கீழ்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து | underground water tank as per vastu

underground water tank as per vastu
underground water tank as per vastu

கீழ்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து என்கிற விசயத்தை தெரிந்து கொள்வோம்.தரைத்தள தண்ணீர் தொட்டிகள் என்கிற விஷயத்தில் வாஸ்துவின் ரீதியாக எளிதான விஷயமாக பார்க்கப்பட்டாலும் மிகச்சரியான அமைப்பில் அமைப்பது நல்லது. ஒரு சில இடங்களில் தரைத்தள தண்ணீர் தொட்டியை சதுரத்தில் அமைக்கலாமா? வட்ட வடிவத்தில் அமைக்கலாமா என்கிற கேள்வியை கேட்பார்கள். என்னைப் பொறுத்த அளவில் ஒரு  தரையோடு தரையாக இருக்கும் போது அது சதுரமாக இருந்தால் என்ன?.. அல்லது வட்ட வடிவத்தில் இருந்தால் என்ன ?..எல்லாம் ஒன்றுதான் என்பேன். இந்த இரண்டு விதமான கட்டமைப்பில்  இதில் எது செலவு குறைவாக இருக்கிறதோ அதனை மட்டுமே கடைபிடியுங்கள்.  ஏன் இதனை இன்று இருக்கும் நிறைய வாஸ்து நிபுணர்கள் புதுமை படுத்துகிறேன் பேர்வழி என்று தேவையில்லாத ஒரு விஷயத்தை சொல்வதாக தான் நான் பார்க்கிறேன். தண்ணீர் தொட்டி என்பது முழுக்க முழுக்க வடகிழக்குப் பகுதியில் மட்டுமே வரவேண்டும். வடகிழக்குப் பகுதியில் வடக்கு சிறப்பா? கிழக்கு சிறப்பா?. என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் வடக்கு தான் சிறப்பு என்று சொல்வேன் . ஆனால் ஒரு மனை தெற்கு வடக்கு நீளமாக இருக்கிறது. ஒரு மனை கிழக்கு-மேற்கு நீளமாக இருக்கிறது. இதில் எந்த இடத்தில் அமைத்தால் சிறப்பு என்றால், வடக்கு மட்டுமே சிறப்பு. தென்வடல் நீளமாக இருக்கிற மனைக்கு கிழக்கு மட்டுமே சிறப்பாக இருக்கும்.சதுர அமைப்பாக மனை அமைகின்ற போது அது வட கிழக்கில் மட்டுமே வர வேண்டும். அதே போல வடக்கில் அமைந்த தண்ணீர் தொட்டியில் வடகிழக்கு கொஞ்சம் தள்ளி வடக்கு சேர்ந்து வந்தாலும் தவறு கிடையாது  இதனை தவிர தண்ணீர் தொட்டி சார்ந்த விஷயத்தில் தவறு செய்துவிடக்கூடாது. வடகிழக்கு தவிர வடமேற்கு, தென்கிழக்கு ,தென்மேற்கு, தெற்கு, வடக்கு மத்திய பாகம் மேற்கு மத்திய பாகம், கிழக்கு மத்திய பாகம் இதுபோல எந்த இடத்திலும் வாஸ்துவின் ரீதியாக வரக்கூடாது. தண்ணீர் தொட்டியை பொறுத்தளவில் இல்லத்தின் வெளி மூலையும்  சுற்றுச்சுவரின்உள் மூலையும் சேருகின்ற இடத்தில் தண்ணீர் தொட்டி வரக்கூடாது. அதே போல  சுற்றுச்சுவரின் தென்மேற்கு  உள்ப்பகுதி,  வடகிழக்குப் பகுதி உள்ப்புறப் பகுதியில் இருந்தும் ஒரு நூலினைப் பிடிக்கும் பொழுது, அந்த நூலின் இடைப்பட்ட பகுதியில் தண்ணீர் தொட்டி என்கிற விஷயம் வரக்கூடாது . இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் . தண்ணீர் தொட்டியை பொறுத்தளவில் கிராமப்புறங்களில் நேரடியாக ஆள்துளை கிணறு, தண்ணீர் என்பது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சென்று விடும். இந்த இடத்தில் தண்ணீர் தொட்டி என்பது ஒரு இல்லத்திற்கு தேவைப்படாது. ஆகவே நீங்கள் தண்ணீர் தொட்டி தரையில் அமைக்காமல் இருந்தால் தவறு கிடையாது. அதே சமயம் வடமேற்கில் கழிவுநீர் தொட்டி உங்கள் இல்லத்தில் உட் பகுதியான சுற்றுச் சுவருக்குள் வரக் கூடாது. அப்படி வருகின்ற பட்சத்தில் வாஸ்துவின் ரீதியாக முழுக்க முழுக்க தவறாகிவிடும். நீங்கள் தரைத்தள தண்ணீர் தொட்டியை அமைப்பதாக இருந்தால், வடமேற்கு கழிவுநீர் தொட்டி  சுற்றுச்சுவருக்கு வெளியே அமைத்து கொள்ளுங்கள். இல்லை என்றால் தவிர்த்து விடுங்கள். கழிவுநீர் தொட்டியை வீட்டிற்கு வெளிப்புறப் பகுதியில் சுற்றுச் சுவருக்கு வெளிப்புறப் பகுதியில் அமைக்கும் பொழுது ,வீட்டிற்கு உள்ளாகவும் தண்ணீர் தொட்டி என்பது தேவைப்படாது. தாராளமாக மேல்நிலை தண்ணீர் தொட்டியை மட்டும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். தண்ணீர் தொட்டி பொறுத்தளவில் கழிவுநீர் தொட்டியை விட உயரத்திலும், அகலத்திலும், நீளத்திலும் அதிகமாக இருக்க வேண்டும். தண்ணீர் கொள்ளளவு அதிகமாக இருக்க வேண்டும். குடியிருக்கும் இடங்களில் அருகில் காலியிடம் இருக்கின்ற பட்சத்தில் வெளிப்புறப் பகுதியில் கூட தண்ணீர் தொட்டி அமைத்து கொள்ளலாம். ஆனால் தொட்டி அமைக்கும்போது வாஸ்துவின் விதிகளை புகுத்த வேண்டும். தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய தொட்டியின் மேல் பாகத்தில் ஒரு திறப்பை அமைப்பு என்பது மொத்த தண்ணீர் தொட்டிக்கு வடகிழக்கு பாகத்தில் வரவேண்டும். இந்த தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் மேல்நிலை தொட்டிக்கு அனுப்புவதற்காக மின்சார மோட்டார் அமைக்கும் பொழுது நேரடியாக வடகிழக்குப் பகுதியில் வரும் அமைப்பில் அமைக்கக் கூடாது. அப்படி அமைக்கும் பொழுது அந்த இடத்திற்கு அது எடையுள்ள விஷயமாக மாறிவிடும். ஆகவே தண்ணீர் தொட்டியில்  தண்ணீருக்குள் இருக்கும் மின்மோட்டாரை அமைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்று சொன்னால் தண்ணீரின் மட்டும் வருவது போல அமைத்துக் கொண்டு தண்ணீர் குழாய்கள் வருவதுபோல் அமைத்துக் கொண்டு, மோட்டார் சார்ந்த விஷயங்களை ஒரு இல்லத்தின் தென் கிழக்கு பகுதியிலோ அல்லது, வடமேற்கு பகுதிகளில் அமைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் தொட்டி பொறுத்தளவில் பெரிய அளவில் அமைத்துக்கொள்வது நல்லது. இன்றைய காலகட்டத்தில் நல்ல தண்ணீர் என்பதில் மழை தண்ணீர் தான் முதலிடம்.ஆக  மழைநீரை சேமித்து வைத்து உபயோகிக்கிற வேலையைக்  செய்வது நாட்டிற்கும், நமக்கும் நன்மை பயக்கும். நாட்டுக்கு என்று சொல்வதைவிட நமக்கு மிக மிக சுத்தமான தண்ணீர் கிடைக்கும். அதனை நேரடியாக நீங்கள் ஆரோ செய்து குடிப்பதற்காக உபயோகித்துக்கொள்ளலாம்.ஆக தண்ணீர் தொட்டி என்பது வாஸ்து விதிகளை கொண்டு அமைக்க வேண்டும்.

 1,618 total views,  8 views today

Leave a Comment

Your email address will not be published.