காசி வாஸ்து கோவில் Kasi Vastu

Kasi Vastu

இந்தியாவில் உள்ள ஆலயங்களில் புகழோடு இருக்கிற ஆலயம் காசி ஆலயம். இது சிவபெருமானுக்குரிய ஆலயம். ஒரு பழமொழி சொல்வார்கள். காசிக்கு போறதும், சுடுகாட்டுக்கு போறதும் ஒன்றுதான் என்று. இதற்கு விளக்கம் என்ன என்று சொன்னால் அந்த காலத்தில் எங்கும் அடர்த்தியான காடுகள், கொடிய விலங்குகள் போன்ற விஷயங்களை கடந்து தான் காசி பயணம் என்பது இருக்கும். இந்த காசிக்கு அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் எட்டு திசைகளில் இருந்தும் பயணப்பட்டு காசிக்கு வருவார்கள். காசியின் வசீகரண சக்தி என்பது மிகப்பெரியது. இன்றைக்கு நமது பிரதமரின் தொகுதியாக கூட காசி மாநகரம் என்று சொல்லக்கூடிய வாரணாசி நகரம் இருக்கின்றது. உலகப் புகழ் பெற்ற பட்டுக்கு பிரசித்தி பெற்ற இடமாக நமது காஞ்சிபுரம் இருந்தாலும், ஏக இந்தியாவில் பனாரஸ் பட்டு சிறப்பு. அந்த பனாரஸ் என்கிற பெயர் காசியை குறிக்கின்ற பெயர். இந்த இடத்தில் காசியின் வாஸ்து சிறப்பு என்னவென்று பார்க்கும் பொழுது, காசி நகர் கிழக்கு ஈசானியத்தை விரிவு எடுத்துக்கொண்டு செல்கிறது. கங்கை நதி தெற்கிலிருந்து வடக்கு சென்று வடக்கு வாகினி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. காசிக்கு ஈசானத்துக்குச் சென்ற ஆற்றின் நடை என்பது கிழக்கு ஈசானியத்திற்கு திரும்புகின்றது. இதுவே காசி நகரத்துக்குரிய மிகச் சிறப்பான ஒரு வாஸ்து. காசியில் இருக்கின்ற அன்னபூர்ணி தாய் விஸ்வநாத பெருமான் ஆகிய மிகப்பெரிய கடவுள்கள் எழுந்தருயிருக்கிறார்கள். Kasi Vastu

இந்த கோயில் வாசலை நாம் பார்ப்போம். தெற்கு திசையில் இருந்து நுழைவாயில் இருக்கின்றது. தெற்கில் சிறிய சாலை உள்ளது. மதில் சுவரின் உட்பக்கத்தில் சுற்றிலும் வடக்கு தெற்கு திசைகளில் மாடிகள் இருக்கின்றன. பதிலுக்கு வடக்கிலும் மேற்கிலும் வாயில்கள் இருக்கின்றது. கோயிலுக்கு மேற்கு பக்கம் மண்டபம் இருக்கின்றது. கர்ப்ப கிரகத்திற்கு நான்கு திசைகளிலும் வாயில் இருக்கின்றன. கர்ப்ப கிரகத்திற்கு ஈசானிய பாகத்தில் பள்ளமாக பிரதான லிங்கம் இருக்கின்றது. அபிஷேக நீர் கர்ப்ப கிரகத்திலிருந்து ஈசான திசையாக வெளியில் வந்து பள்ளத்தில் செல்கின்றது. இந்த கோயிலுக்கு கிழக்கில் சந்து இருக்கிறது.ஆலயத்தில் இருந்து வெளியே வருவதற்கு ஈசானித்தில் மற்றொரு வாயில் உள்ளது. விஸ்வநாத ஆலயத்தின் தெற்கு பாகத்தில் அம்மையின் ஆலயம் இருக்கின்றது. அதனால் சுவாமியின் கோயிலுக்கு நைருதி திசை உயர்ந்திருக்கின்றது. நைருதி எங்கு உயர்கிறதோ அங்கு வருமானமும் செல்வமும் புகழும் உயரும்.  அதே விஷயத்தை உங்களுடைய இல்லத்தில் நீங்கள் பொருத்தி பார்க்கும் பொழுது, மிகுந்த வருமானத்தை கொடுக்கிற இல்லமாக உங்களுடைய இல்லத்தை மாற்ற வேண்டும் என்று சொன்னால் தெற்கு மேற்க்கும் உயர படுத்துகிற நிகழ்வை செய்தால் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இருக்கும். கோயிலுக்கு வாஸ்து இருக்கிறதா? இல்லையா? என்கிற ஒரு ஆராய்ச்சியை நாம் விட்டுவிட்டு எந்த அமைப்பில் ஒரு ஆலயம் இருக்கிறதோ? அந்த ஆலயத்திற்கு செல்லும் பொழுது நிச்சயமாக அது சார்ந்த அமைப்பின்படி உங்களுடைய இல்லம் மாறும். உங்களுடைய வாழ்க்கை மாறும். ஆக முடிந்தால் வாழ்க்கையில் அல்லது வருடத்தில் ஒரு முறை காசி மாநகர் சென்று வாருங்கள். உங்கள் குடும்பத்தையும் அழைத்துச் செல்லுங்கள்.நிச்சயம் மிகப்பெரிய மாறுதல் உங்கள் வாழ்க்கை முழுவதும் இருக்கும். கூடவே காசியில் இருக்கும் ஆந்திர மக்களின் பாதாள வராகி தெய்வத்தை பார்க்க மறக்க வேண்டாம்.

One of the most famous temples in India is the Kashi temple. This is a temple dedicated to Lord Shiva. They say a proverb. That going to Kashi and going to Sudukat is the same thing. If we tell the explanation for this, it would be that Kashi travel was going through thick forests, dangerous animals and other things everywhere during that time. People from all over this Kashi travel from eight directions and come to Kashi. Kasi’s charm is immense. Today Varanasi is a city that can be called the capital of Kashi even as our Prime Minister’s constituency. Although our Kanchipuram is the place of world-renowned silk, Banaras silk is special in India. The name Banaras is a name that refers to Kashi. When we see what is special about the vastu of Kashi at this place, Kashi Nagar is taking East Asian expansion. River Ganga runs from south to north and is known as Northern Vagini. The course of the river which went to Kashi to Isanam returns to East Isanam. This is one of the best Vastu of Kashi city. Annapurni Mother Vishwanatha Peruman in Kasi is the greatest deity has arisen.

Let us see this temple gate. The entrance is from the south direction. There is a small road to the south. There are floors in the north-south direction around the inside of the wall. In turn there are gates to the north and west. There is a mandapam on the west side of the temple. Garbha planet has gates in all four directions. The main lingam is the depression in the Isaniya part for Garbha Graha. The anointing water comes out from the Garbha planet in a light direction and goes into the pit. There is an alley to the east of this temple. Another gate is at Isanith to get out of the temple. Ammai’s shrine is located in the southern part of Viswanatha temple. So the Nairuti direction to the Swamy’s temple is high. Where Nairuti rises, income, wealth and fame rise. When you compare the same thing in your house, if you say that you want to change your house to a house that gives you a lot of income, if you do the event that elevates the South and the West, then there will definitely be progress in your life. Does the temple have Vastu? Isn’t it? We have left a research called “In which system is there a temple?” When you go to that temple, your house will definitely change according to the related system. Your life will change. If possible visit Kashi city once in a lifetime or a year. Take your family too. Surely the biggest change will be throughout your life. Also, don’t forget to visit the Underworld Varagi deity of the Andhra people in Kashi.

Loading