சமையல் அறைக்கு வாஸ்து

எல்லா மனிதர்களும் ஒரு சாண் வயிற்றுக்காக தான் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனித வாழ்வில் மத்திய பாகத்தில் இருக்கிற ஒரு விஷயம் வயிறு இந்த வயிறு என்பது தான். மனித வாழ்வில் இல்லத்தின் பிரம்ம ஸ்தானமாக செயல்படுகிறது வயிற்று பகுதி. அதுபோல ஒரு இல்லத்திற்கான அனைத்து சாந்நித்தியத்தையும், அனைத்து விஷயங்களையும் அனைத்து கிரகங்களையும் கொடுக்கக் கூடிய இடமாக சமையலறை இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அந்த வகையில் சமையலறை என்பது வாஸ்துவின் ரீதியாக முதல் தரமான சமையல் அறையாக ஒரு இல்லத்தில் தென்கிழக்குப் பகுதி இருக்கிறது. அப்படிப்பட்ட சமையலறை ஒரு இல்லம் திரும்பி இருக்கிற வீடுகளில் ஒரு 45° டிகிரி பில்டிங் இருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் சமையலறையை மிக சர்வ ஜாக்கிரதையாக அமைக்கவேண்டும் . ஒரு இல்லம் கிழக்கு திசை பார்த்து இருக்கிறது என்று சொன்னால் சமையலறை அடுப்பு என்பது மிகச் சரியான முறையில் இருக்க வேண்டும். நீங்கள் கிழக்கு என்று நினைத்து வடகிழக்கு நோக்கி சமையல் செய்யும் பொழுது வாஸ்து ரீதியாக தவறாக முடிந்து விடும் . அல்லது கிழக்கு என்று நினைத்து தென்கிழக்கு பார்த்து சமையல் செய்யும்போது தவறாக முடிந்து விடும். இந்த விஷயங்களை சமையலறையில் உன்னிப்பாக கவனித்து திசைகளைக் கவனித்து அடுப்பை பொருத்தி கொடுப்பது சாலச் சிறந்தது. அடுத்ததாக இரண்டாம் பட்ச சமையலறை பகுதியாக ஒரு இல்லத்தின் வடமேற்கு பகுதி தெரிகின்றது அப்படிப்பட்ட சமையல் அறையில் சமையல் என்பது ஒரு சில இடங்களில் வாஸ்து பயணத்திற்கு செல்லும்பொழுது , தெற்கு பார்த்தோ, மேற்கு பார்த்தோ வடக்கு பார்த்தோ சமைக்கின்றனர். அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. அப்படிப்பட்ட வடமேற்கு சமையலறை இதில் கூட பெண்களுக்கு சார்ந்த தென்கிழக்குப் பகுதியில் அடுப்பை வைத்து சமையல் செய்ய வேண்டும். இல்லை என்று சொன்னால் வாஸ்து ரீதியாக தவறாக முடிந்து விடும். அந்த அறையில் இருக்கும் புகை, அந்த வெப்பம் சார்ந்த நிகழ்வுகளை கடத்துகிற வழி என்பது ஒரு ஒரு மின்விசிறி வைப்பது அல்லது சிமிணி வைப்பது, போன்ற விஷயங்களை அந்த அறையின் வடமேற்கு பகுதியில் இருந்து வெளியேறும் அமைப்பாக வைக்க வேண்டும். அதே போல பாத்திரங்களை அலசுகிற தண்ணீர் தொட்டியை வடமேற்கு சமையலறையில் மிக சரியான முறையில் கையாள வேண்டும். அதனை வடக்கு பார்த்த வடக்கு அல்லது கிழக்கு பார்த்த வடக்கு மேற்கு பார்த்த வடமேற்கில் இந்த மூன்று இடங்களில் மட்டுமே அமைக்க வேண்டும் அதனை தவிர்த்து வேறு இடங்களில் நம் அந்த தண்ணீர் அழுகிற அந்த சில்க் அமைப்பை ஏற்படுத்த கூடாது அடுத்ததாக

தென்கிழக்கில் வருகின்ற சமையலறை சார்ந்த மேடை என்பது ஒரு ரெண்டு அடியிலிருந்து 3 அடி ஆக இருக்கவேண்டும். அதற்கு மேலாக உயர படுத்தப்படும் போது சமையல் செய்வது ஒரு கடினமான பணியாக இருக்கும். சமையலறையின் தென்மேற்கு பகுதியில் தண்ணீர் குடம் வைக்கவும், கிரைண்டர் வைக்கும் பாத்திரங்கள், பொருள்கள் வைக்கவும் சமைக்கக் கூடிய பொருட்களை வைக்கவும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். சமையலறைப் பொருட்கள் வைக்கும் அறை போன்ற விஷயங்களை பொருட்களை எடுப்பதற்கு எளிதாக இருக்குமாறு அமைப்பது நல்லது. எந்த சமையல் அறையாக இருந்தாலும் காற்றோட்டம் மிக மிக அவசியம். அந்த வகையில் இரண்டு ஜன்னல்கள் முக்கியம். பெண்களுக்கு சமையல் அறையாக இருக்கின்ற பட்சத்தில், அந்த அறையின் வட கிழக்கு பகுதியிலும் அந்த அறையின் தெற்கு சார்ந்த மத்திய பாகம் அல்லது தென் கிழக்கு சார்ந்த அடுப்பை கடந்து ஒரு இரண்டடி கழித்து ஜன்னலை வைப்பது சாலச்சிறந்தது. வடமேற்கு சமையலறை இருக்கின்ற பட்சத்தில், வடகிழக்கு வடக்கிலும், வடமேற்கு மேற்கிலும் இரண்டு ஜன்னல்களைவைத்துக் கொள்ளலாம். அதேபோல சமையல்மேடையில்  கிரானைட் மற்றும் டைல்ஸ் போன்ற விஷயங்களை சமையல் அறையின் அனைத்துப் பகுதிகளுக்கும் நீங்கள் பொருத்திக்கொள்ளலாம். அதன் நிறம் என்பது கொஞ்சம் வெளிச்சமாக இருப்பது போல அமைப்பது சாலச் சிறந்தது. எக்காரணம் கொண்டும், சமையலறை மேடை மற்றும் சுவர்களில் அடர்ந்த நிறம் டார்க் கலர்ஸ் அல்லது  டார்க் கிரானைட் போன்ற விஷயங்களை ஒட்டாமல் இருப்பது சாலச் சிறந்தது. சமையலறை மற்றும்  சமையல் மேடை சார்ந்த சுவர் ஆகிய பகுதிகளில் வாஸ்து விதிகள் என்பது கட்டயமாக அமைக்க வேண்டும் . அதாவது மேடை சார்ந்த தரைத்தள கீழ் பகுதிகளில் இரண்டு மூன்று அங்குல அகலம் அமைப்பில் உயரப்படுத்தி  மாடர்ன் கிச்சன் அமைப்பை மூடுவது போல் அமைப்பார்கள். எக்காரணம் கொண்டும் அந்த தவறுகளை செய்ய வேண்டாம். அதேபோல சமையல் அறையில் சிலிண்டர் சார்ந்த விஷயத்தை தென்கிழக்குப் பாகத்தில் ஒரு கூண்டு கட்டி அந்த கூண்டை வெளியிலிருந்து உபயோகப்படுத்தும் நிகழ்வாக வைத்துக் கொள்வார்கள். அந்த தவறுகளையும் எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம். அதேபோல தென்கிழக்கு மூலையில் புகைக் கூண்டு கட்டி அதை வெளிப் பகுதியில் இணைப்பது போல உட்புறப் பகுதியில் இருந்து தடுத்து விடுகிறார்கள். அந்தத்தவறுகளையும்  சமையலறையில் செய்ய வேண்டாம். சமையலறை பொறுத்த அளவில் மேடைகள், கபோடு போன்ற விஷயங்களை ஒரு 10× 10 சமையலறை இருக்கின்ற பட்சத்தில், இந்த பத்துக்கு பத்து தரைத்தளம் எந்த இடத்திலும் உடைந்து போகாது இருப்பது சாலச் சிறந்தது. எல்லா மேடைகளிலும் கேண்டிலிவர் மேடையாக அமைத்துக் கொள்வது மிக மிக முக்கியம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *