கொஞ்சம் வாஸ்து பார்க்க வேண்டுமா?

மனித வாழ்க்கையில் வாஸ்து மட்டும் வேலை செய்கிறதா ?.. என்று சொன்னால் நிச்சயமாக கிடையாது. ஏற்கனவே நான் சொன்னமாதிரி வாஸ்து என்பது 20%. நம்முடைய தொடர்புகள், நம்முடைய நடவடிக்கைகள் என்பது 20% .போன ஜென்ம கர்மா மற்றும், முன்னோர்களுடைய செயல்கள் 20%. உண்மையான சரியான தெய்வ வழிபாடு என்பது 20%  . ஜோதிடம் என்பது 20%.அதாவது ஒருவரின் பிறந்த நேரத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் நிலை சார்ந்த விசயம். ஆக இந்த 100% சேர்ந்ததுதான் மனித வாழ்க்கை. அந்த வகையில் என்னதான் நல்ல நேரம் இருந்தாலும், என்னதான் உண்மையான தெய்வ வழிபாடு இருந்தாலும், என்னதான் வாஸ்து வகையில் வீடு இருந்தாலும், ஒரு ஓரத்தில்  முன்னோர்களின் கர்மா என்பது பேசப்படும். பேசவைக்கும் . அந்த வகையில் பணம் சார்ந்த நிகழ்வுகளில்  முன்னோர்கள் செய்த தவறுகள்,மற்றும் உறவுகள் வகையில் நம்முடைய முன்னோர்கள் செய்த தவறுகள். எடுத்துக்காட்டாக ஒருவரிடம் பணத்தை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி இருப்பார்கள். அல்லது ஒருவரின் உழைப்பை திருடி இருப்பார்கள் அல்லது. திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 2 அல்லது 3 திருமணங்களை செய்து முதல் திருமணம் சார்ந்த மனைவிக்கு துரோகம் செய்திருப்பார்கள். அதன் பாதிப்புகள் அவர்களின் பேரன் சார்ந்த, கொள்ளுப்பேரன் சார்ந்த வகையில் நிச்சயமாக பாதிப்பைக் கொடுக்கும் . அந்த பாதிப்பில் இருந்து வெளிவர ஒரே வழி, ஒரு சில விஷயங்களை கொடுக்கும் பொழுது அதிலிருந்து நிவர்த்தி அடைய முடியும். அந்த வகையில் ஒருவருக்கு என்ன பாதிப்பு இருக்கிறது?. திருமணம் நடைபெற வேண்டுமா குழந்தை பேரில் தடை இருக்கிறதா?. பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பு இருக்கிறதா?மேற்கூறிய பிரச்சினைகள் என்றால் அதை சரி பார்த்துக் கொள்வது நல்லது. அது எல்லோரோலும் தீர்த்து வைக்க முடியும் என்று சொல்ல முடியாது. என்னை போல மனிதர்களை படிக்கிற மக்களுக்கு தான் தெரியும் என்று சொல்லுவேன்.இதுதான் எனது 10 வருட வாஸ்து பயணம் சார்ந்த அறிவு என்பேன்.
_____________________

 491 total views,  1 views today