சென்னை வாஸ்து தினசரி காலண்டர் 10.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

10.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 8 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.52.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 10.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
26ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.16 வரை ஏகாதசி திதி. பிறகு வ.த்வாதசி திதி.இன்று காலை  09.43 வரை விசாகம் நட்சத்திரம். பிறகு நாள் முழுவதும் அனுசம் நட்சத்திரம்.

ராகுநேரம்:

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து சார்ந்த நிகழ்வுகளில் வாசல்கள் என்பது ஒரு சில இடங்களில் நீச்சத்தில் இருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு 11 அடிக்கு 16 அடி அறை இருக்கின்றது என்று சொன்னால் , அந்த அறை கிழக்கு பார்த்த அறையாக இருக்கும் பொழுது, தெற்கில் இருந்தாலோ, அதேபோல இல்லத்தின் மத்திய பாகத்தில் வடக்கு பார்த்து பத்தடிக்கு 16 அடிக்கு ஒரு அறை இருக்கிறது என்று சொன்னால், அதன் உச்சப்பாகமான கிழக்கு பாகத்தில்  அல்லது, மத்திய பாகத்திலோ அதன் மேற்கு பாகத்திலோ வரும் பொழுது நீச்சக்கதவுகள் என்று சொல்லுவோம். இதுபோல ஒவ்வொரு அறைக்கும் இந்த விதி பொருந்தும். அதேசமயம் சமையலறை சார்ந்த நிகழ்வுகளில், அந்த சமையல் அறைக்கு செல்கிற பாதை அதன் வடக்கு திசையில் மேற்கு பாகத்தில் இருக்கும். அது நீச்ச பகுதி இருப்பது போல இருக்கும்  இந்த இடத்தில் உடனே இதை இடியுங்கள் . அதை இடையுங்கள் என்று சொல்ல வேண்டாம் என்று சொல்லுவேன்  ஏனென்று சொன்னால் அந்த இடத்தில் திசைகாட்டிகள் உச்ச திசையில் அந்த இடம் இருக்கிறதா?.. நீச்ச திசையில் அந்த இடம் இருக்கிறதா?.. என்பதனை பொருத்திப் பார்த்துக் கொண்டு, பிறகு அடுத்த முடிவான இடிப்பது அல்லது மாற்றி வைப்பது என்ற நிகழ்வை செய்யலாம்.

அதனை விடுத்து உடனே இடியுங்கள், இதனை அங்கு மாற்றுங்கள், இதனை இங்கு மாற்றி வையுங்கள் என்று சொல்கிற, செய்கிற, இடிக்கிற, நிகழ்வுகள் வேண்டாம். அதே சமயம் ஒரு வீட்டில் உள்பகுதியில் இருக்கிற தவறுகள் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது. அதுவும் உடனடியாக கொடுக்காது. ஆனாலும் பெரிய தோஷங்கள் கிடையாது. வீட்டோடு வெளிப்பகுதியோடு என்ன இணைந்திருக்கிறதோ?.. அவைகள் தான் உடனடி பாதிப்பு கொடுக்கும். அதனை மட்டும் சரி செய்து கொண்டால் போதும் . எடுத்துக்காட்டாக நான் ஒரு இடத்திற்கு வாஸ்து பார்க்க செல்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம். அவர்களிடம் பெரிய பணம் என்பது கையில் இருக்காது. ஏதாவது ஒரு சூழ்நிலை பணம் சார்ந்த நிகழ்வுகளில் கூட பாதித்த மனிதர்களாக இருப்பார்கள். அந்த இடத்தில் போய் ஒரு லட்ச ரூபாய்க்கு, இரண்டு லட்ச ரூபாய்க்கு இதை உடைத்து, அதை மட்டும் என்று சொன்னால் அவர்கள் நிலை என்ன ஆகும். மீண்டும் கடன் வாங்குகிற நிலை தான் ஏற்படும். ஆக அதனை தவிர்கும் விஷயமாக இந்த விஷயங்களை குறிப்பிட்டு வருவேன். ஆக உடனே அதை இடித்து விடுங்கள். இது உடைத்து விடுங்கள் . என்று சொல்கிற வாஸ்து நண்பர்களை புறக்கணியுங்கள் என்று தான் நான் சொல்லுவேன்.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்-   லாபம்
ரிசபம்- பிரீதி
மிதுனம்- நலம்
கடகம்-   வெற்றி
சிம்மம்- உயர்வு
கன்னி- நன்மை
துலாம் – களிப்பு
விருச்சிகம்- சிக்கல்
தனசு – எதிர்ப்பு
மகரம்-   சிந்தனை
கும்பம்- மேன்மை
மீனம் – உழைப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_10

பஹாமாஸ் விடுதலை தினம்(1973)

டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது(988)

வேலூர் சிப்பாய் கலகம் ஏற்பட்டது(1806)

உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது(1962)

இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபாவின் பக்தர்களின் அமைதி தினம்(1925)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 67 total views,  1 views today