ரியல் எஸ்டேட் வாஸ்து | real estate vastu tamil

வாஸ்து அமைப்பில் மனைகளை பிரிப்பது என்பது மிகப்பெரிய ஒரு கஷ்டமான வேலை என்று சொன்னால், மிகப்பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்து அதை தொழிலாக செய்கிற ரியல் எஸ்டேட் அன்பர்கள் வாஸ்து விதிகளை அவர்கள் மனை பிரிப்பதில் உட்புகுத்தி செய்யும் பொழுது அவர்களும் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் விற்கிற மனையை வாங்குகிற மக்களும் வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் எந்த மனையும் எதிர்மறை தெருக்குத்து இல்லாமல் அமைத்துக் கொடுக்கும் பொழுது   புரமோட்டர்ஸ் வெற்றி பெற்ற மக்களாக இருப்பார்கள். அந்த வகையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்துகிற உரிமையாளர் ஒரு  இடத்தை வாங்கும் போதே அந்த இடத்திற்கான வழியை நிர்ணயம் செய்து விட வேண்டும் . அந்த வகையில் மிகத் துரிதமாக அனைத்து இடங்களும் விற்பனை ஆகிய வழியை அவர்கள் பிரதான வழியை சரியாக வாஸ்து விதிகளுக்கு ஏற்படுத்தும் பொழுது உடனடியாக அனைத்து மனைகளும் விற்பனை ஆகி விடும்.  எப்படி சாலைகளை அமைத்துக் கொடுத்தால் வெற்றி பெற்ற ரியல் எஸ்டேட் மனிதர்களாக மாற முடியும், மனைகளும் வாஸ்து விதிகளுக்கு பொருந்தி வரும் என்பதை பார்ப்போம்.

ஒரு பரந்து விரிந்த 7 , 8 ஏக்கர் முதல் கொண்டு 80 முதல்800 ஏக்கர் வரை இருக்கின்ற பொழுது அதில் நுழையக்கூடிய வழியானது வடக்கு பகுதியில் இருந்து வடக்கு மத்திய பாகத்திற்கு உள்ளாக மொத்த மனைக்கும்  பிரதான வழி கிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். இரண்டாவதாக கிழக்கிலிருந்து உள்நுழையும் போது பிரதான வழி என்பது வடக்கில் இருந்து தொடங்கி கிழக்கின் மத்திய பாகத்திற்கு உள்ளாக   பிரதான வழி இருக்க வேண்டும். தெற்கு பகுதியில் இருந்து மொத்தம் மனைகளுக்கு உள் நுழையக் கூடிய பிரதான வழியானது தென் கிழக்கு மத்திய பாகத்திற்கு உள்ளாக உள்ளே நுழையக் கூடியதாக இருக்க வேண்டும். அதுவே மேற்கு பார்த்த வழியாக இருக்கின்ற பொழுது மேற்கு வடமேற்கு பாகத்தில் இருந்து மேற்கு மத்திய பாகத்தில் மிகாது உள்ளே நுழைகிற பிரதான வழி இருக்க வேண்டும். இதனை தவிர்த்து புறநகர், குடியேற்றம் புதிதாக அமைக்கும் பொழுது அந்த காலத்தில் பேட்டை என்று சொன்னார்கள்.இடையே பாளையம் என்று சொன்னார்கள்.எல்லா வார்த்தைகளும் ஒரே பொருள் படும் வார்த்தைகள் தான்.ஆக இன்று நகர் என்று மாறி இருக்கிறது . அந்த நகருக்கான பிரதான வழி என்பது எதிர்மறை பாதையாக இருக்கக்கூடாது . தெற்கு பார்த்த பகுதி மீது உள்ள நுழையும் வழி என்பது தெற்கு  தென்மேற்கு சார்ந்தும், மேற்கு பார்த்து உள்ளே நுழைகிற வழி என்பது தென்மேற்கு மேற்கு சார்ந்தும், வடக்கு புறத்தில் இருந்து உள்ளே நுழையமுடியாது வடமேற்குப் பகுதி வடக்கு  நுழைகிற அமைப்பாகவும், கிழக்குப் பகுதியில் நுழையும்போது தென்கிழக்கு  கிழக்கு பகுதியில் போகிற அமைப்பாகவும் இருக்கும்பொழுது வாஸ்துவின் ரீதியாக மிகப்பெரிய குற்றமாகும். பெரிய அளவில் விற்பனையை சந்திக்காத, புரமோட்டர் மனைகளாக மாறிவிடும். ஒரு மனைக்கு உள்ளே நுழைகிற வழி என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் எந்த மனைகளுக்கும்  நீங்கள் வரைபடம்அதாவத  மனை பிரிக்கும் பொழுது எந்த மனையும் வடமேற்கு வடக்கு பகுதியில் இருந்தோ, தென்மேற்கு தெற்கு பகுதியிலிருந்தோ, தென்மேற்கு மேற்கு பகுதியிலிருந்தோ, தென்கிழக்கு கிழக்கு பகுதியிலிருந்தோ, ரோடு  ஏற்படுத்தக்கூடாது. மொத்த நிலத்தில் கிணறுகள் இருக்கின்ற பட்சத்தில் அது தவறான இடத்தில் இருக்கும் பொழுது, தவறான இடம் என்று சொல்லும்பொழுது, மேற்குப் பகுதியும், தெற்குப் பகுதியும், தென் கிழக்கு பகுதியிலும், வட மேற்கு பகுதியிலும் எக்காரணம் கொண்டும்  இருக்கக்கூடாது.பழைய இடத்தில்  கிணறு இருந்து நீங்கள் மனை பிறப்பதற்கு முன்பாகவே அது சார்ந்த கிணறுகளை மூடிய பிறகு மொத்தமாக வடகிழக்கு பகுதியில் அமைத்துக்கொள்ள வேண்டும் . அதே போல அந்த நகரின் பூங்கா அமைப்பு என்பது எக்காரணம் கொண்டும் அந்த மனைக்கு மொத்த மனைக்கு தென்மேற்கு பகுதியில், தெற்குப் பகுதியில், தென்கிழக்கு பகுதியில், மேற்கு பகுதி, வடமேற்குப் பகுதியில் எக்காரணம் கொண்டு வரக்கூடாது. ஏன் கிழக்குப் பகுதியிலும், வடக்குப் பகுதியும் கூட வரக்கூடாது . மொத்த இடத்திற்கு வடகிழக்குப் பகுதியில் பூங்கா சார்ந்த அமைப்பை அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல ஒரு சாலை அமைக்கிறார்கள், அந்த சாலையில் அழகாக மரங்கள் வைக்கிறீர்கள், அந்த மரங்கள் என்பது கிழக்கிலிருந்து மேற்காக செல்லும் சாலையில் வடக்கு புறத்தில் மட்டும் மரங்களை வைக்க வேண்டும். சாலையின் மின்சாரம் சார்ந்த கம்பங்களை மேல்நிலையில் வைக்கும்போது தெற்குப் புறத்திலும் , கீழ் நிலையாக வைக்கும்போது வடக்கு புறத்தில் அமைத்து கொள்ளலாம். அதேபோல் கழிவுநீர் செல்லக்கூடிய கால்வாய் அமைப்பை, கிழக்கிலிருந்து மேற்காக செல்லுகின்ற சாலையில் சாலைக்கு தெற்கு புறத்தில் அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. அதேபோல வடக்கிலிருந்து தெற்காக செல்லுகின்ற சாலையில் மரங்கள் என்பது  சாலைக்கு கிழக்கு புறத்திலும், கால்வாய் கழிவுநீர் செல்கிற கால்வாய் என்பது சாலைக்கு மேற்புறத்திலும் செல்லுகிற அமைப்பாக ஏற்படுத்த வேண்டும். இந்த விதிகளை அனைத்து சாலைகளுக்கும் பின்பற்றும் போது, அது அற்புதமான மனையைப் பிரித்து கொடுக்கிற நிறுவனமாக மாறி மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெறும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *