தெரு முட்டு சந்துமனைகள் வாஸ்து

தெரு முட்டு மனைகள் வாஸ்து பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தெரு முட்டு மனைகள் என்று சொல்லும்பொழுது ஒரு சாலை கடைசியில்  விடுகிற மனையாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஒரு சாலை கிழக்கிலிருந்து மேற்காக செல்கிறது . ஒரு வீடு கிழக்கு பார்த்து இருக்க வேண்டும் என்று சொன்னால் அந்த விஷயத்தில் மனை அகலத்திற்கு சாலை வருகிறது என்று சொன்னால் அது பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கிற மனையாக இருக்காது. ஆனால் முழுக்க முழுக்க பலன் தருகிற மனை என்றும் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதேசமயம் மேற்கு பார்த்து ஒரு மனை இருக்கிறது. அந்த மனைக்கு ஒழுங்காக சாலை வருகிறது என்று சொன்னால் 100% தவிர்க்கவேண்டிய மனையாக வாஸ்துவில் பார்க்கப்படுகிறது.தெற்கு பகுதியில் இருந்து சாலை வருகிற அதாவது, இதே விதி தெற்கு பார்த்த வீடு களுக்கும் பொருந்தும். அதாவது தெற்கிலிருந்து சாலை வருகிற பொழுது அதே வடக்கு பார்த்த வீடு களுக்கு, ஏற்கனவே கிழக்கு பார்த்த வீடுகளுக்கு என்ன பலன்களை சொல்கிறோமோ அதே பலனை கொடுக்கும்.  அதேபோல மேற்கு பார்த்து கிழக்கு பார்த்த வீடுகள் வரிசையாக இருக்கும். நடுவில் சாலை செல்லும். ஆனால் வடக்கு பகுதியை தொடர்ந்து செல்லாமல் மூடப்பட்டிருக்கும். வடக்கு சாலை என்பது நேராகச் செல்லாமல் அந்த மனைகளோடு நின்று விடும். அப்படி இருக்கின்ற மனைகளில்  மேற்கு பார்த்து இருக்கிற மனைகள் எல்லாமே எதிர்மறை பலன்களை கொடுக்கிற மனையாக இருக்கும். ஆனாலும் முழுக்க முழுக்க தவிர்க்கவேண்டிய மனையாக ஒரு ஐந்து மனைகள் வரிசையில் இருக்கிறது என்று சொன்னால், தெற்கிலிருந்து நாம் 1,2,3,4,5 என்று வரிசைப்படுத்தும் பொழுது, வடக்கு கடைசியில் இருக்கிற மேற்கு பார்த்த மனை என்பது மட்டும் வாஸ்து ரீதியாக தவறாக இருக்கும். ஆக இந்த இடத்தில் வீட்டுமனைகளை கவனித்து வாங்க வேண்டும்.அதற்கு பிறகு அதில் வீடுகளை கட்ட வேண்டும்.

 865 total views,  1 views today