பால்கனி போர்ட்டிக்கோ வாஸ்து | Portico Vastu

வாஸ்து அமைப்பில் பால்கனி, போர்டிகோ மற்றும், முன் முகப்பு மண்டபங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிட அமைப்பு என்பது, ஒரு இல்லத்தில் வடக்கு பார்த்து, கிழக்கு பார்த்து இருக்கின்ற வீடுகள் ஆகட்டும் அல்லது, கட்டிடங்கள் ஆகட்டும் இதன் முன் பகுதியில் வருவதில் தவறு கிடையாது. ஆனால் ஒரு தெற்கு பார்த்த வீடு சார்ந்த  கட்டிடங்களுக்கு ஒரு தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த வீடுகளுக்கு, கட்டிடங்களுக்கு பால்கனி, போர்ட்டிகோ,
முன்பு மண்டபங்கள் என்பது இந்தப்  ஒரு பகுதிக்கு வரும்போது அதன் எதிர் பகுதிகளிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் கண்டிப்பாக வரவேண்டும். இல்லையென்றால் அந்த அமைப்பை தவிர்த்துக்கொள்வது நல்லது என்பேன். எப்படிப்பட்ட போர்டிகோ, பால்கனி சார்ந்த விஷயமாக இருந்தாலும் ஒரு தூண் இல்லாது ஒரு பில்லர் அமைப்பு இல்லாது அமைப்பது சாலச் சிறந்தது. அதனை விடுத்து பில்லர் அமைத்த ஒரு பதினாறு இருபது அடிகளுக்கு எந்த திசையை பார்த்த   போர்டிக்கோ அமைத்தாலும், வாஸ்து ரீதியாக தவறு. ஒரு பால்கனி அமைப்பு என்பது ஒரு மூலையை துண்டித்த அமைப்பாக அமைக்கக்கூடாது. ஒரு கட்டடத்திற்கு வெளியில் இழுத்த அமைப்பில் இல்லாது, முழுவதுமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும்  தாராளமாக தூண் இல்லாமல் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் தூண்  அமைத்து இழுத்த அமைப்பில் அமைப்பது , அல்லது முழுவதுமாக அமைப்பது வாஸ்து ரீதியாக தவறு என்றுதான் சொல்லுவேன். ஒரு பால்கனி அமைப்பில், ஒரு போர்டிகோ அமைப்பில் கிழக்கு பார்த்து ஒருசில மக்கள் அமைக்கலாம் என்று சொல்வார்கள் ஆனால், என்னை பொறுத்த அளவில் அது வேண்டாம் என்று தான் சொல்வேன். ஏனெனில் கிழக்கு ஒரு தூண் வைத்து போர்டிகோ அமைக்கும் பொழுது, பால்கனி அமைக்கும் போது, இடம் மாறி வளர்ந்ததாக  அக்னி பாகம் வீட்டுக்கு வெளியில் இருப்பதாக கணக்கில் சேர்ந்து விடும். அந்த வகையில் கிழக்கு பார்த்த வீடுகளில் ஒருவித தோஷங்களை கொடுத்து விடும். ஆகவே எந்த திசை  வீடாக இருந்தாலும் ஒரு பகுதியை இழுத்த அமைப்பில் போர்டிகோ அமைப்பது தவறு . ஒரு இழுத்த அமைப்பில் பால்கனி என்கிற விஷயம் தரைத் தளத்துக்கு பால்கனி ஒரு 10 இழுக்கும் பொழுது இரண்டாவது தளத்திற்கு  பதினோரு அடிகள் இழுக்கும் பொழுது அது தோஷமாக மாறி விடும். எப்பொழுதுமே தரைத்தளத்தை நீங்கள்  இரழுக்கின்ற பட்சத்தில், மேல் தளத்தை அதாவது இரண்டாவது தளத்தை ஆறடிக்கோ, எட்டடி  அல்லது அதே அளவுக்கு நிறுத்திக்கொள்வது நல்லது. இல்லை என்று சொன்னால் அந்த பால்கனி ஒரு குற்றமுள்ள பால்கனியாக மாறிவிடும். ஒரு சில இடங்களில் மூலைகளில் ஒருபால்கனி அமைப்பை ஏற்படுத்தி இருப்பார்கள். ஒரு சில இடங்களில் வட்ட வடிவில் போர்டிகோ அமைத்திருப்பார்கள். இந்த மாதிரி அமைப்புகள் எல்லாமே வாஸ்துவின் ரீதியாக தவறு. அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. ஒரு இல்லத்தில் ஒரு சிலர் நான்கு பக்கமும் பால்கனி வேண்டும் என்று முடிவு செய்து பால்கனி அமைப்பை ஏற்படுத்துவார்கள்.அதுவும் என்னை பொறுத்த அளவில் தவறுதான். ஒருசிலர் நான்கு பக்கமும் பால்கனி வேண்டும் என்பார்கள் ஆனால் தெற்கும் மேற்கும் அவசியம் தேவை இல்லை. இது எந்த இடத்தில் உட்புகுத்த வேண்டும் என்று சொன்னால் மேற்கு பார்த்த வீடுகளுக்கும் தெற்கு பார்த்த வீடுகளுக்கும் தாராளமாக நான்கு பக்கமும் பால்கனி அமைப்பை ஏற்படுத்தலாம். இல்லை என்றால் அதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் ஒரு கட்டிடத்தை அழகுபடுத்துவதில் முதன்மை இடம் ஒரு இல்லத்தின் போர்டிகோ என்கிற பால்கனி சார்ந்த,முன்முகப்பு மண்டபங்களுக்கு உண்டு. இந்த இடத்தில் அழகு என்பது ஆபத்து என்று சொல்வேன். ஒரு இல்லத்தின்  பால்கனி என்பது ஒரு இல்லத்தின் தலைவாயில் சார்ந்த இடத்தை பாதுகாக்கபயன்படும் விஷயமாக இருந்தாலும் கூட, வாஸ்துவின் ரீதியாக போர்டிகோ என்கிற விஷயங்கள் ஒரு இல்லத்தின் திசையை மூடுகிற விஷயமாக தூண்கள் அமைத்து பிரம்மாண்டமான அளவில்  முன் முகப்பு மண்டபம் அமைக்கும் பொழுது வாஸ்து குற்றமாக மாறிவிடுகிறது . ஆகவே பால்கனி, போர்டிகோ, முகப்பு மண்டபம் அமைக்கும் பொழுது ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைப்பது நல்லது.

 1,078 total views,  1 views today

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *