இன்று
#தமிழ்_காலண்டர்.

இன்றைய நாள்காட்டி 30.4.2022 சுபக்கிருது சித்திரை மாதம்
17ந் தேதி . சனிவாரம்.
நள்ளிரவு 1.59 வரை அமாவாசை திதி பிறகு பிரதமை திதி. இன்று மாலை 7.59 வரை அசுவினி நட்சத்திரம். பிறகு பரணி நட்சத்திரம்.
இன்றைய
ராகுநேரம்: 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am.
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30-1pm 5-7.30pm
இன்று நல்ல யோகநாள்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 7 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.53.
___________________
இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:
விபத்து சார்ந்த விஷயத்தில் மரணத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வாஸ்து குற்றங்கள் வரிசையில் தெற்கு சார்ந்த குற்றங்களை என்னவென்று பார்ப்போம். தெற்குப் பகுதியில் பூமிக்கடியில் கட்டிடங்களும், கழிவறை கட்டடங்களும் இருந்தால் விபத்துகளை கொடுக்கும். தெற்குப் பகுதியில் வடக்கு விட ரசமட்டம் இறங்கியிருந்தால் விபத்தை கொடுக்கும் .ஒரு இல்லத்தின் அருகில் தெற்கு பகுதியில் இணைந்த அமைப்பில் காலியிடம் வாங்குவதும் விபத்தை கொடுக்கும். தெற்கு மத்திய பாகத்தில் இருக்கும் பக்கத்து இல்லத்தாரின் கிணறும் வாஸ்து குற்றத்தை வரவழைத்து விபத்தை கொடுக்கும். எப்பொழுதுமே தெற்கு திசையை உதாசீனப் படுத்த கூடாது. இந்த உதாசீன நிகழ்வுகள் எங்கு நடக்கும் என்றால், தெற்கு பார்த்த வீடுகளில், தெற்கு சாலைகள் இந்த இல்லங்களுக்கு குற்றத்தை கொடுக்கும் அமைப்பாக இருக்கும். அந்த இடத்தில் சுற்றுச்சுவர் சார்ந்த விஷயத்தில் கொஞ்சம் சாலையில் கொஞ்சம் இடம் நமக்கென்று ஒரு தெற்குப்பகுதி உயர்ந்த அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் சாலையின் குற்றங்கள் குறைந்து நன்மையை கொடுக்கும்.
____________________
இன்றைய இராசிபலன்
Today rasipalan :
மேஷம்- நன்மை
ரிசபம்- உண்மை
மிதுனம்- ஆதாயம்
கடகம்- நிறைவு
சிம்மம்- சிரமம்
கன்னி- முயற்சி
துலாம் – கவலை
விருச்சிகம்- ஆர்வம்
தனுசு- போட்டி
மகரம்- லாபம்
கும்பம்- நலம்
மீனம் – பொறுமை
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
வரலாற்றில் இன்று
ஏப்ரல்_30
ஜெர்மனி தந்தையர் தினம்
வியட்நாம் விடுதலை தினம்(1975)
இந்திய திரைப்படத் துறையின் முன்னோடியான தாதாசாஹிப் பால்கே பிறந்த தினம்(1870)
திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1982)
ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்தது(1999)
389 total views, 1 views today