சென்னை வாஸ்து தினசரி நாள் காட்டி 2.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

2.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.50.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 2.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
18ந் தேதி காரிவாரம்.  மதியம் 3.19 வரை திருதியைதிதி. பிறகுசதுர்த்தி திதி.இன்று நாள் முழுவதும் ஆயில்யம் நட்சத்திரம்.

ராகுநேரம்:9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து சார்ந்த நிகழ்வுகளில் கிழக்கு பார்த்த மனைகளும், வடக்கு பார்த்த மனைகளும் முதல் தரமானது என்றும், தெற்கு பார்த்த , மேற்கு பார்த்த மனைகள் முதல் தரமானது கிடையாது என்கிற ஒரு கருத்து என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்களிடமும், மக்களிடமும் இருக்கிறது. இந்த நம்பிக்கை இந்த எண்ணம் என்பது, சரியானது கிடையாது .மனை பிரித்து விற்பனை செய்யும் லேஅவுட் சார்ந்த மனைகளாக பிரித்து விற்கும் ஒரு நிறுவனத்தில்மனைகளில் அனைத்து திசை பார்த்த மனைகளும் இருக்கும்.

அந்த வகையில் மேற்கு பார்த்த மனை , தெற்கு பார்த்த மனைகளில் வசிக்கின்ற மக்கள்  இருப்பார்கள். இந்த இடத்தில்  கிழக்கு பார்த்த, வடக்கு பார்த்த மனைகளில் வசிக்கிற மக்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் என்றுநினைப்பீர்கள்.ஆனால் அது உண்மை கிடையாது. அப்படி பார்த்தால் இந்த பூமியில் வாழ்கிற பாதி மக்கள் நல்ல பலன்களையும் ,பாதி மக்கள் தீய பலன்களையும் எடுப்பார்கள் என்று நாமும் முடிவு செய்ய வேண்டும் ஆனால் அது உண்மை கிடையாது தெற்கு பார்த்த மனைகளையும், மேற்கு பார்த்த மனைகளையும் முறையாக பயன்படுத்தி வீடு கட்டினால், நல்ல வாழ்க்கை வாழ முடியும்.
ஆனால் அந்த இடத்தில் இடங்கள் என்பது இருக்க வேண்டும். அதாவது மனைக்கு ,இல்லத்திற்கு வெளிப்புறப் பகுதியில் ஒரு செட்பேக் அமைப்பை ஏற்படுத்துவதற்கு இடம் இருந்தால் மட்டுமே அதி அற்புதமான நிலையாக மாற்றி வைக்க முடியும்.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்-  வெற்றி
ரிசபம்- தனம்
மிதுனம்- லாபம்
கடகம்- முயற்சி
சிம்மம்- போட்டி
கன்னி- நிறைவு
துலாம் – நலம்
விருச்சிகம்- நட்பு
தனசு – நிறைவு
மகரம்- புகழ்
கும்பம்- ஏமாற்றம்
மீனம் – பரிசு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_02

ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது(2004)

தாமஸ் சேவரி, முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்(1698)

முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சாவில் திறக்கப்பட்டது(1962)

பிரெஞ்ச் ராணுவத்தினர், பசிபிக் பெருங்கடலில் அணுஆயுத சோதனையை நிகழ்த்தினர்(1966)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 71 total views,  1 views today