மனை வாங்கும் விதிகள்

ஒரு புதிய மனை வாங்குகிறோம். யாரிடம் வாங்கலாம் யாரிடம் வாங்க கூடாது. என்பதனை தெரிந்து கொள்வோம்.

மனைகள் வாங்கும் பொழுது அறிவாளிகள், ஆன்மீக பெரியோர்கள், விஞ்ஞானப் பெருமக்கள் பணம் படைத்த செல்வந்தர்கள், தம்பதி சகிதமாக இருக்கின்ற மனிதர்கள் , கோயில் மூலமாக விலை கொடுத்து வாங்கும் மக்கள், அரசின் மூலமாக வாங்கும் மனைகள், செல்வ செழிப்புடன் இருந்தது வாழ்ந்து இருந்தவர்களின் குடும்ப திருமணத்திற்காக, குடும்ப கல்விக்காக, குடும்பம் அடுத்த கட்டம் செல்ல வேண்டும் என்பதற்காக, விற்பனைக்கு வருகின்ற மனைகளை தாராளமாக வாங்கலாம்.  வீடு கட்டுவதற்காக இருந்த மனைகளை, அவர்களின் குழந்தைகள் மேற்படிப்பு செலவிற்காக விற்பனைக்கு வரும் மனைகளை தாரளமாக வாங்கிக் கொள்ளலாம். யாரிடம் வாங்கக்கூடாது என்பதனை தெரிந்து கொள்வோம். வங்கியில் அடமானம் இருந்து மீட்க முடியாத நிலையில் இருக்கும் மனைகள், நீதிமன்றம் ஏலம் விடுகிற மனைகள். குற்றவாளிகளாக இருந்து தண்டனை பெற்றவர்களின் மனைகள், கோயில் நிலத்தை அபகரித்து கட்டிய மனைகள், சொத்து அபகரிப்பு,  அரசாங்கத்தை ஏமாற்றி அபகரித்த சொத்து, குடும்ப வசதி வாய்ப்பு இல்லாத ஒரு மனை,அகம், புறம் சார்ந்த செல்வ நிலையில் இல்லாத மனிதர்கள் மனை,  மனநிலை மனநிலை சரியில்லாத மனிதர்களின் மனை, கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் இல்லாமல் இருப்பது அல்லது, விவாகரத்து நடந்து விடுவது, குழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனை, தீராத நோய் இருப்பவர்களின் மனை, சன்யாச வாழ்க்கை ஏற்படுத்திக் கொண்ட மனிதர்களின் மனை, சாபங்கள் பெற்ற மனை, மாந்திரீகம், மாந்திரீகர் வாழ்ந்த மனை, போன்றவற்றை வாங்கும்போது கவனத்தோடு வாங்குதல் நலம். இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் என்பது தவறான ஒரு எதிர்மறை காட்சிகளை கண்ணில் பார்க்கும் பொழுது, நீங்கள் நீங்களாகவே சுய முடிவாக வாங்கவேண்டும் என்கிற முடிவை செய்யாது, ஒரு வாஸ்து நிபுணர் துணைக்கு வைத்துக் கொண்டு வாங்கும் பொழுது மனையின்  எதிர் தாக்கத்திலிருந்து விடுபட முடியும்.

Loading