
வாஸ்து சாஸ்திர அமைப்பில் கிணறுகள் என்பது ஒரு இல்லத்திற்கு முக்கியம். அந்த வகையில் இன்றைய காலகட்டங்களில் ஆழ்துளை கிணறுகள் என்கிற விஷயங்கள் தான் அதிகம் இருக்கின்றன. ஒரு சில இடங்களில் தண்ணீர் எப்போதும் தீராத பகுதிகளில் கிணறுகளை அமைத்துக் கொள்கின்றனர். ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பாக, ஆழ்துளை கிணறு வராத காலகட்டங்களில் மிகப்பெரிய கட்டிட அமைப்பில் கிணறுகளை ஒவ்வொரு இல்லங்களிலும் அமைத்தார்கள். ஆனால் இன்று 2000 ஆம் ஆண்டு கால கட்டங்களுக்கு பிறகு கிணறுகள் என்கிற விஷயம் மருவி ஆள்துளை கிணறு ஆக மாறிவிட்டது. அந்த வகையில் ஒரு இல்லத்தில் கிணறு என்பது வடகிழக்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். வடகிழக்குப் பகுதியில் வீட்டின் வெளிப்புற மூலைக்கும் சுற்றுச்சுவரின் உட்புற மூலைக்கும் இடைப்பட்ட இடத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு வரக்கூடாது. அதேசமயம் இந்த இடத்திற்கு வடகிழக்கு தொடங்கி, தென்மேற்கு வரை ஒரு நூல் பிடிக்கும் பொழுது அந்த நூலின் மேற்பரப்பு சார்ந்த பகுதிகளில் கிணறு இந்த விஷயம் வரக்கூடாது. வடக்கு பார்த்து, வடக்கு வாசல் நீளமாக இருக்கக்கூடிய இடங்களில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளை, கிழக்கு புறத்தில் அமைத்துக் கொள்ளலாம். அதே கிழக்கு பார்த்த, கிழக்கு வாசல் நீளமாக இருக்கக்கூடிய இடங்களில், வடக்கு சார்ந்த வடக்கில் அமைத்துக்கொள்ளலாம். வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு சதுரமாக இருக்கக்கூடிய வீடுகளில் , அதிகபட்சம் வடக்கு பகுதிகளில் அமைப்பது நல்லது. தெற்கு பார்த்த வீடுகளில் ஆழ்துளை கிணறு அல்லது கிணறுகளை வடக்குப் பகுதியில் அமைத்துக் கொள்ளலாம். மேற்கு பார்த்த வீடுகளில் கிணறுகள், அல்லது ஆழ்துளை கிணறுகளை கிழக்கு பாகத்தில் அமைத்துக் கொள்ளலாம். ஒரு இல்லம் ஒரு மனை எந்த அளவுகளில் இருந்தாலும், எந்த நீள அகலத்தில் இருந்தாலும் கிணறு என்பது வடகிழக்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். பழைய இடங்களை வாங்கி வீடு கட்டும் பொழுது அல்லது, நகர்ப்புறப் பகுதிகளில் பழைய வீடுகளை வாங்கி இடித்து விட்டு புதிதாக கட்டும்பொழுது எப்பொழுதுமே அந்த இடத்தில் இருக்கக்கூடிய கிணறுகளை கூர்ந்து கவனித்து புதிய கட்டிடம் அல்லது வீடு கட்ட வேண்டும். தவறாக இருக்கின்ற கிணறாக ஆக இருந்தால் அதனை மூடிவிட்டு பாசிட்டிவான பகுதியான வடகிழக்கு பகுதியில் அமைத்துக்கொள்ள வேண்டும். கிணறுகளை பொறுத்தளவில் எப்பொழுதுமே எதிர்மறை பாகத்தில் இருக்கக்கூடாது. அது ஆழ்துளை கிணறுகளாக ஆக இருந்தாலும் சரி , சிறிய, பெரிய கிணறுகளாக இருந்தாலும் சரி, பெரிய பரந்த இடத்தில் ஆள்துளை கிணறு குறிப்பிட்ட தூரத்திற்கு மேலாக இருக்கும் போது பெரிய தோஷத்தை கொடுக்காது. ஆனால் கிணறுகள் ஆழ்துளை மற்றும் கிணறுகள் சரியான இடத்தில் இருந்தால் தவறு இல்லை. தென்கிழக்கில் கிணறுகள் இருக்கும்பொழுது மிக முக்கியமாக ஒரு இல்லத்தில் இருக்கும் பொழுது ஆண்களுக்கும், அந்த வீட்டின் பெண்களுக்கும் அதாவது மூத்த பெண்களுக்கும் பாதிப்பைக் கொடுக்கும். பெண்களின் வாழ்க்கையில் ஒரு சில பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகளையும், அந்த குடும்பத்தின் ஆண் தலைவர் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பையும் கொடுக்கும். வடமேற்குப் பகுதியில் கிணறுகள் மற்றும் ஆள்துளை கிணறுகள் இருக்கின்றபோது அந்த கிணறுகள் பணம் சார்ந்த நிகழ்வுகளிலும், வரவு செலவு சார்ந்த நிகழ்வுகளிலும், மனித உடலின் கால்கள் சார்ந்த உடல் உறுப்புக்களில் பாதிக்கிற தன்மையை கொடுக்கும். எப்பொழுதுமே வடமேற்கு பள்ளங்களை கூர்ந்து கவனித்து சரி செய்ய வேண்டும். அது எதிர்மறை இயற்கையான பள்ளங்களாக இருந்தாலும் சரி, இல்லத்தில் இருக்கக்கூடிய கிணறாக இருந்தாலும் சரி.
கிணறுகளை பொறுத்த அளவில் பலவித அளவுகளில் இருந்தாலும் ஒவ்வொரு அளவுக்கு தகுந்தாற்போல குறிப்பிட்ட தூரத்திற்கு அதன் பாதிப்பு இருக்கும். எடுத்துக்காட்டாக வடகிழக்கில் இல்லாது தென்மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு பகுதியில் கிணறு இருக்கும் என்று வைத்துக் கொள்ளும் பொழுது, அதன் அகலம் என்ன? அதன் தூரம் என்ன? என்பதனை கணக்கீடு செய்ய வேண்டும். ஒரு இடத்திலிருந்து ஒரு கட்டிடத்திலிருந்து சிறிய கிணறுகளின் தூரம் ஒரு 50 அடி தள்ளி இருக்க வேண்டும். மேலும் பெரிய கிணறுகளின் தூரம் என்பது 500 அடிகளுக்கு உள்ளாக இருந்தால் 100% வாஸ்து தோஷத்தை கொடுக்கும். இந்த விதி பெரிய அளவில் ஆழ்துளை கிணறுக்கு பேசாது. இருந்தாலும் சிறிய இடங்களில் குறைந்த தூரம், அதிக தூரம் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி இருக்கின்ற பட்சத்தில் எதிர்மறை பகுதியில் ஆழ்துளை கிணறுகள் இருந்தால் சுற்றுச் சுவரை வைத்து தடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் மூடுவதும் மட்டுமே சரியான வழி. என்னை பொறுத்த அளவில் ஆழ்துளை கிணறுகள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரையிலும், அதிகஅடி அகலத்திற்கு இருக்கிற கிணறுகள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரையிலும், 20 அடி அகலம் என்ற கிணறுகள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரையிலும், மிகப்பெரிய அளவில் பிரமாண்ட அமைப்பில் இருக்கும் கிணறுகள் ஒரு குறிப்பிட்ட தூரம் அளவிலும் பாதிப்பைக் கொடுக்கும்.வடகிழக்கு பகுதியில் 20 அடி அகலத்தில் ஒரு கிணறு எடுக்கும் பொழுது அது அரை ஏக்கர் அளவில் இருக்கிற மொத்த இடமாக இருக்கும் போது தவறு கிடையாது. 5 அடி முதல் 10 அடி அகலத்தில் ஒரு கிணறு இருக்கின்ற பட்சத்தில் அது ஒரு 100அடிக்குள் இருக்கும் இடமாக இருக்கும் போது தவறு கிடையாது. 5 சென்ட் நிலத்தில் ஒரு 10 அடி அகலத்தில் கிணறு இருக்கும் என்று சொன்னால் கூட வாஸ்துவின் ரீதியாக தவறு என்பேன்.கிணறு மற்றும் போர்வெல் வாஸ்து சாஸ்திரம் /Well vastu location tamil /Borewell vastu
1,173 total views, 1 views today