வாஸ்து துணி துவைக்கும் கல் | vastu for washing area tamil

வாஸ்து சாஸ்திரம் சார்ந்த விஷயத்தில், துணி துவைக்கிற கல் எங்கே போட வேண்டும் மற்றும், எந்த இடத்தில் அறிவு சார்ந்த நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். துணி துவைக்கிற இடம், துணிஅலசுகிற, காயப்போடக்கூடிய இடம் மற்றும் எந்த இடத்தில் வாஷிங்மெஷின் வைக்கலாம்.  எதிர்மறை இடங்கள் இருக்கக்கூடிய இடங்களாக ஒரு இல்லத்தின் கழிவறை மற்றும் குளியலறை இருக்கிறது. அதுபோல துவைக்கக் கூடிய இடங்களும் எதிர்மறை இருக்கும் இடங்களாக தான் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு வாஷிங் மெஷின், துணி துவைக்கும் கல், ஒரு இல்லத்திற்கு வெளியில் அமைக்கும் பொழுது, முதல் தரமாக வடமேற்கு திசை என்று சொல்லக்கூடிய வாயு மூலை இடம்பெறுகிறது. இதனைத் தவிர்த்து இரண்டாம்பட்சமாக தென்கிழக்கு பகுதியில் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் அந்த தண்ணீர் என்பது வெளியே செல்லும் அமைப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து ஒரு வாழை மரங்களை வைத்து அந்த தண்ணீரை இழுக்கும் அமைப்பாக மாற்றுவதும் தவறு.   சோக்பிட்  என்று சொல்லக்கூடிய தண்ணீர் உறிஞ்சக்கூடிய பூமியில் அப்படியே இருக்கக்கூடிய நிலையான பள்ளங்களை   செய்யக்கூடாது . மாடிகளில் துணி துவைக்கும் கல் அல்லது வாஷிங் மெஷின் வைக்கக்கூடிய இடமாக வட மேற்குப் பகுதியும், தென் பகுதியும் திகழ்கின்றது. அதனை தவிர்த்து வேறு இடங்களில் வைக்கக்கூடாது. ஒரு சில மக்கள் நீர் புழங்குகிற விஷயம்தானே என்று வடகிழக்கில் செய்வார்கள். துவைக்கிற துணி அலசுகிறகிற துணிகள், துவைக்கிற வேலைகளை செய்வார்கள். எக்காரணம் கொண்டும் வடகிழக்கு பகுதியில் துணி துவைக்கும் கற்களோ, துணி துவைக்க வாஷிங் மெஷின் இல்லத்தில் வராண்டாவில் வைப்பதோ கூடாது. அதே போல இல்லத்தின் வெளிப்புற பகுதியாக இருக்கின்ற பட்சத்தில் தென்மேற்கு பகுதியில் இடம் இருந்து அந்த இடத்தில் ஒரு செட் அமைப்பை ஏற்படுத்தி அந்த இடங்களில் துவைக்கிற வேலையை செய்யக் கூடாது. மற்றும் ஒரு இடத்தின் உட்புற பகுதிகளில் கழிவுநீர்  எங்கு இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறோமோ அந்த இடங்களில் மட்டும் துணி துவைக்க, வாஷிங் மெஷின் துணி துவைக்கிற வேலைகளை செய்து கொள்ளலாம். என்னைப் பொருத்தளவில் எனது பயணத்தின் அடிப்படையில் வாஸ்து சார்ந்த விளக்கத்தின் அடிப்படையில் வடமேற்குப் பகுதி மட்டுமே சாலச் சிறந்தது என்பேன்.

துணிகளைத் துவைப்பது என்பதே ஒரு கலைதான். தினமும் அன்றாடம் உபயோக்கிற துணிகளை அன்றாடம் துவைத்துவிட வேண்டும். ஒரு சில மக்கள் இரண்டு நாட்களுக்கு ஒரே துணியை அணிந்து இருப்பார்கள்.அதுகூட என்னை பொறுத்த அளவில், நமது வெப்ப மண்டல நாடுகளைப் பொறுத்த அளவில்,   வாஸ்து ரீதியாக குற்றம்  இருக்கிற வீடுகளில் வசிக்கும் மக்கள் தான் செய்வார்கள் என்பேன் கண்டிப்பாக 12 மணி நேரங்களுக்கு ஒரு முறை, ஒரு துணியை மாற்றி விடுவது நல்லது .மிகச் சரியான வாஸ்து என்று சொன்னாலே கழிவறை குளியலறை துணி துவைக்கிற அறைகள் என்பது ஒரு இல்லத்தில் சரியாக இருக்க வேண்டும். அது சார்ந்த நிகழ்வுகளில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. எந்த மனிதனாக இருந்தாலும், வாஸ்து என்பது நோய் இல்லாத, வாழ்க்கையை கொடுக்காத அமைப்புதான்.  அந்த வகையில் நோய் தாக்கங்களில் இருந்து விடுபட வாஸ்துவின் விதிகளில் முதலிடம் வகிப்பது சுகாதாரம் என்கிற விஷயம் . அப்படிப்பட்ட சுகாதார நிகழ்வில் எப்படி நம்மை நாமே சுத்தம் செய்து கொள்கிற வகையில் கழிவறை, கழிப்பிடம், குளியல் அறை இருக்கிறதோ அதுபோல நாம் அணிந்திருக்கும் ஆடைகளை அலசுகிற, சுத்தம் செய்கிற இடம் என்பது முக்கியம்  அந்த வகையில் அது சார்ந்த நிகழ்வுகளில் எக்காரணம் கொண்டும் ஒரு இடத்தின் வடக்கு பகுதியில், ஒரு இல்லத்தின் கிழக்கு பகுதியிலோ துணி துவைக்கிற, துணி அலசுகிற விஷயங்களை செய்யக்கூடாது. நிறைய மக்கள் வடகிழக்கு பகுதிகளில் தண்ணீர் இருக்கக் கூடிய இடம் என்று வீட்டிற்கு வெளிப்பகுதியில் இரண்டு அடிக்கு  கல்மேடை அமைத்து அந்த இடத்திலேயே  துணி துவைக்கிற வேலையை செய்வார்கள். என்னைப் பொறுத்த அளவில் அதுபோல நிகழ்வு என்பது அந்த வீட்டில் ஆண்களுக்கு பாதிப்பு கொடுக்கக்கூடிய நிகழ்வாக அங்கு இருக்கிற துணி துவைக்கிற கல் மாறிவிடும். நீங்கள் வாசிங்மிஷின் வைத்துக்கொள்ளுங்கள். என்று சொன்னால் தாராளமாக வீட்டின் உட்பகுதியில் வடமேற்கு பகுதி மட்டுமே வர வேண்டும். என்கிற அவசியம் கிடையாது. தென்கிழக்குபகுதியிலும், மேற்குப் பகுதியிலும் ஏன், கிழக்கு மத்திய பாகத்திலும், வடக்கு மத்திய பாகத்திலும் வைத்துக்கொள்ளலாம். அதனை பொருத்த அளவில் தண்ணீர் என்பது தேங்கும் கூடிய நிலை கிடையாது. வாசிங்மிஷின் உள்ளே இருக்கிற தண்ணீரானது அந்த துணி அலம்பிய வேலை, துணி துவைக்கிற வேலை முடிந்த பிறகு, பைப்லைன் வழியாக வெளியேறிவிடும். இந்த இடத்தில் துணி துவைக்கிற மேடை என்கிற விஷயம்தான் வாஸ்துவின் வழியே தவறு. மற்றும் தென்கிழக்கு பகுதியில் தண்ணீர் தேக்கி வைப்பது தவறு. துணி துவைக்கிற விஷயங்களில் இந்த இரண்டு விஷயத்தை மட்டும் செய்ய வேண்டாம்.

 1,526 total views,  1 views today

Leave a Comment

Your email address will not be published.