ராசிக்கு வாசல் வாஸ்து Which Facing House is Good for All Rasi 

Best House Facing Based On Nakshatra 

ஒரு வீடு இருக்கிறது. அதன் வாசல் என்பது மிக மிக முக்கியம். எப்படி மனித உடலுக்கு வாய் எப்படி பிரதானம் அதுபோல, வாசல் என்பது பிரதானமாக ஒரு இல்லத்திற்கு இருக்கிறது அந்த வகையில் கிழக்கு பார்த்த வீடு களுக்கு வாசல் வடகிழக்கில் வரவேண்டும். தெற்கு பார்த்த வீடுகளுக்கு தென்கிழக்கில் வரவேண்டும். மேற்கு பார்த்த வீடுகளுக்கு வடமேற்கில் வரவேண்டும். வடக்கு பார்த்த வீடுகளுக்கு வடகிழக்கில் வடக்கு வரவேண்டும். இவை அல்லாது தெற்கு பார்த்த வீடு களுக்கு வடக்கு கிழக்கில் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். மேற்கு பார்த்த வீடுகளுக்கு வடகிழக்கு வடக்கு வைத்துக்கொள்ளலாம். இதனைத் தவிர ராசி முறையில் வாசல் வைப்பதென்பது வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் கட்டுகிற வீட்டின் திசை காட்டி, அந்த திசை பொருந்துகிறதா என்று பார்த்து வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு மேஷ ராசி மற்றும் சிம்ம ராசி மற்றும் தனுசு ராசிக்கு கிழக்கு வாசலும், ரிஷப ராசி மற்றும் கன்னி ராசி மற்றும் மகர ராசி சார்ந்த வாசல் என்பது தெற்கு வாசல் ஆகும். மிதுன ராசி துலாம் ராசி கும்ப ராசிக்கு மேற்கு வாசல் ஆகும். விடுபட்ட கடைசி ராசியான கடக ராசிக்கும் விருச்சிக ராசிக்கும் மீன ராசிக்கும் வடக்குவாசல் ஆகவும் நமது சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மீன ராசி சார்ந்த மனிதர் வடக்குவாசல் வைக்கும் பொழுது வாசல் திசை காட்டி 360 காட்ட வேண்டும். அப்படி காட்டாமல் மாற்றி காட்டும்பொழுது வடக்குவாசல் அவருக்கு ராசியாக இருக்காது. அதனை தெரிந்து கொண்டு வாசல் வையுங்கள்.

There is a house. Its threshold is very important. Just as the mouth is important to the human body, the door is important to a house, so for east-facing houses, the door should be in the north-east. South-facing houses should come in South-East. West facing houses should come in North West. For houses facing North, North should come from North East. Otherwise, it can be assumed that houses facing south are in north-east. North East North can be kept for west facing houses. Apart from this, keep in mind that the door is placed according to the zodiac. But check the direction of the house you are building and see if the direction matches, for you Aries and Leo and Sagittarius the east door is for Taurus and Virgo and Capricorn is the south door. Gemini Libra is the western gateway to Aquarius. It is also mentioned in our scriptures that the last missing sign is Cancer, Scorpio, Pisces and the North Gate. But when a person belonging to the Pisces sign puts a north door, the door direction should show 360 degrees. If it is not shown like that, then the north door will not be his sign. Know that and keep the door open.

 332 total views,  2 views today