வாஸ்து என்பது ஒரு தனி சாஸ்திரமா என்றால் நிச்சயமாக கிடையாது .இந்த பூமி சார்ந்த, சூரியன் சார்ந்த இயக்கத்தில் ஏற்படும் கண்ணுக்குத் தெரியாத வேகத்தை புரிந்து வாழ்கிற ஒரு அமைப்பு மனித வாழ்வில் ஒரு 12 மணி நேரங்கள், ஒரு கட்டிடம் சார்ந்த கூண்டுக்குள்ளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பழங்காலத்தில் மனிதன் குகைக்குள் வாழ்ந்தான். குகை சார்ந்த வாழ்வில் எந்த திசையில் இருந்தால் அந்த குடும்பம் விருத்தியாகும் என்று தெரிந்து கொண்டு, வாழ்ந்த முறை இன்று பரிமாற்ற மாற்றத்தின் அடிப்படையில் ஏற்பட்ட விஷயம்தான் வாஸ்து.
பல பல்வேறு இனக்குழுக்கள் பல்வேறு குகைகளில் வாழ்ந்த போது, எந்த குகையில் நல்ல ஆரோக்கியத்தோடு நல்ல சந்தோஷத்தோடு வாழ்ந்தார்களோ அதனை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி உட்படுத்தப்பட்ட விஷயம்தான் வாஸ்து என்று சொல்லுவேன். பூமியின் இயக்கத்திற்கும், மனித உடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அனைத்து உயிர்களுமே தனக்குத் தேவையான உணவை சூரியன் என்கிற சக்தி மூலமாக கிடைக்கின்றன. தாவரங்கள் தனக்குத் தேவையான உணவை பூமியிலிருந்தும், ஆகாயத்திலிருந்தும் எடுத்துக் கொள்கின்றது. ஒரு விதை முளைக்கிறது. சிறிய விதையாக இருக்கிறது. அது பல விதைகளை கொடுக்கிறது. அது பலவிதமான சுவையில் இருக்கிறது. இதனை மனித வாழ்வில் உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.ஆக சுவைகளில் 6 சுவைகளை சுட்டிக் காட்டுவோம். அந்த வகையில் இனிப்பு, காரம், புளிப்பு, கசப்பு ,துவர்ப்பு, உப்பு இப்படி பலவகையிலும் சொல்லுவோம். இந்த அறுசுவை உணவுகளை நாம் எடுத்தால்தான் உடல் என்கிற விஷயம் சரியாக வாழ முடியும். உயிர் சரியாக வாழவேண்டும் என்று சொன்னால் உடலை ஒழுங்காக பேணி காக்க வேண்டும்.

அதுபோலத்தான் உணவு விஷயத்திற்கு அப்பாற்பட்டு நீர், நிலம், காற்று, அக்னி, ஆகாயம் என்று சொல்லக்கூடிய பஞ்சபூத சக்திகளை வீட்டில் உள் நிறுத்துகின்ற விஷயம்தான் வாஸ்து. எனது சென்னை வாஸ்து சார்ந்த பயணத்தில் மிகப்பெரிய அளவில் தெரிந்த விஷயம் காற்றும் , ஒளியும் காந்த சக்தியும் ஒரு இல்லத்தை கட்டமைத்து வடிவமைக்கும்போது அந்த இல்லத்தில் வாழ்கிற மனிதனின் ஆயுள் காலம் முதற்கொண்டு, புத்திகூர்மை முதல் கொண்டு, அவர்களுடைய நடவடிக்கைகள் முதற்கொண்டு, பெரிய அளவில் மாறுபாடு அடைகின்றன என்று சொன்னால் மிகையாகாது. அந்தவகையில் பிரபஞ்சத்தின் அதிர்வுகள், பூமியின் காந்த அதிர்வுகள், மனிதன் வாழ்கின்ற இடம் சார்ந்த மனிதனின் மூளையில் அதிர்வுகளை கொடுக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது. அந்த அதிர்வுகளை நமக்கு சாதகமாக மாற்றிக் கொடுக்கும் விஷயம் தான் வாஸ்து.வாஸ்து அமைப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் எப்படி ஒரு தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஒரு ரிசிவர் இருக்கிறதோ அதுபோல ரிசிவ் செய்யக் கூடிய இடமாக பொருளாக ஒரு இல்லம் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
உலகப் பெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னதைப்போல அறியப்படாத விஷயங்கள் ரகசியங்கள் எத்தனையோ இந்த உலகத்தில் இருக்கின்றன நமக்குப் புரியாத விஷயங்கள், நமக்கு அறியாத விஷயங்கள் நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கின்ற வேறு பல புதிய தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அந்த தகவல்களை வெறும் தகவல்களாக மட்டுமே எண்ணிவிடக்கூடாது. வாழ்க்கைக்கு பயன்படுகிற, பயன்படுத்துகின்ற விஷயமாக நாம பார்க்க வேண்டும். இவ்வளவு பெரிய விஷயமாக இருக்கக்கூடிய இந்த வாஸ்து சாஸ்திரம் என்பது வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவிற்கு நுழைந்து, அன்றைய சென்னை மாகாணமாக இருந்த இன்று ஆந்திர மாநிலத்தில் இருக்கக்கூடிய இன்று தெலுங்கானா மாநிலத்துக்கு பிரிந்த விஜயவாடா நகரம் இருக்கக்கூடிய இடத்தில் வாழ்ந்து வந்த வாஸ்து மகான் மூத்ரகெட ராமராவ் ஐயா மூலமாக பின்பு நமது பிரதட்டுர் திருப்பதி கௌரி ரெட்டி ஐயா அவர்கள் மூலமாக ஆந்திர தேசம் முதற்கொண்டு, கன்னட தேசம் முதற்கொண்டு, நமது தமிழகம் கடந்து மலைநாடு வரை பரவி இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அப்படிப்பட்ட நம்முடைய குருநாதர்கள் சொன்ன விஷயங்களை முதன்மைப் படுத்தி, பழமாக இருந்த கருத்துக்களை சாறு பிளிந்து, அதாவது அன்னப்பறவை எப்படி பாலை மட்டுமே பிரித்து தண்ணீரை விட்டு விடுகிறதோ அதுபோல நம்முடைய குருவாக இருக்கக்கூடிய மகான்கள் சொன்ன வாஸ்து சாஸ்திர விஷயத்தை பிரித்துக் கொடுக்கிற மனிதராக இன்று நான் மாறியிருக்கிறேன் என்று சொன்னால் முழுக்க முழுக்க அவர்களுடைய ஆசீர்வாதமும், அவர்கள் நமக்கு மறைமுகமாக இருந்து உதவி செய்கிற,மற்றும் பிரபஞ்ச சக்தியும் தான் காரணம் என்பேன்.