குருபெயர்ச்சி பலன்|மீனராசி குருபெயர்ச்சி2022

மீனராசி மக்களுக்கான இந்த குரு பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்வோம். இதுவரையில் பதினொன்றாம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது 12ஆம் வீட்டிற்கு வருவது ஒரு சிரமத்தை கொடுக்கின்ற ஒரு நிகழ்வாக மீனராசி மக்களுக்கு இருக்கும் என்பது மிகையில்லை. மூத்த சகோதரர்கள் மூலம் ஆதரவு இருந்தது, தொட்டது எல்லாம் துலங்கியது,உறவினர்கள் ஒன்றாக இருந்த காலகட்டம் விலக கூடிய ஒரு நிகழ்வாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு கொடுக்கும். ஆகவே நினைத்த காரியம் உடனே நடக்காது, எந்த ஒரு விஷயங்களும் இழுபறி கொடுக்கும். ஆகவே மனதளவில் ஒரு சோர்வை கொடுக்கக்கூடிய நிகழ்வாக, இந்த குரு பெயர்ச்சி இருக்கும். ஏனென்று சொன்னால்,புலிப்பாணி சித்தர் பாடல் வரிகளை கவனிப்பது நலம். வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டிலே வீழ்ந்ததும்,அதாவது இன்றைய காலநிலைக்கு தகுந்த படி பதவி பறிபோகும் எனவும் எடுத்து கொள்ளலாம்.

நிதி நிலையை பொருத்தளவில் மீனராசி மக்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு சற்று தடுமாற்றம் ஏற்படும். ஆகவே எந்த ஒரு செலவையும் யோசித்து, பலதடவை யோசனை செய்து, ஒரு செலவு செய்யும் பொழுது எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கூடிய ஒரு நிலை உங்களுக்கு கிடைக்கும் . குடும்பம் சார்ந்த நிகழ்வுகளில் ஒரு கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு கொடுக்கக்கூடிய நிகழ்வாக இருக்கும். இந்த இடத்தில் இதற்கு மாற்று விஷயம் என்னவென்று பார்க்கும் பொழுது கணவர் நாற்பது, ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் வேலை செய்கிறார் என்று சொன்னால் , அவர் இந்த குருபெயர்ச்சி முடியும் காலகட்டம் வரையில் ஒரு தனி அறையை வாடகைக்கு எடுத்து வேலை செய்யும் இடத்தில் இல்லம் விட்டு, குடும்பம் விட்டு பிரிந்து இருந்தால் கெடுதலான பலன்கள், இதில் இருந்து விலக கூடிய ஒரு சூழ்நிலை கொடுக்கும். இயற்கையாகவே நாம் பிரிந்து இருக்கக்கூடிய ஒரு நிகழ்வை, கொடுக்கிற நிகழ்வாக நாம் இந்த குருபெயர்ச்சியில் மீனராசி மக்கள் மாற்றும் பொழுது  நல்ல பலன்கள் நடக்குமோ,இல்லையோ,ஆனால் கெடுபலன்கள் நடக்காது. அவர்களுக்கு நடக்கும் இதுவரையில் கல்வி சார்ந்த நிகழ்வுகளில் வெற்றியை கொடுத்த காலகட்டம் என்பது மாறி, இந்த 12ஆம் இட குருபெயர்ச்சி என்பது ஒரு வெற்றியை பறிக்கிற குரு பெயர்ச்சியாக இருக்கும். இந்த இடத்தில் வெற்றிக்கு வழி என்பது ஒவ்வொரு வியாழக்கிழமையும், குரு நிலையில் இருக்கக்கூடிய ஆசிரியப் பெருமக்களை ஆசிர்வாதம் செய்தும் வரும் பொழுது கண்டிப்பாக கல்வி சார்ந்த நிகழ்வுகளில் ஒரு தோல்வி என்கிற நிலைக்கு செல்லாது வெற்றி நிலையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த குரு பகவான் உங்களுக்கு வழங்குவார் என்பது திண்ணம் .குரு  ஓரை நேரங்களில் குறிப்பாக குரு ஓரை வரக்கூடிய நேரத்தில் நீங்கள் உண்மையாக, நேர்மையாக, ஒரு மருந்துக்கு கூட விளையாட்டுத்தனமாக கூட ஒரு பொய் பேசாத நிலையில் இருக்கும் பொழுது, இது மாணவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி இந்த நிலையை கடைப்பிடிக்கும் பொழுது கண்டிப்பாக எப்படி ஒரு சில ராசியினருக்கு 100% கெடு பலன்களை கொடுக்கின்றார் என்று சொன்னாலும், அதே போல மேற்கூறிய வழிபாடு தவறாது செய்யும் போது, 50சதவீதம்  நல்ல பலன்களை இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும் என்று சொல்லலாம். நிச்சயமாக இறை வழிபாடு சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபடாத மனிதர்களுக்கு 100% தீமையை கொடுக்கிற குருபெயர்ச்சியாக இருக்கும். மீண்டும் வேறொரு ஜோதிட கருத்தோடு சந்திப்போம். நன்றி வணக்கம்.

 812 total views,  1 views today