மார்கழி நாள் 12

மார்கழி 12
#december_27

மார்கழி திருவிழா நாள்: 12

#secrets_of_vastu:
#வாஸ்து_இரகசியம்

#ஆண்டாள்_நாச்சியார்
அருளிய #திருப்பாவை பாசுரம்: 12

#கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் #இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய #எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?

#மாணிக்கவாசக பெருமானின்
#திருவெம்பாவை 12ம் பதிகம்

#ஆர்த்த_பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் #சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

பொருள்: தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் #கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான #சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, சிவாயநம என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.

மேலும் விபரங்களுக்கு,

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995
           

www.chennaivasthu.com

whatsapp மார்கழி திருவிழா நாள்,மார்கழி மாத விழாக்கள்,திருவாய்மொழித் திருவிழா,MARGAZHI THIRUVIZHA – DAY,ஆண்டாள் திருப்பாவை,மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி திருவெண்பாவை ,

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

சென்னை_வாஸ்து
#chennai_vastu
#வாஸ்து, #உளவியல்,#Chennaivastu
#திருவெம்பாவை
#ஆண்டாள் #திருப்பாவை #பாசுரம்5 #பாசுரவிளக்கம் #தத்துவவிளக்கம் #மார்கழி #பாடல்வரிகள் #சென்னைவாஸ்து #ஆன்மீகம்
#மார்கழி_மகத்துவம்_-_10
#திருப்பாவை #திருவெம்பாவை
#ஆழ்வார்கள் #நாயன்மார்கள்
#கும்பகர்ணன் #இராவணன்
#ஆன்ம_உறக்கம் #அஞ்ஞானம்_அகற்றல்
#ஆண்டாள் #மாணிக்கவாசகர்
#வைணவம் #சைவம்
#காஞ்சி_வாஸ்து #வாஸ்து #ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம் 2015 #தமிழ்_வாஸ்து #திருச்சி_வாஸ்து
#erode_vastu
#chennai_vasthu  
2009 முதல் மயன் வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள் வாஸ்துவோடு பயணம்
#Andal_Vastu 2015  first batch training expert
#ஆண்டாள்_வாஸ்துவின் 2015   முதல் வாஸ்து வகுப்பில்#பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்
#Chennaivastu
#திருவெம்பாவை
#ஆண்டாள் #திருப்பாவை #பாசுரம்5 #பாசுரவிளக்கம் #தத்துவவிளக்கம் #மார்கழி #பாடல்வரிகள் #சென்னைவாஸ்து

Loading