வாஸ்து முறை கணக்கீடு குடும்ப உறுப்பினர்களின் இடங்கள்

வாஸ்து பங்கிட்டு கணக்கின்படி குடும்ப உறுப்பினர்கள் இருக்க வேண்டிய பகுதியை தெரிந்து கொள்ளுங்கள்,.

ஒரு இல்லத்தில் ஒவ்வொரு மக்களுக்கும் முக்கிய பகுதியாக ஒவ்வொரு இடமும் விளங்குகிறது. அந்த வகையில் ஒரு இல்லத்தின் வடகிழக்கு பகுதி என்பது , முழுக்க முழுக்க ஆண்களுக்கு உரிய பகுதி. அடுத்த நிலையில் கிழக்கு மத்திய பாகம் என்பது அந்த வீட்டில் இருந்து ஆண் குழந்தை சார்ந்த பகுதியாக இருக்கிறது. அடுத்ததாக தென்கிழக்கு பகுதி என்பது பெண்களுக்கான பகுதியாகவும், தெற்குப் பகுதி என்பதும் பெண்களுக்கான பகுதியாக இருக்கின்றது. அதேசமயம் தென்மேற்குப் பகுதி என்பது ஆண்களுக்குரிய பகுதியாக இருக்கின்றது. மேற்கு மத்திய பாகம் என்பது ஆண்களுக்குரிய பகுதியாகவும், வடமேற்கு பகுதி என்பது பெண்களுக்குரிய பகுதியாகவும், வடக்கு மத்திய பாகம் என்பது பெண்களுக்கு உரிய இடமாக இருக்க வேண்டும் என்பது வாஸ்து விதி ஆகும்.

இடங்கள் சார்ந்த இதன்  விதி என்பது மொத்த மனையை ஒன்பது பாகங்களாக பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் நான் சொல்லாமல் விட்டு போன மத்திய பிரம்மஸ்தானம் பகுதி என்பதை குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான பகுதியாக பார்க்க வேண்டும். இதனை தவிர்த்து, மற்ற இடங்களில் ஆண்களோ அல்லது பெண்களோ அவர்கள் கூறிய இடத்தில் இல்லாமல் வேறு இடங்களில் இருக்கும் பொழுது , அவர்களுக்கு ஒரு பாசிட்டிவான விஷயத்தை கொடுக்காத மனையாக மாறிவிடுகிறது என்று சொல்லமுடியும். அந்த வகையில் பெண் குழந்தைகள் சார்ந்த பகுதியாக வடமேற்கு, மூத்த பெண்கள் சார்ந்த பகுதியாக தென்கிழக்கு, மூத்த பெண்மணிகள்  அதாவது மிகவும் வயதில் மூத்த பெண்மணிகள் பகுதியாக விளங்குகின்றது. அதேசமயம் ஆண்கள் வகையில் தென்மேற்கு பகுதி என்பது வாஸ்து ரீதியாக மிகவும் வயதில் மூத்தவர்களுக்கும், ஏற்கனவே நான் சொல்லியிருந்த மூத்த பெண்களுக்கு இடமான தெற்கு பகுதியை  இரண்டாவது நிலையில் இருக்கின்ற ஆண்களுக்கும் கொடுக்கலாம்.அதாவது தெற்கு மத்திய பாகமும், மூன்றாவது நிலையில் இருக்கிற ஆண்களுக்கு மேற்கு பாகத்தையும் கொடுக்கலாம். மீண்டும் வேறொரு வாஸ்து சார்ந்த கருத்துக்களோடு சந்திப்போம்.

 23 total views,  1 views today