வாஸ்து வடக்கு பாகம் Vastu Northern part

Vastu Northern part

வாஸ்துவில் வடக்கு பாகம் என்று பார்க்கும் பொழுது, வடக்கின் பலன்கள் பெண்களின் மீதும், சொத்தின் மீதும் இருக்கும். வடக்கு பாக இல்ல அமைப்பில் வடக்கு புற அறையில் தரை மட்டம் என்பது எல்லா திசைகளையும் விட கொஞ்சம் குறைவாக இருப்பது நலம். இந்த இடத்தில் படிகளுக்கு லாப நஷ்ட கணக்கு பார்க்கும் செயலை ஊக்குவித்துக் கொண்டு மட்டங்களில் கோட்டை விட்டு விட வேண்டாம் . அதேபோல கீழ்தள கட்டிடம் மட்டுமின்றி மேல் தள கட்டிடத்தையும் கொஞ்சம் இறக்கி கட்டுவது நலம். வடக்கு வாசல் வீட்டுக்கு கிழக்கில் இடம் இல்லை என்றால் கிழக்கில் கடைசியாக இருக்கும் ஈசானிய வீடு யோகத்தை கொடுக்கும். ஒருவேளை அந்த வீட்டிற்கு ஈசானியம் இல்லாமல் இருந்தால் மேற்கில் இருக்கிற வீடு அல்லது அதற்கு அடுத்த இரண்டாவது விடோ தெருவில் கடைசியில் இருக்கிற மேற்கு புற மனையில் இருக்கும் வீடுகளோ யோகத்தை கொடுக்கும். வடக்கு வாசல் வீடுகளின் தலைவாசல் தெருவுக்கு தெரியும்படி சுற்றுச்சுவரை இழுத்துக் கட்டுவது நலம்.Vastu Northern part

சுவர் வீடு கட்டிய பிறகு தான் சுற்றுசுவர் கட்ட வேண்டும். ஒருவேளை வீட்டை வாடகைக்கு கொடுக்கிற நிலையாக இருந்தால் உச்ச பாகத்தை உரிமையாளர் வைத்துக் கொண்டு, நீச்ச பாகத்தை வாடகைக்கு கொடுப்பது நலம். வாடகைக்கு இருக்கிற நபர் காலி செய்தால், உடனடியாக வேறு ஒருவரை அமர்த்தி விடுவது நலம். அல்லது நீங்களே தொடர்ந்து உபயோகிக்கிற விதமாக அமைத்துக் கொள்வது நலம். ஆக வடக்கு பார்த்த வீடுகளை எனது வாஸ்து பயணத்தில் முதல் தரமான மனைகள் என்று சொல்லுவேன்.

When North is seen in Vastu, the benefits of North are on women and wealth. In a north facing house layout it is good that the floor level of the north facing room is slightly lower than all directions. Don’t leave the line at the levels by encouraging profit and loss accounting for the steps at this point. Similarly, it is better to build not only the lower floor building, but also the upper floor building. If the north door house is not placed in the east then the last house in the east will give the yoga. Perhaps if the house does not have Isanium then the house in the west or the second house next to it or the houses in the west side house at the end of the street will give yoga. It is good to build the surrounding wall so that the head of the north door houses is visible to the street.The surrounding wall should be built only after the wall house is built. Perhaps if the house is rented out, it is better to keep the upper part of the house and rent out the lower part. If the tenant vacates, it is better to hire someone else immediately. Or it’s better to set it up for regular use yourself. So I would say North facing houses are first class plots in my vastu journey.

 233 total views,  1 views today