வாஸ்து நீச்சம் உச்சம் சார்ந்த பலன்கள்

வாஸ்து ரீதியாக ஒரு வீட்டில் உச்சம் நீச்சம் என்பது மிக மிக முக்கியம். அப்படி இருக்கின்றபோது புதன் வாசல் அமைக்கலாமா? என்றால் புதன் வாசல் என்பது நீச்சத்தில் பாதியும், உச்சத்தில் பாதியும் இருக்கும். இப்படி இருக்கும்போது  புதன் வாசல் வைக்கலாமா? என்றால் என்னைப் பொருத்தளவில் வேண்டாம் என்று சொல்வேன். அந்த வகையில் பழைய காலங்களில் புதன் வாசல் என்பது மிகச் சரியான முறையில் வேலை செய்து வந்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும்பொழுது, அதிகபட்சமாக 99% பழைய காலங்களில் இரட்டைக் கதவுகள் என்பது இருந்தது. அந்த இடங்களில் இரட்டைக் கதவு என்பது அதன் சிறப்புகள் என்பது இரண்டு பக்கமும்  எதிர்மறை பலன்கள் நேர்மறை பலன்கள்  கலந்து திறந்து இருக்கும். பொழுது நல்ல விசயத்தில் திசை சார்ந்த வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு சார்ந்த உச்ச பகுதி வருகிற பாசிடிவ் விஷயங்கள் உள்ளே வீட்டுக்குள் நுழைந்து இருக்கின்றன. அவைகள் தான் நமது முன்னோர்களை நல்ல பலனை கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் புதன் வாசல் என்பது காலத்திற்கு ஒவ்வாத விஷயமாக பார்க்கப்படுகிறது . வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் ஆனாலும் முழுக்க நல்ல பலனை பெறுவதென்பது உச்ச வாசல்கள் தான். அப்படிப்பட்ட உச்ச வாசல்களில் இரட்டை வாசல்கள் வைக்கும் போது நல்ல பலன்களைக் கொடுக்கும் . இதற்கு காரணம் ஒற்றை கதவு என்பது ஒரு பக்கம் நின்று விடும் . அந்த இடத்தில் வீட்டிற்கு உள்ளே நுழையக் கூடிய பாஸிட்டிவ் எனர்ஜியை தடுக்கும் விதமாக ஒரு பக்கம் நிற்கும். ஆனால் இரட்டைக் கதவுகள் இரண்டு பக்கமும் பிரிந்து வழியை நன்றாக ஏற்படுத்திக் கொடுக்கும்.ஆக இரட்டைக் கதவுகள் தான் இல்லத்தில் சாலச்சிறந்தது.

Loading