மின் சாதனங்கள் வாஸ்து | EB box vastu

வீட்டில் மின்சார சாதனங்கள், டிவி பாக்ஸ், மின்சார பேனல் போர்டு சார்ந்த விஷயங்களை எங்கு வைக்க வேண்டும் என்கிற குழப்பம் நிறைய மக்களுக்கு இருக்கிறது. அந்த வகையில்  வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, தொழிற்சாலையாக இருந்தாலும் சரி,  EB பேனல் போர்டு சார்ந்த, மின்சார மோட்டார் சார்ந்த, ஜெனரேட்டர் சார்ந்த, பேட்டரி, யுபிஎஸ், இன்வெர்ட்டர் சார்ந்த விஷயங்களை ஒரு இல்லத்தில் எங்கு வைத்தால் நன்மையை கொடுக்கும் என்கிற விஷயத்தைத் தெரிந்து கொள்வோம். அதேசமயம் எங்கே இருந்தால் தீமையை கொடுக்கும் என்கிற விஷயத்தையும் அறிந்து கொள்வோம்.

chennaivastu eb box

அந்த வகையில் மின்சார சாதனங்கள் எனும் பொழுது ஒரு இல்லத்தில் வடமேற்கு பகுதியில் பிரதான படுத்தப்படுகிறது. நீங்கள்  மின்சார வாரியத்தில் இருந்து புதிதாக  கனெக்சன் வாங்குகிறீர்கள் அதனை ஒரு இல்லத்தில் வட மேற்கு சுவரில்  அல்லது, வடமேற்கு அறை ஏற்படுத்தி அல்லது, வடமேற்கு சுற்றுச்சுவரின் வடமேற்குப் பகுதியில் அமைத்துக்கொள்வது நல்லது. அப்படி இல்லாது இரண்டாம் பட்சமாக கிழக்கு பார்த்த வீடுகளுக்கு  தென்கிழக்கு மூலையில் வாங்கிக்கொள்ளலாம். தென்கிழக்கு  சார்ந்த பகுதியில் ஒரு கூண்டு அமைப்பை ஏற்படுத்திய  அறை ஏற்படுத்தி அல்லது, இல்லத்தின் சுவரில் மின்சாரம் சார்ந்த பேனல் போர்டு , மின்சார மோட்டார் சார்ந்த விஷயங்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் ஒரு இல்லத்தின் வடகிழக்கு பகுதியில், தென்மேற்கு பகுதியில் மின்சாரம் சார்ந்த விஷயங்களை உட்படுத்தக் கூடாது . அப்படி அமைக்கின்ற போது மின்சாரம் என்று சொல்லும்பொழுது என்னை பொறுத்த அளவில் பெண்தன்மை வடிவில் பார்க்கப்படுகின்றது. ஆண் தன்மையுள்ள இடங்களான வடகிழக்கு பகுதியில் தென்மேற்குப் பகுதியில் மாற்றி வைக்கும் போது ஒரு இல்லத்தின் இரட்டை நிலை தன்மையில் மாறுபாடு ஏற்பட்டு அங்கு வசிக்கின்ற மக்களின் வாழ்க்கையில் குழப்பத்தை கொடுக்கும். ஆகவே கட்டாயமாக இந்த விதியை நீங்கள் பின்பற்ற வேண்டும். ஒரு சில மக்கள் யுபிஎஸ் சார்ந்த இன்வெர்ட்டர் சார்ந்த விஷயங்களை இல்லத்தின் வடகிழக்குப் பகுதியில், இல்லத்தின் வடக்கு பகுதியில், வைத்திருப்பார்கள். என்னைப் பொறுத்த அளவில் இந்த இரண்டு பகுதிகளையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். மிகச்சரியான இன்வெர்ட்டர், பேட்டரி யூபிஎஸ், இந்த விஷயங்களை உதாரணமாக இல்லத்தில் ஒரு பகுதியாக இருக்கிற ஸ்டோர் ரூம் அருகில், உட்புற படிகள் இருக்கும் போது அதன் உட்பகுதியில் அமைத்துக்கொள்ளலாம். அதனை தவிர்த்து மாற்றி வைக்கும் போது தவறாக பார்க்கப்படுகிறது. அதே போல இல்லத்தில் உள் பகுதியில் மின் விளக்குகள் எங்கு வரவேண்டும்?. ஏர் கண்டிஷனர் எங்கு வரவேண்டும்?.அதாவது குளிர்சாதனப் பெட்டி எங்கே வரவேண்டும்?. வாஷிங் மெஷின் எங்கு வரவேண்டும்?. என்கிற விஷயங்களை சரியான இடத்தில் பொருத்தி, சரியானபடி செய்து கொள்ளவேண்டும் . அதேபோல் சமயலறை சார்ந்த மிக்ஸி மற்றும் கிரைண்டர், குளியலறை,கழிவறை சார்ந்த வாஷிங் மெஷின் ஹீட்டர் போன்ற விஷயங்களை எங்கு வைக்கலாம் என்று பார்க்கும் பொழுது வாஷிங் மெஷின் மட்டும் ஒரு இல்லத்தின் தென் கிழக்கு பகுதியிலோ, அல்லது மத்திய கிழக்கு பகுதியிலோ, மேற்கு சார்ந்த பகுதியிலோ, வடமேற்குப் பகுதியில் வடக்கு சேராது இருக்கிற மேற்குப்பகுதியில்  தாராளமாக வைத்துக் கொள்ளலாம். பிரிட்ஜ் என்கிற குளிர்சாதனப் பெட்டியை ஒரு இல்லத்தில் தென்கிழக்கு அறையின் வடமேற்கு பகுதியில் வைத்துக்கொள்ளலாம். அதே போல கிரைண்டர் மிக்ஸி சார்ந்த விஷயங்களை அதே இடத்தில் வடமேற்கு அப்பகுதியில் வைத்துக்கொள்ளலாம்.பாத்ரூம் வாட்டர்  ஹுட்டர் என்பது வடமேற்கு பகுதியில் வருவது போல அமைக்கவும். ஆக ஒவ்வொரு விஷயங்களையும் மின்சாரம் சார்ந்த பொரூள்களை யோசித்து வாஸ்துவை உட்புகுத்தி சரியாக செய்ய வேண்டும். ஒரு சில மக்கள் வடக்கு பார்த்த வீடு களில், கிழக்கு பார்த்த வீடு களில், இந்த பெரிய தவறை செய்திருப்பார்கள். என்னை பொறுத்த அளவில் இது சிறிய விஷயமாக இருந்தாலும் கூட பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் வடக்கு பார்த்த, கிழக்கு பார்த்த வீடு களுக்கு உள் நுழையக் கூடிய இடத்திலேயே வட கிழக்கு பகுதியிலேயே மின்சாரம் சார்ந்த மெயின் ஸ்விட்ச் என்று சொல்லக் கூடிய அனைத்து விதமான ஜங்ஷன் பாக்ஸ் ஆக இருக்கக் கூடிய ஒவ்வொரு அறைக்கும் அந்த இடத்தில் மின்சாரம் பிரிந்து செல்லக் கூடிய மின்சார பேனல் போர்டு வீட்டின் உள்பகுதியில்  சுவரோடு சுவராக பொருத்தி இருப்பார்கள். எக்காரணம் கொண்டும் இந்த தவறுகளை செய்யக்கூடாது. அதிகபட்சமாக கிழக்கு பார்த்த, வடக்கு பார்த்த வீடுகளில் இந்த தவறு இருக்கும். அதே சமயம் மேற்கு பார்த்த, தெற்கு பார்த்த வீடுகளில் இந்த தவறுகளை செய்ய மாட்டார்கள். ஒரு சில மக்கள் இன்றைய காலகட்டத்தில் எலக்ரிக் இருசக்கர வாகனங்கள் புதிதாக பெருகி கொண்டிருக்கிறது. புதிதாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில்  என்று சொல்லக்கூடிய எலக்ட்ரிக் வானகத்தின் சார்ஜர் ஏற்றக்கூடிய முக்கிய பகுதியை ஒரு இடத்தில் வடமேற்கு பகுதியில், தென்கிழக்கு பகுதியில் வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சில மக்கள் வடக்கு பார்த்த, கிழக்கு பார்த்த வீடுகளில் வாகனம் நிறுத்தக்கூடிய இடத்திலேயே வடகிழக்குப் பகுதியில்சார்ஜர் அமைப்பு ஏற்படுத்துவார்கள். அந்த அமைப்பு என்பது வேண்டாம்.ஆக இல்லத்தில் மின்சார சாதனங்கள் சார்ந்த விசயத்தில் நெருப்பில் என்ன வாஸ்து விதிகளோ அதனை உட்புகுத்தி கொள்ள வேண்டும்.

 670 total views,  1 views today

Leave a Comment

Your email address will not be published.