளுக்கு தென்கிழக்கு மூலையில் அமைத்துக் கொள்ளலாம். தென்மேற்கில் தான் வரவேண்டும் என்று சொல்வார்கள் அப்படி அமைக்க வேண்டிய அவசியம் தேவை கிடையாது. ஆனால் தென்மேற்கில் ஒரு சில மாற்றங்களை செய்யும் பொழுது அந்த இடமும் சரிசெய்யப்பட்டு வாஸ்து  நிலைக்கு வந்துவிடுகிறது. தெற்கு பார்த்த கடைகளுக்கு  கிழக்கு தென்கிழக்கு பகுதியில் தாராளமாக வியாபாரம் சார்ந்த மக்கள் உட்கார்ந்து வியாபாரம் செய்யலாம். அதே சமயம் வடக்கு பார்த்த கடைகளுக்கு வடமேற்கு மூலையில் அமர்ந்து வியாபாரம் செய்யலாம். அதே மேற்கு பார்த்த கடைகளுக்கு வடமேற்கு வடக்கு பகுதியில் அமர்ந்து வியாபாரம் செய்யலாம். இந்த விதிகள் என்பது, ஒரு வியாபாரம் இடத்தில் உட்கார்ந்து வியாபாரம் பேசுகிற, பணம் வாங்கி வைக்கிற இடங்களில் என்பது  முக்கியம்.ஒரு சில இடங்களில் மேற்கு பார்த்த, தெற்கு பார்த்த, கிழக்கு பார்த்த, வடக்கு பார்த்த கடைகளில் தென்மேற்கு பகுதியில் அமர்ந்து வியாபாரம் செய்பவர்கள் அந்த இடத்தில்தான் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது, முதலாளி அல்லது பங்குதாரர் அமர வேண்டும் என்று சொல்வார்கள்.

இந்த விதியை நேரடியாக விற்பனை செய்யும் இடங்களாக இருக்கக் கூடிய பொருட்களை வைத்து வியாபாரம் செய்கிற இடங்களில் அமைத்துக்கொள்ள வேண்டியது கிடையாது. அதே சமயம் தென்மேற்கு தோஷம் என்று ஒரு சொல்லும் பொழுது, அந்த இடத்தில் அலுவலகம் சார்ந்த நிகழ்வுகளை, நான் சொல்லுகிற விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைத்துக் கொள்ளும் பொழுது, அவர்களை கெடுக்காது. ஆகவே தென்மேற்கு மூலை என்பது அலுவலகமாக இருக்கலாம். ஆனால் முழு அலுவலகமாக இயங்க கூடாது. முழு அலுவலகம் என்பது, மேற்கு பார்த்த கடைகளுக்கு வடமேற்கிலும், கிழக்கு பார்த்த கடைகளுக்கு தென் கிழக்கிலும், தெற்கு பார்த்தகடைகளுக்கு தென்மேற்கு பகுதியில், வடக்கு பார்த்த கடைகளுக்கு வடமேற்கு பகுதியில் அமைத்து கொண்டால் மட்டுமே சிறப்பாக கடைகள் குடோன் மற்றும் கிட்டங்கி வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்-  ஆதாயம்
ரிசபம்-  அலைச்சல்
மிதுனம்- அசதி
கடகம்- குழப்பம்
சிம்மம்- வரவு
கன்னி- நட்பு
துலாம் – களிப்பு
விருச்சிகம்- வெற்றி
தனசு – லாபம்
மகரம்- புகழ்
கும்பம்- ஆசை
மீனம் – பரிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#june_23

உகாண்டா, போலந்து தந்தையர் தினம்

ஐக்கிய ராஜ்யத்தின் சமூக சேவை தினம்

பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது(1894)

கிரிஸ்டோபர் ஷோல்ஸ், தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1868)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading