தமிழ் வாஸ்து காலண்டர் | புதிய இடம் வாங்க வாஸ்து

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று #திருவாடிப்பூரம்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

1.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 3 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.57.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 1.8.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
16ந் தேதி திங்கள் கிழமை . அதிகாலை 5.15  வரை சதுர்த்தி திதி. பிறகு வ.பஞ்சமி திதி.மாலை 3.53 2.05 வரை பூரம்பிறகு உத்திரம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட நேரம்:

7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:

   ஒரு இடம் விற்பனைக்கு வருகிறது. அந்த இடத்தை நீங்கள் வாங்க நினைக்கிறீர்கள். அப்படிப்பட்ட இடமும் உங்களுடைய இல்லம் இருக்கிற, உங்கள் நிறுவனம் இருக்கிற, உங்கள் தொழிற்சாலை இருக்கிற இடத்தில் வருகிறது என்று சொன்னால், அதனை வாங்கலாமா? வாங்கக் கூடாதா ? .என்கிற சந்தேகம் இருக்கும்.அப்படி வாங்கலாம் என்றால், எந்த இடத்தை வாங்கலாம் என்பது பற்றி தெரிந்து கொள்வோம் .
    
உங்கள் நிறுவனத்திற்கு வடக்கில் ஒரு இடம் வருகிறது என்று சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடலாம். வடகிழக்கில் ஒரு இடம் வருகிறது என்று சொன்னால் வடக்கு சார்ந்த பகுதியாக இருக்கிறபோது தாராளமாக வாங்கிக் கொள்ளலாம். உங்கள் இடத்திற்கு கிழக்குப் பகுதி என்பது விலைக்கு வருகிறது என்று சொன்னால் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம் . ஆனால் சுற்றுச்சுவர் அமைப்பதில் கவனம் தேவை . அதே சமயம் கிழக்கு ஈசானியம் விலைக்கு வருகிறது என்று சொன்னால் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம். மற்றும் தெற்கு பகுதியிலும், மேற்கு பகுதியிலும் காலி இடமாக வருகிறது என்று சொன்னால் யோசித்து வாங்க வேண்டும். இதற்கும் அதற்கும் இணை சேராது தனிப்பட்ட சுவரை அமைத்துக்கொண்டு கட்டிடத்தை கட்டி கொண்டு பிறகு போர்க்கால அடிப்படையில் இணைத்துக் கொள்ளலாம் அல்லது, கட்டிடமாக இருக்கும்போது தாராளமாக வாங்கிக் கொள்ளலாம் .ஆனால் கூட ஒரு வாஸ்து நிபுணர் ஆலோசனை பெற்று வாங்கி விடுவது நல்லது.தெற்கு மேற்கு காலி இடம் இப்போது வாங்குகிறோம். பின்புதான் கட்டிடம் கட்டுகிறோம் என்று சொன்னால் அதனை தவிர்த்து கொள்வது நல்லது. ஒரு இடம் இருக்கிறது சுற்றிலும் இடம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் நன்றாக யோசனை செய்து, அது சார்ந்த வாஸ்து ஞானம் உள்ள மனிதர்களிடம் ஆலோசித்து வாங்குவது சாலச் சிறந்தது.
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சுகம்
ரிசபம்- நட்பு
மிதுனம்- சுபம்
கடகம்- ஆதாயம்
சிம்மம்- தாமதம்
கன்னி- விருப்பம்
துலாம் – தடை
விருச்சிகம்- தேர்ச்சி
தனசு – அலைச்சல்
மகரம்-  வெற்றி
கும்பம்- நன்மை
மீனம் –  பக்தி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
# August_01

உலக தாய்ப்பால் வாரம் துவக்க தினம்

உலக சாரணர் தினம்

லெபனான் ராணுவ தினம்

சுவிட்சர்லாந்து தேசிய தினம்(1291)

இந்திய விடுதலை போராட்ட வீரர் பால கங்காதர திலகர் இறந்த தினம்(1920)

பாகிஸ்தான் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது(1960)

ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1774)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 25 total views,  3 views today