மனைகளில் தெருகுத்து

மனைகளில் தெருக்குத்து தெருதாக்கம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக மனைகள் வாங்கும் பொழுது தெருக்குத்து உள்ள இடத்தில், தெரு தாக்கம் உள்ள இடத்தில் ஒரு சிலர் மாதா கோயிலை சிறிய அளவில் வைப்பதும், எடுத்துக்காட்டு வால்டாக்ஸ் ரோட்டில்  மாதா கோயிலை பிரதிஷ்டை பண்ணி இருப்பார்கள் அது போல, மற்றும் பிள்ளையார் கோயில்கள் வைப்பார்கள். அப்படி அமைகின்ற போது அது நல்லதா? அல்லது தவறான தெருத்தாக்கம் என்பதைப் பற்றி தெரியாது அவர்களுடைய இஷ்டம் போல அமைத்துக் கொள்வார்கள். மேஸ்திரி, கொத்தனார், இன்ஜினியர் சொல்கிற அமைப்பின் படி வைத்துக் கொள்வார்கள். இந்த இடத்தில் கூறுகின்ற விஷயம் , எல்லா தெருத்தாக்கம், தெருக்கூத்து நல்லவையும் கிடையாது. தீமையும் கிடையாது.இதனை  தெரிந்துகொண்டு செய்யாமல், இந்த மாதிரி செயல்களை செய்வது என்பது தவறு. ஆனால் என்னை பொறுத்த அளவில் நல்ல தாக்கம் உள்ள இடத்தில் கோயில்களை அமைத்துக் கொள்வது மிக மிகத் தவறு . அதே சமயம் தவறான தெருத்தாக்கம் இருக்கின்ற இடத்தில் கோயில்களை அமைத்துக்கொள்வது என்பதும் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். இந்த இடத்தில் பதினாறு விதமான அதாவது நாம் சோடசம் என்று சொல்கிற 16 பொருத்தங்களைப் பற்றி சொல்கின்றோம் . அதுபோல 16 தெருதாக்கம்  மற்றும் தெருவை சார்ந்த விஷயத்தை தெரிந்து கொள்வது நல்லது . அந்த வகையில் வரைபடத்தில் கொடுத்துள்ளது போல ஒரு மனை இருக்கிறது. அதன் வடக்கு வடகிழக்கு வரும்பொழுது நல்லதாகவும் வடக்கு மத்திய பாகத்தில் உள்ளது இரண்டும் கெட்டான் வடக்கு வடமேற்கில் வருவது எதிர்மறை தீர்க்கமாகவும் அதே போல அதற்கு எதிர்ப்புறம் ஆன தெற்கு திசையில் வருவதென்பது இதே பலன்களை கொடுப்பது போலவும் இருக்கும் அதே போல கிழக்கு வடகிழக்கு பகுதியில் வருகின்ற தெருக்குத்தும் நல்ல பலன்களைக் கொடுக்கும். கிழக்கு மத்திய பாகத்தில் வருகின்ற தெரு பார்வை அல்லது தெருக்கக்ஷகுத்து என்பது இரண்டும் கெட்டான் பலன்களைக் கொடுக்கும். தென் கிழக்கு தெற்கில் இருந்து வடக்கு கிழக்கில் இருந்து வருகிறது என்பதும் எதிர்மறை பலன்களை கொடுக்கும். இதற்கு நேர் மேற்குப் புறத்தின் இதே பலன்களை கொடுக்கிற நிகழ்வாக இருக்கும் சொல்லாமல் விட்டு போன 12 தெரு தாக்கங்கள் தவிர மூலைகள் சார்ந்த தெருக்குத்துக்கள் அல்லது தெரு பார்வைகள் பற்றி சொல்லும் பொழுது, வடகிழக்கில் இருந்து வருகிற தெருக்குத்து நேர் தெருக்கூத்தாக வருகின்ற பொழுது, அற்புதமான பலன்களை கொடுப்பதாகவும், தென் மேற்கில் இருந்து வருகின்ற தெருக்குத்து  வரும்பொழுது நேர் எதிர்மறை பலன்களை கொடுப்பதாகவும், வடமேற்கு மூலையில் வருகின்ற தெருக்குத்தும், தென்கிழக்கு மூலையில் வருகின்ற தெருக்குத்து, தெருக்குத்து வேலைகளை செய்யும் என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மாதிரி நேர்மறை தெருக்குத்து அல்லது தெருவில் இருக்கின்ற இடங்களில் வசிக்கும் பொழுது நல்ல முன்னேற்றம் வாழ்க்கையில் அனைத்து செயல்களும் வெற்றி பெறக் கூடிய ஒரு நிகழ்வு, வெளிநாடுகள் சார்ந்த தொடர்பு செல்வச் செழிப்பு, மகிழ்ச்சி, ஒழுக்கமான வாழ்க்கை, அறிவாற்றல் பெற்ற மக்கள் இருப்பது, இப்படி அடுக்கிக்கொண்டே செல்கிற பலன்கள் கிடைக்கும். இடத்தில் இருக்கிற மக்களுக்கு எந்த மாதிரி பலன்கள் நடக்கும் என்று பார்க்கும் பொழுது, ஒரு குடும்பத்தில் வாழும் தலைவன் அல்லது, அல்லது மகன் அல்லது மகளின் கணவன் இவர்களுக்கு தடைகளைக் கொடுக்கும். இது தென்மேற்கு சார்ந்த குற்றங்கள் இருக்கும்பொழுது. அதேபோல அந்த மனைகளில் வசிக்கின்ற மக்கள் , ஆண்கள் பகுத்தறிவாள மனிதர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர்  மிகுந்த ஆன்மீகத்து மனிதர்களாக இருப்பார்கள். இந்த மாதிரி மனைகளில் வசிக்கின்ற போது, எதிர்மறை தெருக்குத்து சார்ந்த இடத்தில் வசிக்கின்ற மக்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், தோல் வியாதி போன்ற வியாதிகள் உருவாகும். ஒரு சிலர் மதம் மாறும் நிலை கூட ஏற்படும் . உறவினர்களின் நிலை என்பது உறவு இல்லாத நிலையாக இருக்கும். ஆக நல்ல தெருக்குத்து தவறான தெருக்குத்து சார்ந்த விஷயங்களை தெரிந்துகொண்டு ஒரு இல்லத்தை அமைப்பது நல்லது.

 53 total views,  1 views today