வாஸ்து லாப்ட் செல்ப் பரண் | vastu for shelf loft tamil

chennai vastu for shelf loft

வாஸ்துவின் வழி செல்ப் மற்றும் லாப்ட் பற்றி தெரிந்து கொள்வோம்.வாஸ்து சாஸ்திர அமைப்பில் லாப்ட், கப்போர்டு , செல்ப் போன்ற விஷயங்களை இரண்டுவித அமைப்புகளாக பார்க்கவேண்டும். வீட்டின் சுவர்களில் தனித்து இருப்பது,இரண்டாவது கட்டடமாக கட்டிக்கொள்வது, அல்லது தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் அல்லது, மரம் கொண்டு ஒரு கட்டமைப்பு ஏற்படுத்திக்கொள்வது.வீட்டில் உள்ள இருக்கக்கூடிய சுவர் இல்லாத செல்ப் ஏற்படுத்திக் கொள்வது ஒரு வகை. ஆக இந்த இரண்டு வகைகளில் எதனை எங்கு செய்ய வேண்டும் என்கிற வாஸ்து விதி இருக்கிறது .அதனை உட்புகுத்தி அமைக்கும் போது நல்ல பலன்களை கொடுக்கிற வீடாக இருக்கும். கப்போர்டு சரியான  அளவில் பயன்படுத்த கூடிய அமைப்பாக வடிவமைப்பு செய்ய வேண்டும். வட்ட வடிவம் அல்லது, கூரை போல இருக்கிற கப்போர்டு, செல்ப் மாடல் போன்ற விஷயங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். ஆனால் அந்த இடத்தில் எந்த பொருளையும் நாம் வைக்க முடியாது .   சுவர்களில் ஒருபக்கம் சுவரின் அகலம் குறைத்து சுவர்களுக்கு உள்ளாகவே, ஒரு முக்கால் அடி அளவில் செல்ப் கபோர்டு செய்யும்பொழுது ஒரு அறையின் வடக்கு சுவரில் செய்வதாக இருந்தால், வடகிழக்குப் கிழக்கு பகுதியில் வைத்து கொள்ளலாம். அதே அறையில் கிழக்கு சுவரில் செய்வதாக இருந்தால், வடகிழக்குப் பகுதியிலும். அந்த அறையின் தெற்குச் சுவரில் செய்வதாக இருந்தால் கிழக்கு பகுதியிலும், அதே அறையில் மேற்குப் பகுதியில் செய்வதாக இருந்தால், வடக்குப் பகுதியிலும் செல்ப் மாடல் கபோர்டு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.நான் குறிப்பிட்ட இடங்களில் உச்சபகுதிகள் ஆகும். அந்த இடத்தில் எதாவது ஒரு இடத்தில் ஜன்னல் வரும்போது அதன் மேற்பகுதியில் செல்ப், கப்போர்டு வைத்து கொள்ளலாம். இந்த விதி என்பது படுக்கை அறையாக இருந்தாலும் சரி, வரவேற்பறை ஆக இருந்தாலும் சரி, சமையல் கூடமாக ,உணவு உண்ணக்கூடிய அறையாக, இரண்டாவது படுக்கையறை ஆக, அல்லது கழிவறைகளில் ஆக  இந்த விதி அனைத்து அறைகளுக்கும் பொருந்தும்.

இரண்டாவது வகை என்பது எக்ஸ்ட்ராவாக நாம் ஒரு பீரோ வைப்பதைப் போல செல்ப் கப்போர்டு பொருட்களை செய்து கொள்வதற்கும் பொருந்தும். மரத்தில் ஒரு கபோர்டு அடிக்கிறோம் என்று சொன்னால்,  தென்மேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். அது கிழக்கு பார்த்த அல்லது, வடக்கு பார்த்து அமைத்துக்கொள்ளலாம். இதனை தவிர்த்து கப்போர்டு செல்ப் அடிக்கிற விஷயத்தில் வீட்டுக்கு தனியாக செய்யும் பொழுது, ஒரு ரெடிமேட் அமைப்பில் எப்படி வாங்கி வைப்போம் அதுபோல வைக்க வேண்டும்.எதுவாக இருந்தாலும்   ஒரு அறைக்கு தென்மேற்கு பகுதியில் தெற்கு சார்ந்த அல்லது, மேற்கு சார்ந்த பகுதியில் மட்டுமே வரவேண்டும். வேறு பகுதிகளில் வரக்கூடாது. அதேபோல ஏழு அடி லாப்ட் அடிக்கக்கூடிய  விஷயங்கள் தெற்கு சுவரிலும், மேற்கு சுவரில் மட்டுமே வர வேண்டும் . அப்படி வருகின்ற பொழுது வடக்கு சுவரை  தொடாமல் செய்து கொள்வது சாலச் சிறந்தது. அப்படிப்பட்ட கப்போர்டுகளில் உதாரணமாக மூடப்பட்ட அமைப்பாக அமைத்துக் கொள்ளலாம் . இதே அமைப்பு ஒரு சமையல் அறையில் செய்யும் மாடுலர் கிச்சன் என்று அழைக்கப்படுகிற இந்த மாடர்ன் கிச்சன் வகையில் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் அடித்துக் கொள்ளலாம். ஒரு சில மக்கள் சொல்வார்கள் கிழக்குச்சுவர் பகுதியை தொட்டது போல செய்ய வேண்டாம் என்பார்கள். ஆனால் எனது வாஸ்து பயணத்தில் கிழக்குப் பகுதியை அதுவும் தென்கிழக்கு சார்ந்த பகுதியை தொடுவதில்,மூடி வைப்பதில்  மிகப்பெரிய தவறுகள் இருப்பதாக தெரியவில்லை . அதேசமயம் கிச்சன் சார்ந்த சமையலறையில் இந்த கப்போர்டு செல்ப் அமைக்கும் பொழுது தரைத்தளத்தை எந்த இடத்திலும் அடைக்காது அமைக்கவேண்டும். தரைத்தளம் அமைப்பு எந்த இடத்திலும் உடைபடாது சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒரு  சமையல் மேடை போன்ற விஷயங்களை வீட்டில் தாய் சுவரில் அமைக்கும் பொழுது தாய் சுவருக்கு வெளியில் செல்லும் அமைப்பாக அமைக்க வேண்டும்.    வீட்டில் சுவர் எந்த இடத்திலும் எந்த இடத்திலும் கப்போர்டு லாப்ட் செல்ப் அடைக்கும் போது எந்த இடத்தில் ஒரு அறையில் தரைத்தளம் சதுரம் அல்லது செவ்வகம் இல்லாமல் போய் விடக்கூடாது.

அறைக்கு தெற்கு சுவர், மேற்கு சுவர், மேல் பகுதியில் பரண் அமைத்து அந்த அறையில் தென்மேற்கு பகுதியில் பீரோ அமைத்து, இதன் அருகே கபோர்டு வைத்துக்கொண்டால் சிறப்பு. தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பரண் அமைத்து, அதற்கு கீழ் சுவர் முழுவதும் அமைத்து துணிகள் நகை பணம் வைத்துக் கொள்ளும் முறை சிறப்பு. வடக்கு கிழக்கு வாயில் இருக்கும் வீட்டிற்கு வரவேற்பறை அமைத்து, அந்த அறையில் எதிர்ப்புறம் தெற்கு மேற்கு பகுதிகளில் சுவர் கணம் குறைத்து கப்போர்ட் வைத்துக் கொண்டால் சிறப்பு.  பொறுத்த அளவில் வரவேற்பு அறைகளில்  ஷோகேஸ் அமைப்பார்கள். அதனை வரவேற்பு அறையில் உச்ச பகுதியில் அமைத்து கொள்ளலாம்.  தெற்கு மேற்கு தலைவாசல் இருக்கும் வீட்டிற்கு வரவேற்பறை என்று சொல்லக்கூடிய ஹாலின் தெற்கு மேற்கு சுவர்களில் தொலைக்காட்சிப்பெட்டி அழகு பொம்மைகளை வைத்துக் கொள்ளலாம். அது நல்ல பலனைக் கொடுக்கும் தெற்கு மேற்கு சுவர்களில் பரண்கள் அமைப்பது சிறப்பு.  வடக்கு கிழக்கு திசையில் அமைப்பு 100% தவிர்க்க வேண்டும். படிக்கின்ற புத்தகங்களை ஒரு அறைக்கு தென்மேற்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் செல்ப் அமைத்து அதில் வைத்து படிப்பது சிறப்பு. எக்காரணம் கொண்டும் வடகிழக்கு அறையில் மட்டும் பரண், லாப்ட், செல்ப், கபோர்டு, அமைக்க வேண்டாம்.

 142 total views,  6 views today

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *