
திரை அரங்குகளுக்கு வாஸ்து| திரைப்படத்துறைக்கு வாஸ்து , இன்றைக்கு மிகப்பெரிய அளவில் மக்களுக்கு பொழுதுபோக்காக இருக்க கூடிய விஷயம் திரைப்படத்துறை மட்டுமே. போன நூற்றாண்டுகளில் தெருக்கூத்து நாடகங்கள் ஆக இருந்த விஷயங்கள் என்று திரைப்படமாக மாறியுள்ளது. இந்த துறைக்கு கடவுளாக கண்டுபிடித்து கொடுத்தவராக பிதாமகனாக தாமஸ் ஆல்வா எடிசனுக்கு பாராட்டு சொல்ல வேண்டும். அந்த வகையில் ஒரு திரைப்படத் துறை என்று பார்க்கும்பொழுது , அவசரகதி ஆகிவிட்ட மனித வாழ்க்கையில் கவலைகளை மறக்க, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தான் மனிதர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் ஒரு திரைப்படம் தயாரிக்க, ஒரு தொலைக்காட்சி தொடர் தயாரிக்க மிகப்பெரிய அறிவும், ஆற்றலும் பணமும் வேண்டும் மற்றும், நடிகர்களின் உழைப்பு என்பது கூட பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. பல மக்கள், பல நாட்கள் உழைத்து, படத்தை திரையிடும் பொழுது ஒரே காட்சியில் அந்த படத்தின் வெற்றி என்பது ரசிகர்களால் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. ஆக மிகப் பெரிய அளவில் முதலீடுகளை போட்டு எடுக்கிற திரைப்படம் என்பது ஒரே நாளில் தோல்வியைத் தழுவும் பொழுது, அந்த தயாரிப்பாளர் ஆகட்டும் , அந்த நடிகர் நடிகைகள் ஆகட்டும்,திரைப்பட இயக்குனர் ஆகட்டும், அவர்களின் எதிர்காலம் கூட கேள்விக்குறியான ஒரு நிகழ்வாக மாறி விடுகிறது. திரைப்படத்துறையில் கதை, வசனகர்த்தா, டைரக்டர் என்கிற இயக்குனர், சினிமா ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர், மியூசிக் டைரக்டர் என்று சொல்லக்கூடிய இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர், கதை ஆசிரியர், இப்படி பல வகையில்,மற்றும் துணை நடிகர்கள்,இப்படி பலவிதமான மக்கள் சிரமப்படும் கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஒரு திரைப்பட தொழிற்சாலையின், அந்த நிறுவனத்தின் அலுவலகம், அந்த நிறுவன தயாரிப்பாளர் சார்ந்த இல்லம், ஒரு நல்ல வாஸ்து விதிகளுக்கு இருக்கும் பொழுது நிச்சயமாக அவர் செய்கிற படைப்பு சார்ந்த நிகழ்வுகளில் கூட தோல்வி என்பது இருக்காது. அதே போல திரைப்படத்துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள் இல்லங்கள் கூட வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு அமைக்கும் பொழுது நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையும் மிக மிக நன்றாக இருக்கும். எப்பொழுதும் பிஸியாகவே இருந்து கொண்டிருக்கிற மக்களாக இருப்பார்கள்.
இன்றைக்கு திரைப்பட துறையோடு கூடவே வளர்ந்திருக்கிற துறை என்று சொன்னால் தொலைக்காட்சித் துறை. அப்படிப்பட்ட தொலைக்காட்சி நாடகங்களை தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகம், வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் . ஆக அந்த தயாரிப்பாளர் இல்லம் என்பது கூட வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி விளங்குகிற தொலைக்காட்சி நிறுவனத்தின் கட்டிட அமைப்பு கூட வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அப்பொழுது அந்த தொலைக்காட்சி நிறுவனம் புகழ் பெற்ற நிறுவனமாக மாறும் அந்த வகையில் எந்த கட்டிடங்களாக இருந்தாலும், தயாரிப்பாளர் இல்லம், நடிகர் நடிகைகளின் இல்லம், தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளர் இல்லம், சினிமா ஸ்டூடியோ மற்றும், திரைப்படத்துறை சார்ந்த அலுவலகங்கள் அனைத்துமே, வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். வடக்கும் கிழக்கும் அதிக இடங்களாகவும், தெற்கும் மேற்கும் குறைந்த இடங்களாக இருக்க வேண்டும். எதிர்மறை தெருக்குத்து,தெரு தாக்கங்கள் இல்லாத மனைகளாக, இடங்களாக இருக்கவேண்டும். இது முதல் விதியாக என்னால் பார்க்கப்படுகிறது.Vastu For Film Industry
அடுத்ததாக எந்த திரையரங்கில் ஒரு திரைப்படம் திரையிடப்பட வேண்டும் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் திரைப்பட அரங்குகள் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு, 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களாக இருக்கின்றன.அக்காலத்தில் வாஸ்து விதிமுறைகள் என்ற விஷயம் பெரிய அளவில் உட்படுத்தப்பட்டு இன்றும் இல்லை என்பேன். ஆக ஒரு திரையரங்கு என்பது வடக்கு பள்ளமாகவும், தெற்கு உயரமாகவும் இருப்பது சாலச் சிறந்தது .அதுவே தெற்கு பள்ளமாக வடக்கு உயரமான கூரை இருக்கும் பொழுது பெரிய அளவில் ஒரு வருமானத்தை கொடுக்கிற திரை அரங்காக இருக்காது. என்னை பொறுத்த அளவில் மேற்கு இறங்கியும், கிழக்கு உயர்ந்து இருக்கிற திரை அரங்குகள் கூட பெரிய அளவில் வருமானத்தை கொடுப்பதில்லை. இந்த இடத்தில் ஒரு இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு அந்த கட்டட நிகழ்வை ஏற்படுத்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட இடங்களில் பெரிய அளவில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவது கடினம். அப்படி இருக்கின்ற பட்சத்தில் கட்டிட அமைப்பில் உயர அமைப்பை சரியாக ஏற்படுத்தி, ஒரு சில மாற்றங்களை கொடுத்து, வாஸ்து விதிக்கு இருக்கிற கட்டடமாக மாற்றிக்கொள்வது நல்லது. அதேபோல அந்த திரை அரங்கில் காலியிடம் என்பது தெற்கில் குறைவாகவும், மேற்கும் குறைவாகவும், கிழக்கில் அதனைவிட அதிகமும், வடக்கில் அதற்கு இணையாகவும் காலியிடம் இருப்பது நல்லது. நிறைய திரையரங்குகளில் வடகிழக்குப் பகுதியில் வட மேற்குப் பகுதி இணைந்த பகுதியில் கழிவறைகளை அமைத்திருப்பார்கள் . அதனை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தி மாற்றம் செய்யும் பொழுது நன்றாக இயங்க கூடிய திரை அரங்குகளாக இருக்கும்.
846 total views, 3 views today