சென்னை வாஸ்து தினசரி காலண்டர் 6.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று #ஆனித்திருமஞ்சனம்

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

6.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 9 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.51.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 6.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
22ந் தேதி புதன்கிழமை.  இரவு 7.50 வரை சப்தமி திதி. பிறகு வ.அஸ்டமி திதி.இன்று காலை 11.30 வரை உத்திரம் நட்சத்திரம். பிறகு நாள் முழுவதும் அஸ்தம் நட்சத்திரம்.

ராகுநேரம்:12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று காலை 11.30 வரை நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

ஏற்கனவே ஒரு இடம் உங்களிடம் இருக்கிறது. அப்படி இருக்கின்ற பொழுது இருக்கின்ற இடத்திற்கு ஒட்டிய அமைப்பில் இடம் வந்தால் வாங்கலாமா? என்றால் தாராளமாக வாங்கலாம்.அதாவது அது காலியிடமாக இருந்தால் அல்லது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம். கிழக்குப் பகுதியை மட்டும் கொஞ்சம் ஒரு சில  பரிந்துரைகளோடு வாங்க வேண்டும். மேற்கு புறத்திலும் , தெற்கு புறத்திலும் ஒரு இடம் விற்பனைக்கு வருகிறது என்று சொன்னால் 100% வாங்க வேண்டாம். அல்லது வாங்கித் தான் ஆக வேண்டும் என்று சொன்னால், ஏற்கனவே இருக்கிற கட்டிடத்திலிருந்து அங்கு இருக்கும் மக்களை அதாவது, வாடகைக்கு விட்டிருந்தாலோ அல்லது, நீங்கள் குடியிருந்தாலோ, நீங்கள் அலுவலகமாக உபயோகித்தாலோ, காலி செய்துவிட்டு, காலியான கட்டிடமாக உருவாக்கிக் கொண்டு வாங்கிக் கொள்ளலாம்.

வாங்கிய உடனே கட்டிடம் கட்டவேண்டும். ஏனென்று சொன்னால் வடக்கிலோ அல்லது, கிழக்கிலோ ஏற்கனவே இருக்கிற கட்டிடம் இருக்கும் பொழுது, மேற்கு காலியிடம் அல்லது, தெற்கு காலியிடம் என்பது தோஷத்தை கொடுக்கும். ஆக உடனடியாக போர்க்கால அடிப்படையில் கட்டிடங்களை கட்டிக் கொள்ளலாம் அல்லது, வாஸ்து ரீதியாக ஒரு சில விஷயங்களை செய்தும் கூட பண்ணலாம் . அந்த இடத்தில் ஒரு சில விஷயங்களை சூட்சுமமாக கடைபிடித்து செய்ய வேண்டும். ஒரு சில இடங்களில் இடம் வாங்கிய பிறகு, ஏற்கனவே செய்கின்ற தொழில் பாதிப்பு ஏற்பட்ட நிலையும், ஏற்கனவே வசிக்கிற வீடு இருந்து மேற்கு தெற்கு பகுதி இடத்தை வாங்கிய பிறகு ஒருசில இடங்களில் உடல்நிலை, உயிர்நிலை சார்ந்த பாதிப்புகளை கொடுத்து இருக்கிறது என்பதனை எனது வாஸ்து பயணங்களில் உணர்ந்து இருக்கிறேன்.தெற்கு மேற்கு இடங்களை சேர்க்கும் போது வாஸ்து கவனத்தோடு பரிசளித்து வாங்க முயற்சி செய்யுங்கள். இல்லை என்றால் விட்டுவிடுங்கள்.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- அச்சம்
ரிசபம்- ஆதாயம்
மிதுனம்- அமைதி
கடகம்- அலைச்சல்
சிம்மம்- ஆர்வம்
கன்னி- தனம்
துலாம் – ஆக்கம்
விருச்சிகம்- ஆதரவு
தனசு – அன்பு
மகரம்- அசதி
கும்பம்- பணிவு
மீனம் – அனுகூலம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_06

மலாவி விடுதலை தினம்(1964)

தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்(1870)

இந்திய தொழிலதிபர் திருபாய் அம்பானி இறந்த தினம்(2002)

டாலர், அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(1785)

தாதாபாய் நெளரோஜி, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1892)

சிங்களம், இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியானது(1956)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading