கோபுர தரிசனம் லிங்கராஜா கோவில்

கோபுர_தரிசனம்;

அருள்மிகு
ஶ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோயில்,

ஆயாதி புவனேஸ்வரம் நகரம்,

ஒடிசா மாநிலம்.

( ஒடிசா மாநிலத்தின்
‘#கோயில் நகரம்’ என்றழைக்கப்படும் (தலைநகர்) புவனேஸ்வரத்தில், மிகவும் பழமையான ஆலயங்கள் 700-க்கும் மேற்பட்டவைகள் உள்ளதும், அதில் பெரும்பாலும் சிவனாலயங்களாக இருப்பதும் இவ்வூரின் சிறப்புக்களில் ஒன்றாகும்.

முற்காலத்தில்
‘திரிபுவனேஸ்வர்’ என்றழைக்கப்பட்டு, பின் அப்பெயர் மருவி,
தற்காலத்தில் #புவனேஸ்வர் என்றழைக்கப்படும்
இந்நகரத்தின் பெயர்,
சிவனின்
சம்ஸ்கிருத பெயராம்.
அதாவது, மூன்று உலகங்களின் இறைவன் எனப்பொருள்படும்.
பழைய இந்து வேதங்கள்,
இந்த புவனேஸ்வர் (ஊர்) தலம்
சிவனின்
விருப்பமான இடங்களில் ஒன்றாக இருந்ததாக கூறுகின்றன.

7-ஆம் நூற்றாண்டில்,
(தற்போதைய ஒரிஸா, #தமிழ்_காலண்டர் #ஆந்திரா மாநிலங்களின் உள்ளடக்கிய பகுதியாக இருந்த) கலிங்க நாட்டினை ஆண்ட, சைலோத்பவ வம்ச மன்னர்களால் கட்டப்பட்ட இத்தலத்தில்,
நம் இனிய ஈசன்
சுயம்பு லிங்க திருமேனியராய் அருட்காட்சியளிக்கிறார்.லிங்கராஜா கோவில்,lingaraja temple mystery in tamil ,லிங்கராஜர் கோயில் வரலாறு ,History behind lingaraja,லிங்கங்களின் அரசனான லிங்கராஜா,chennai vastu temple,

Chennai_Vastu

சென்னை_வாஸ்து

Chennai #Vastu #சென்னை #வாஸ்து

பரசுராமர் தவமிருந்து, இத்தல ஈசனின் பேறுபெற்றதால்,
இறைவனுக்கு ஶ்ரீ பரசுராமேஸ்வரர்
எனும் திருப்பெயராம்.

மஹா #சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும்
இந்த சிவனாலயத்தின் கோபுர விமானம் உட்பட, இங்குள்ள பல கோயில்களில், ‘பிடா’ அதாவது, பிரமிடு கூரை கொண்ட சதுர விளிம்பு போன்ற அமைப்புடன் கோபுரங்கள் காணப்படுவது வித்தியாசமான காட்சியாகும்.

மணற்கற்களால் கட்டப்பட்ட, இந்த பழமைமிகு ஆலயத்தில் ஶ்ரீ விநாயகர், ஶ்ரீகிருஷ்ணர், சப்தகன்னியர், மகிஷாசுரமர்த்தினி உட்பட (கோபுரம் முழுவதும்) வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் அனைத்தும் மிகவும் அருமை.

11-12-ஆம் நூற்றாண்டில், அன்னியர்களால் சிதைக்கப்பட்ட ஏராளமான இந்து ஆலயங்களில் இத்தலமும் ஒன்று.
சிதிலமடைந்திருந்த இக்கோவில், கடந்த
1903-ஆம் ஆண்டு மறுசீரமைத்து கட்டப்பட்டனவாம்.
தற்போது மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது).

https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

Loading