தெருகுத்து தெருப்பார்வை வாஸ்து | T junction vastu in tamil

chennaivastu road hits

வாஸ்துவில் மிகமிக தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்றால் தெருக்கள் சார்ந்த அமைப்பை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நல்ல தெருக்குத்து  அல்லது எதிர்மறை தெருக்குத்து சார்ந்த வித்தியாசத்தை தெரிந்து கொண்டால்தான் ஒரு நல்ல இடத்தில் வாழ்வதற்குரிய வழியை ஒரு மனிதன் ஏற்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் நான்கு நல்ல தெருக்குத்துகள்,  அதேபோல நான்கு தவறான தெருக்குத்துகள் உள்ளது.   அந்த வகையில் நல்ல தெருக்குத்துகள் எவை?தவறான தெருக்குத்துகள் எது என்று தெரிந்து கொள்வோம்.

ஒரு இடத்திற்கு வடகிழக்கு வடக்கிலிருந்து வரக்கூடிய தெருப்பார்வை, வடக்கு சார்ந்த வடகிழக்கு ஒட்டி வரும் பொழுது நல்ல தெருக்குத்து தெருப்பார்வை மனையாக இருக்கும். அதுபோல கிழக்கிலிருந்து வடக்கு வடகிழக்கு மோதுவது போல ஒரு சாலை வரும்பொழுது அது நல்ல தெருக்குத்தாக பார்க்கப்படுகிறது. அதேபோல கிழக்கிலிருந்து வரும் சாலை ஒரு மனை ஒட்டி திரும்பும் பொழுது நல்ல தெருப்பார்வை உள்ள மனையாக பார்க்கப்படுகிறது. மேலும் மேற்கிலிருந்து ஒரு சாலை ஒரு மனையின் வடமேற்கு சார்ந்த மேற்கு பகுதியில் மோதும் பொழுது அது நல்ல தெருக்குத்து மனையாக பார்க்கப்படுகிறது. மேற்கிலிருந்து திரும்பும்பொழுது தெரு பார்வையில் படும் பொழுது நல்ல தெருப்பார்வை மனையாக பார்க்கப்படுகிறது. மேலும் தெற்கு சார்ந்த தென் கிழக்கு நோக்கி ஒரு மனையில் குத்தும் சாலையும்,  தென்கிழக்கு தெற்கு தெரு குத்து மனையாக பார்க்கப்படுகிறது. அதே சாலை மேற்கு திரும்பும் பொழுது தெருப்பார்வையில்  பார்வைக்கு படும் அமைப்பில் இருந்தால் அது தென் கிழக்கு தெரு பார்வையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுவும் நல்ல தெருக்குத்து சார்ந்த பார்வையாகும்.

இதனைத் தவிர ஒரு மனையில் மேற்கிலிருந்து தென் மேற்கு நோக்கி வருகிற பாதை எதிர்மறைகுத்து அல்லது தெருபார்வையாக பார்க்கப்படுகிறது  அதேபோல தெற்கிலிருந்து ஒரு சாலை ஒரு மனையின் தென்மேற்கு மூலையில் மோதும் பொழுது அது எதிர்மறை தெருக்குத்து மனையாக  பார்க்கப்படுகிறது. அதே போல வடமேற்கு பாகத்தில் வடமேற்கு வடக்கு இருந்து வரக்கூடிய   ஒரு சாலை குத்தும் பொழுது வடமேற்கு வாயு தெருக்குத்தாக பார்க்கப்படுகிறது  அதேபோல ஒரு மனைக்கு கிழக்கு சார்ந்த தென்கிழக்கு ஒரு சாலை வந்து நேரடியாக மனையின்  பகுதியை குத்தும் பொழுது கிழக்கு சார்ந்த  பகுதியில் குத்தும் பொழுது, அது நீச்ச தெருக்கூத்தாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தெருக்குத்து தெருப்பார்வை சார்ந்த நிகழ்வில்  மனைகளுக்கு நான்கு தெருக்குத்துக்கள் நல்லது என்பதும்,  நான்கு தெருக்குத்துக்கள் தவறான தெருக்குத்துக்களாக வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளதால் ஒரு மனையை வாங்கும் பொழுது, ஒரு கட்டிடத்தை வாங்கும்பொழுது, ஒரு தொழிற்சாலையை வாங்கும் பொழுது, தெருக்குத்துவையும், தெருப்பார்வை சார்ந்த நிகழ்வுகளையும் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இல்லை என்றால் வாஸ்து ரீதியாக தவறாக முடிந்துவிடும்.

ஆனால் ஒரு பெரிய தொழிற்சாலை இடத்திற்கு ஏக்கர் கணக்கில் ஒரு இடம் வாங்கும் பொழுது குறைந்தபட்சம் பத்து ஏக்கரில் இருந்து அதிகபட்சம் ஆயிரம் ஏக்கர் வரை கூட ஒரு தொழிற்சாலைக்கு இடம் பரந்து விரிந்திருக்கும். அப்பொழுது அப்படிப்பட்ட பெரிய தொழிற்சாலையின் இடத்திற்கு எங்கு தெரு வந்து மோதுகிறது, அப்படிப்பட்ட தெரு வந்து மோதுகிற தவறான தெருகுத்தாக இருந்தால்  அந்த தெரு சார்ந்த நிகழ்வை எப்படி தடுக்க முடியும் என்கிற விஷயத்தை தொழிற்சாலை தொடங்குவதற்கு முன்பே சரிசெய்துகொண்டால், அதிலிருந்து எதிர்மறை தெருக்களில் இருந்து எளிதாக தப்பித்துக்கொள்ளலாம். என்னை பொருத்த அளவில் மிகப்பெரிய இடங்களுக்கு தொழிற்சாலை சந்தேகங்களுக்கு வாஸ்து பார்த்த அனுபவம் உள்ளவன் என்கிற வகையில், நிறைய தொழிற்சாலைகளுக்கு அது சார்ந்த மிகச் சரியான தீர்வுகளை வழங்கி இருக்கிறேன். ஆகவே பெரிய இடங்களில் தெருக்குத்துகள் வேலை செய்யாது என்று ஒரு சில வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். தயவு செய்து அதனை காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம் என்பது எனது கருத்து. எதுவாக இருந்தாலும் பெரிய தொழிற்சாலையை பொறுத்தளவில் நேர்மறை தெருப்பார்வை வந்தால் பெரிய அளவில் தோஷம் கிடையாது. அதுவே தெருகுத்தாக எதிர்மறையாக வரும் பொழுது மிகப்பெரிய அளவில் ஒரு தொழிற்சாலைக்கு பாதிப்பைக் கொடுக்கும். ஆகவே சரியான முறையில் அதற்கு தீர்வு கொடுப்பது சாலச் சிறந்தது  இதற்காக வேல் வைக்கிறேன் என்பதும், விநாயகர் வைக்கிறேன் என்பதும், திரிசூலம் வைக்கவேண்டும் என்பதும், திரிசூலம் வைத்து பூஜை செய்கிறேன் என்பதும்,சீன வாஸ்து பொருள் வைத்து சரிசெய்கிறேன் என்பதும் தெருக்குத்துக்களை விட பெரிய தவறு ஆகும். இந்த வேலைகள் என்னை பொறுத்த அளவில் மிகப்பெரிய முட்டாள் தனத்தின் உச்சகட்டம் என்று தான் சொல்வேன். ஒரு சில மக்கள் முச்சந்தி வீடுகளில் மூலை மட்டும் மோதுகிற வீடுகளில் வேல் வைத்து தினமும் காலை, மாலை பூஜை செய்வார்கள். அப்படிப்பட்ட வீடுகளில் ஆண்கள் அதிகபட்சமாக வேலைக்கு செல்லாத ஆண்கள் மூலமாக வருமானம் வராத வீடுகளாக தான் இருக்கும். அந்த இல்லத்தின் பெண்கள் வேலை சார்ந்த விஷயத்திற்காக தினமும் வெளியே சென்று விட்டு வீடு வரும் பெண்களாக இருப்பார்கள். கூர்ந்து கவனித்து பார்த்தால் தான் தெரியும்.வேல் வைப்பது, பிரமிடு வைப்பது, திரிசூலம் வைப்பது, விநாயகர் வைப்பது, இப்படி அனைத்து விஷயங்களுமே தனக்கு தானே சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமமானது.

 1,607 total views,  3 views today

Leave a Comment

Your email address will not be published.