பூமி பூஜை வாஸ்து பூஜை | vastu bhoomi pooja tamil

புதிய கட்டிடம் கட்டும் பொழுது பூமி பூஜை என்கிற வாஸ்து பூஜை   முதல் சுபகாரியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எப்படி பூமி பூஜை செய்ய வேண்டும். அது எந்த நாள் பொருந்தி வரும் என்பதனை பார்ப்போம். வாஸ்து பகவான் விழிக்கும் நேரங்களாக இருக்கக்கூடிய நேரத்தை தெரிந்து கொள்வோம். வாஸ்து பூஜை என்னைப் பொறுத்தளவில் வாஸ்து நேரங்கள் என்பது நல்ல நாளாக, நல்ல நேரமாக இருந்தால் அந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அதே மாதத்தில் வேறொரு முகூர்த்த நாளை தேர்வு செய்து கொள்வது நலம் என்று செல்வேன். அந்த வகையில் வாஸ்து பகவான் விழித்தெழும்  நேரங்கள் எவை என்று பார்ப்போம்.  தை மாதம் 12ஆம் தேதி காலை 9.47 முதல் 11.17 வரை.
மாசி மாதம் 22ஆம் தேதி 9:30  லிருந்து 11.08 வரை. சித்திரை மாதம் பத்தாம் தேதி காலை 8 மணியிலிருந்து ஒன்பது முப்பது மணி வரை. வைகாசி மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி காலை 9 மணியிலிருந்து காலை  10.34 வரை. ஆடி மாதம் வாஸ்து பகவான் கண்விழிக்கிற  நிகழ்வு இருந்தாலும், ஆடி மாதம்  சுபகாரியங்கள் செய்யாத காரணத்தால் ஆடி மாத நேரத்தில் நான் கொடுக்கவில்லை. ஆவணி மாதம் 6 ஆம் தேதி மதியம் 2.24 லிருந்து 4.05 வரை. ஐப்பசி மாதம் 11ஆம் தேதி காலை 6 .50 லிருந்து 8.20 வரை. கார்த்திகை மாதம் எட்டாம் தேதி காலை 10:11 முதல் 11 நாற்பத்தி ஒன்று வரை. இந்த நேரங்கள் உங்களுக்கு நல்ல நாளாக இருந்தால் உபயோகித்துக் கொள்ளுங்கள். இல்லை என்று சொன்னால் வேறு முகூர்த்த நாளை தேர்வு செய்யுங்கள்.

வாஸ்து பூஜைக்கு உரிய பூஜை விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் ஒரு விநாயகப் பெருமானின் திருவுருவம் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். முதலில் ஒரு தலைவாழை இலை விரித்து அதில்தான் எல்லா பொருட்களையும் நாம் வைக்க வேண்டும். தரையோடு தரையாக வைக்கக்கூடாது. மஞ்சள் கிழங்கு, நவதானியம், தேங்காய் 3. பூ .மஞ்சள் குங்குமம், விபூதி, கற்பூரம்,சந்தனம், வாழைப் பழம், ஊதுபத்தி, வெற்றிலை பாக்கு, இனிப்பு வகைகள், எலுமிச்சை,  பூசணிக்காய்,  அவல் பொரிகடலை, நாட்டு சர்க்கரை,  தலைவாழை இலை வைத்து நிறை விளக்கு எண்ணைத் திரி வைத்து, புதிய செங்கற்கள் 9 மேல் பகுதியில் மஞ்சள் குங்குமம் தடவி வைக்கவும். 5 குடம் தண்ணீர், கூடவே ஒரு லிட்டர் பால்வேண்டும். பால் என்பது முடிந்த அளவிற்கு நாட்டு மாட்டின் பாலை வாங்குவது சிறப்பு. முடிந்தால் இரண்டு குத்து விளக்குகள், இல்லை என்றால் மண் விளக்கில்  வைத்துக்கொள்ளவும். காற்று அடிக்கிற காலகட்டத்தில் விளக்கு ஏற்றுவது என்பது கடினம். அதை இறைவனாகவே வைத்துக்கொள்ளலாம்.

இந்த இடத்தில் பூஜை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். 5 குடம் தண்ணீர் மேற்குப் புறத்தில் வைக்க வேண்டும். 9 செங்கற்களை அதற்கு தெற்கு வடக்காக அடுக்கி வைக்க வேண்டும். தலைவாழை இலை வைத்து, இரண்டு புறமும் குத்துவிளக்கேற்றி, நடுவில் விநாயகப்பெருமானை வைத்து , வாழை இலையில் பூஜை பொருட்கள் அனைத்தையும் வைக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் யார் பாலக்கால் போடுகிறார்களோ, அவர்கள் வரிசையாக வடக்கு பார்த்து நிற்க வேண்டும்.   விநாயகப் பெருமான் முன்பு செங்கல் ஆகியவற்றை ஒன்றாக கிழக்கு நோக்கி அமைத்து, வாழை இலையில் தண்ணீர் தெளித்து, அவல் பொரிகடலை அரை கிலோ நாட்டு சக்கரை அனைத்தையும் கலந்து வைக்கவும். பின்பு சுவாமி படத்திற்கு குடும்பத்தலைவி நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றவேண்டும். உரிமையாளரின் தாய், மனைவி, மாமியார், யார் வேண்டுமானாலும் விளக்கு ஏற்றலாம். மூன்றடிக்கு பல்லம் எடுத்த மூன்றடிக்கு மூன்றடி பலம் எடுத்து ஒன்பது செங்கல்களை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி முறையாக அடுக்கி வைக்கவேண்டும். செங்கல்களை மேல் குங்குமம் மஞ்சள் பூசி வைத்து, வாஸ்து பகவானை நினைத்து செங்கல்கள் மேற்பகுதியில்  நவதானியங்களை போடவேண்டும்.பிறகு செங்கல் அனைத்திற்கும் தீபாராதனை காட்ட வேண்டும். இந்த பூஜை என்பது ஒரு கட்டிடத்தில் வட கிழக்கு பகுதியிலோ அல்லது, கட்டிடத்தின் மத்திய பாகத்தில்  தாராளமாக செய்யலாம். எந்த இடத்திலும் பூஜை செய்த இடம்,கட்டிடம் கட்டும்போது கட்டடத்திற்கு வெளியில் சென்று விடக்கூடாது. என்று சொன்னால் உங்களுடைய வரைபடங்களை நீங்கள் மாற்றும் பொழுது கண்டிப்பாக அந்த தவறை செய்து விடக்கூடாது. இந்த இடத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் பூஜை செய்தால் கூட அவரவர் மதம் சார்ந்த நிகழ்வுகளை முதன்மைப்படுத்தி இந்த பூஜை  செய்துகொள்ள வேண்டும். கிறிஸ்தவ மக்கள் புதிதாக வேலை துவங்கும் போது அவர்களுடைய தேவ ஊழியர்களை வரவழைத்து கிறிஸ்தவ முறைப்படி பூஜை செய்து கொள்ளலாம். இஸ்லாமியர்களும் அவர்களுடைய குருமார்களை அதாவது மெளல்வி அவர்களை அழைத்து பூஜை செய்து கொள்ளலாம்.மற்றவர்கள் முடிந்தால் வாஸ்து காயத்ரி என்று சொல்லக்கூடிய மந்திரத்தை தாராளமாக புத்தகம் வைத்துக்கூட படித்துக்கொள்ளலாம்.

ஓம் அனுக்ரஹ ரூபாய வித்மஹே,
பூமி புத்ராய தீமஹி,
தன்னோ வாஸ்து   ப்ரசோதயாத்.

அஷ்டதிக்கு பாலகர் துதிகளை கூட சொல்லலாம்.

அஷ்டதிக்கு பாலகர் ஈசானிய பாலகா போற்றி.
வளம் தரும் குபேரனே போற்றி.
உயிர் காக்கும் வாயு பகவானே போற்றி.
பசுமை தரும் வருணனே போற்றி.
அருள்தரும்
நிருதி பகவானே போற்றி.
தர்மவான் மிருத்யு போற்றி. சுப அக்னி பகவானே போற்றி. உயர்வைத் தரும் இந்திரனே போற்றி.
காக்கும் பிரம்மஸ்தான பகவானே போற்றி போற்றி. ஓம் நமச்சிவாய போற்றி போற்றி.

 1,302 total views,  2 views today

Leave a Comment

Your email address will not be published.