படிக்கட்டுகள் வாஸ்து

படிக்கட்டுகள் எனும்பொழுது எப்பொழுதுமே வீட்டின் உள்புற மூலைகளில் எப்பொழுதும் வரக் கூடாது. அப்படி வருகின்ற போது வாஸ்துவின் ரீதியாக தவறாக முடிந்துவிடும். அதேசமயம் வெளிப்புற படிக்கட்டுகளாக இருக்கின்ற பட்சத்தில், உதாரணமாக வடகிழக்கு பகுதி தவிர அனைத்து இடங்களிலும் மாடிப்படிகள் வரலாம். ஆனால் படிகள் என்பது  அமைப்பில் சுவரில்லாது, தூண் இல்லாது வருவது சாலச் சிறந்தது. வடக்கு பார்த்த மனைகளுக்கு வட மேற்கில் வைப்பது சாலச்சிறந்தது. கிழக்கு பார்த்த மனைகளுக்கு தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது. எப்பொழுதுமே மாடி படிகளில் ஏறும் அமைப்பு என்பது ஒரு பால்கனியில் நடந்து செல்லும் பாதையை மேல் தளத்திற்காக அமைக்க வேண்டும். மாடிக்குச் செல்லும் லேண்டிங் பால்கனி போர்டிகோ போன்றவை வீட்டிற்கு, வீட்டின் மேல் தளத்தில் ஒரே மட்டத்தில் அமைப்பது சிறப்பு. அப்படி அமைக்க முடியாமல் தரை மட்டத்தை விட லேண்டிங் பால்கனி போர்டிகோ ஒரு மடிப்பு சரியானது. மூன்று மடிப்பு படிக்கட்டுகள் தவிர்க்க வேண்டும் . அப்படி இருக்கின்ற பட்சத்தில் வாஸ்து ரீதியாக தவறு. சில இடங்களில் போர்டிகோ தாழ்த்தி போட்டிருப்பார்கள். 7 அடியில் லிண்டன் லெவலில் இருக்கும். அப்பொழுது வடக்கு பார்த்த வீடுகளில், கிழக்கு பார்த்த வீடுகளில் மேல் தளத்திற்குச் செல்ல தனியாக ஒரு படி அமைக்க வேண்டும் . அப்படி அமைக்கும் போது வாஸ்து ரீதியாக தவறாக முடிந்துவிடும் . அதேசமயம் மேற்கு பார்த்த வீடுகளில், தெற்கு பார்த்த வீடுகளில் ஒரு லேண்டிங்  சொல்லக்கூடிய தாழ்த்தி போடுவது மிக மிகத் தவறு . எனது வாஸ்து சார்ந்த பயணங்களில் படிகள் என்பது ஒரு எதிர்மறை செயலாகத்தான் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட படிகளை சரியான முறையில் அமைத்தால் மட்டுமே எதிர்வினைகளை கொடுக்காது, நல்ல பலன்களை கொடுக்கும்.

அந்தவகையில் படிகள் எப்பொழுதும் உட்புற படியாக இருக்கின்ற பட்சத்தில் பெரிய குறைகளை கொடுக்காது. வெளிப்படியாக இருக்கின்ற பட்சத்தில் ஒரு நீளமான படிகள் ஒரு சில இடங்களில் தவறாக வைத்துவிடுவார்கள். அதாவது மேலே மடக்கி செல்கின்ற பாதை நீச்ச பகுதியில் சென்று விடும். நேராக தொடங்குகிற ஒரு சில படிகள் வடகிழக்குப் பகுதியில் இருந்து தொடங்கும். ஆக இப்படி இருக்கிற படிகள் என்னைப் பொறுத்தளவில் தவறாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வெளிப்புற படியை பொருத்த அளவில் நடக்கும் படியாக இரண்டு அமைப்பு செல்லக்கூடிய, இப்படி இருக்கின்ற பட்சத்தில் நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பது திண்ணம். படிகளை பலர் மனம்போன அமைப்பில் அமைத்துக் கொள்கின்றனர். மாடிப்படிகள் சரியாக அமையாவிட்டால் ஆண் பெண் இருபாலருக்கும் நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படுவது, படிப்பு குறைவாக இருப்பது, விபத்து மற்றும் கடன், உறவினர்கள் வருகின்ற நிகழ்வு குறைவு, இப்படி பலவகை இடர்பாடுகளை கொடுக்கும். மேலும் அடுத்த மாடி கட்டலாம் என்று இருப்பார்கள். தவறான படி ஏற்படுத்தும்போது அந்த கட்டுகிற நிலை ஒரு மனிதனுக்கு வராது. ஒரு சில வீடுகளில் குடியிருந்து வேலைகள் முழுமை அடையாத நிலையில், இருப்பதை எனது பயணத்தில் பார்க்கப்படுகிறது. வீட்டு மாடிப் படிகள் அமைத்து கொள்வது, தெற்கு மேற்கு முகமாக ஏறும்படி வைத்துக்கொள்ள வேண்டும்.  சிலர் மாடிப்படிகளை இரண்டு அல்லது மூன்று மடிப்பு வடிவத்தில் அமைத்துக் கொள்கின்றனர். இந்த முறை தவறானது. அதிகபட்சம் இரண்டு மடிப்போடு முடித்துவிடவேண்டும். படிகள் என்பது ஏற்கனவே நான் சொன்ன மாதிரி வடகிழக்குப் பகுதியில் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது. அதேபோல வீட்டில் பாகத்தில் உட்பகுதியை இல்லாத அமைப்பில் படிகள் அமைப்பது என்பது தவறு. படிகள் என்பது ஒரு ஏணியை போல வெளிப்புறப் பகுதிக்கு வந்து விட வேண்டும். படிக்கு அடியில் செப்டிக் டேங்க் அமைப்பதும்  தவறு கிடையாது. ஆனால் எந்த இடத்திலும் ஒரு சுவர் வைத்து மூடப்பட்ட அமைப்பில் படிகளை கட்டக்கூடாது. படிக்கட்டுகள் தான் ஒரு மனிதனை வாழ வைக்கும். வீழவும் வைக்கும்.  படிக்கட்டுகளை கையாளுவது என்பதும், கட்டுவது என்பதும், கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும். என்னை பொறுத்த அளவில் ஏணிகள் என்பது படிக்கட்டுகளை போலத்தான். பழைய காலங்களில் சாதாரண மக்கள் பெரிய அளவில் மாடி வீடு கட்டவில்லை. அரண்மனை இடங்களில் தான் படிக்கட்டுகள் என்கிற கட்டிட அமைப்பு இருந்தது. ஆனால் இன்று எப்படி மன்னராட்சி முடிந்து மக்களாட்சி நடந்து கொண்டிருக்கிறதோ, எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் ஆக  இருக்கின்றோமோ அதுபோல, ஒவ்வொரு இல்லங்களிலும் ஒரு அரண்மனை போல மாறிவிட்டது . எந்த இடத்தில் நீங்கள் கூரை வீடு , மண் ஓடுகளை மேயாது, இயற்கை சார்ந்த பொருட்களால் கூரை போடாமல் ஒரு இல்லத்தை நாம்  இப்போது அமைக்கின்றோம். அப்போது அரண்மனை என்கிற விஷயத்திற்கு நாம் உட்புகுந்து விடுகின்றோம். அப்படிப் பார்க்கும்போது ஒரு சாஸ்திர அமைப்பை உள்ளே புகுத்துவது நல்லது. இந்த இடத்தில் மாடிக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் என்பது மிகச் சரியான இடத்தில் சரியான அமைப்பில் பொருந்தி வருவது நலம் .எனது வாஸ்து பயணங்களில் அதிகபட்சமாக உட்புற படிகளைத் தான் அமைத்துக் கொடுப்பேன். எனது அனுபவ அறிவின்படி படிகள் என்பது வீட்டினுள்ளே இருப்பதுதான் நல்ல பலன்களை கொடுக்கும். மீண்டும் ஒரு நல்ல கருத்தோடு சந்திப்போம் நன்றி வணக்கம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *