ஜன்னல் வாஸ்து chennai Vastu for windows

chennai Vastu for windows

ஜன்னல்களை வாஸ்து ரீதியாக எங்கு அமைக்க வேண்டும் என்பதனை தெரிந்து கொண்டு ஒரு கட்டிடத்தை கட்டுவதும், பழைய கட்டிடங்களுக்கு வாஸ்து மாற்றம் செய்வதும் நல்லது. பழைய கட்டிடங்களை வாஸ்து மாற்றம் செய்வது என்பது மேஸ்திரி அல்லது இன்ஜினியர் வைத்து செய்வார்கள். இந்த இடத்தில் தவறாக இருக்கும் ஜன்னலை மீண்டும் தவறான இடத்தில் வைத்து விடுவார்கள். ஒரு சில இடங்களில் தவறாக இருக்கும் கதவை எடுத்து பாதி தவறுகளுக்கு உட்படுத்தும் அமைப்பாக வைத்துவிடுவார்கள். இது சார்ந்த விஷயங்களை எந்த இடத்திலும் செய்யக்கூடாது. அதற்கு செய்கிற செலவுகள் என்பது ஒரு மாற்றம் செய்யும் பொழுது பத்தாயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை கூட ஆகலாம். சிறிய அளவில் வீடுகளுக்கு இந்த இடத்தில் ஒரே முடிவாக உங்கள் ஊரில் இருக்கிற வாஸ்து நிபுணரை அழைத்து சரி பார்த்து செய்யும் பொழுது ஓரளவிற்கு 90 சதவீத தவறுகள் இல்லாத வாஸ்து வீடாக மாறி விடும். எந்த வேலையை செய்தாலும் அந்த தொழில் செய்கிற மனிதர்களை அழைத்துப் பாருங்கள்.

அப்போதுதான் அது முழுக்க முழுக்க சரியான பலன்கிடைக்கும் .ஒரு நோய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும். அது சார்ந்த மருத்துவம் படித்த மருத்துவர் இதனை பார்க்கவேண்டும். அதுபோலத்தான் உங்கள் உள்ளூரில் இருக்கும் புண்ணுக்கு மருந்து போட்டும் கட்டும் கம்பவுண்டரை பார்க்கக்கூடாது. அந்த வகையில் ஒரு இல்லத்திற்கு வடக்கும் கிழக்கும் ஜன்னல் என்பது வேண்டும். ஒரு அறைக்கு வடகிழக்கு வடக்கிலும், வடக்கு கிழக்கிலும் வடமேற்கு மேற்கிலும், தென்கிழக்கு தெற்கிலும் ஜன்னல் என்பது வேண்டும் . ஒருசிலர் மத்திய பாகத்தில் ஜன்னல்களை வைத்திருப்பார்கள் அதனை கூட தவறு கிடையாது. எடுத்துக்கொள்ளலாம் இருந்தாலும், ஒரு சுவரின் கிழக்கு சுவர் என்பது குறைவாகவும், அதற்குப்பிறகு ஜன்னலும் அதன் மேற்கு சுவர் என்பது பெரியதாகவும் இருக்கவேண்டும். இந்த விதி என்பது வடக்கு மற்றும் தெற்குப் புறத்திலும் இருக்கும் ஜன்னலுக்கு பொருந்தும். அதேசமயம் கிழக்கு சுவரிலும், வடக்கு சுவரிலும் ஜன்னல்கள் வைக்கும் பொழுது , ஜன்னலுக்கு வடக்கு புறத்தில் இருக்கிற இடம் என்பது குறைவாகவும், ஜன்னலுக்கு தெற்கு புறத்தில் இருக்கிற இடம் என்பது அதிகமாக, பெரியதாகவும் இருக்கவேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு அறைகளிலும் ஜன்னலை பின் பற்ற வைக்கும் பொழுது வாஸ்து ஜன்னல் ஆக இருக்கும். Vastu for windows

It is better to construct a building knowing where the windows should be placed architecturally and to make Vastu changes to old buildings. Vastu modification of old buildings is done by a mason or an engineer. A misplaced window will be repositioned at this point. In some places they will take the faulty door and put it in a half-fault system. Such things should not be done anywhere. The cost of a conversion can range from ten thousand rupees to one lakh rupees. The only solution for small-scale houses in this area is to call a Vastu expert in your town and get it checked and it will turn out to be a Vastu house with 90 percent mistakes. Whatever work you do, call the people who are doing that job. Only then it will be fully effective. For a disease one should see medicine. A doctor who has studied related medicine should see this. Similarly, you should not look for a local compounder to apply and bandage a wound. In that way a house should have north and east windows. A room should have a window in North-East North, North-East, North-West West and South-East South. There is nothing wrong with some having windows in the middle. Although it can be assumed that the eastern wall of a wall should be smaller and then the window and its western wall should be larger. This rule applies to both north and south facing windows. On the other hand, when windows are placed on the east wall and the north wall, the space on the north side of the window should be less and the space on the south side of the window should be more and bigger. In this manner, when the window is attached to each room, it becomes a Vastu window.

Vastu Shastra Tips for Doors and Windows , Guidelines for Windows Vastu,

south window vastu,

windows in west direction vastu,

south west window vastu remedies,

Loading