காலிமனை வாங்க வாஸ்து | land purchase vastu

காலிமனை வாங்க வாஸ்து

மனை வாங்கும்போது வாஸ்து சாஸ்திரம் என்பது கவனித்து வாங்க வேண்டும். ஒரு புதிதாக வீடு கட்டுவதற்கு மனை வாங்குவீர்கள் அப்படி மனை வாங்க செல்லும் போது சாகுனங்களையும் பார்ப்பது நல்லது . சகுனங்கள் என்பதே நிமித்தங்கள் என்பது நம்மை கொஞ்சம் காத்திருங்கள் என்று சொல்வதைப் போலத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் கல்யாண கூட்டம், நாதஸ்வர இசை, ஆலயமணியின் ஓசை, கோயில் பூஜை, பசுமாடு கூட்டங்களாக வருவது, சுமங்கலிப் பெண்கள் வருவது, தம்பதிகள் வருவது, பசு கன்று ஒன்றாக இருத்தல், நாய்கள் விளையாடுவது, திருமணத்துக்குப் பெண் பார்க்கப்  செல்வது, பூஜை பொருட்களைக் கொண்டு செல்வது, குழந்தைகள் விளையாடுவது, பெண்கள் பெரிய பெண்ணாக ஆவது, பிரசவத்துக்கு செல்வது, சலவைத் தொழிலாளி அழுக்கு நீக்கி விட்டுக் துணி கொண்டு செல்வது, தெய்வ விக்கிரகங்கள் வீதி உலா வருவது, கன்னிப் பெண்கள் வருவது, நிறைகுடம் தண்ணீரோடு எடுத்துவருவது, தண்ணீர் கொண்டு செல்வது, சந்தோஷமாக சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிற காட்சி,இரண்டு புரோகிதர்கள் வருவது, நாதஸ்வர இன்னிசை ,  பூமாலை கொண்டு செல்வதும்,   பிரசவ குழந்தையை எடுத்து வருவது, தம்பதியர் பெரியவர்களை வணங்கிச் செல்வது, கிரகப்பிரவேசம், திருமணம், பூணூல் கல்யாணம், சுபகாரியங்களை கண்களில் காண்பது, இதனை நல்ல சகுனங்களாக எடுத்துக்கொள்ளலாம்.

அந்த வகையில் காலி மனைகள் வாங்கும் பொழுது,  ஆன்மிக மக்கள், விஞ்ஞானிகள், செல்வம் படைத்தவர்கள், தம்பதிகளாக இருக்கிறவர்கள், கோயில் நிலத்தை விலை கொடுத்து வாங்கும் மக்கள் , அரசின் மூலம் வரும் மனைகள், குடும்ப திருமணத்திற்காக விற்பனைக்கு வரும் மனைகள், வீடு கட்டுவதற்காக விற்கும் மனைகள், படிப்பு செலவுக்கு விற்பனை செய்யும் மனைகள் போன்றவற்றை, தாராளமாக வாங்கலாம்.

எந்த மனைகளை வாங்க கூடாது என்று பார்க்கும்பொழுது, ஏலத்தின் மூலமாக வருகிற மனைகள், குற்றவாளிகளாக தண்டனை பெற்றவர்கள், கோயில் அபகரித்த மனைகள், அரசாங்கத்தை ஏமாற்றிய மனைகள், குடும்பம் இல்லாத நபர்கள் மனை, மனநிலை சரியில்லாதவர் மனை,   கணவன் மனைவி விவாகரத்து அடைந்தவர்களின் மனைகள், குழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனைகள், தீராத நோய் இருந்து இறந்தவர்களுடைய மனைகள், சந்யாச வாழ்க்கை வாழ்பவர்கள் , சாபம் பெற்ற மனைகள், மாந்திரீகர் வாழ்கின்ற மனைகள் இப்படி மனைகளை  வாங்கும்போது சகுன நிமித்தம் அறிந்து வாங்க வேண்டும். அதேபோல மனைகள் வாங்க செல்லும் பொழுது, தெருவில் சண்டை நடந்து கொண்டிருந்தாலும், ஒற்றை பிராமணர் வந்தாலும், நாய்கள் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும், பெண் தலைவிரி கோலத்தில் இருந்தாலும், கேட்டசெய்திகளை கேட்பது,  சலவைத் தொழிலாளி அழுக்குத் துணியை எடுத்து வருவது போல் இருந்தாலும், காவல் துறை அதிகாரிகள் குற்றவாளியை அழைத்துச் செல்வதைப் போல் இருந்தாலும், இடத்தில் மரம் சாய்ந்து கிடக்கின்றன நிலை இருந்தாலும், மரம் பட்டுப் போன நிலை இருந்தாலும், விபத்து காட்சிகளை பார்ப்பது போல் இருந்தாலும், மனை வாங்க செல்லும் போது தவிர்த்துவிடவேண்டும். மனைகளை பொறுத்த அளவில் எந்த மாதிரி மனைகளை வாங்க வேண்டும் என்று பார்க்கும்பொழுது, எந்த விதமான தெருக்களும் இல்லாது, வடக்கு பார்த்த, கிழக்கு பார்த்த மனைகளை வாங்கி கொள்ளலாம்.

எதிரிலோ, பின்புறத்திலோ சாலைகள் வரும்போது வாஸ்து சாஸ்திர நிபுணரை துணைக்கு வைத்துக்கொண்டு வாங்குவது நலம். அதேபோல மேற்கு பார்த்த, தெற்கு பார்த்த இடங்கள் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம். ஆனால் முறையான அமைப்பில் வீடு கட்டும் பொழுது, மேற்கு பார்த்த மனைகளும், நல்ல பலன்களை கொடுத்துற மனைகளாக தான் இருக்கும். எந்த மனையாக இருந்தாலும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு திசையில் இழுப்பதென்பது தவறாக பார்க்கப்படுகிறது. ஒரு மனையில் வடக்குப் பகுதிகளில் இழுத்து இருந்தாலும், கிழக்குப்பகுதி இழுத்து இருந்தாலும் தாராளமாக வாங்கிக்கொள்ளலாம். அதுவே தென்கிழக்குப் பகுதி இழுத்து இருந்தாலும், வடமேற்கு பகுதிகளில்இழுத்து இருக்கும் மனையை ஓரளவுக்கு அதை சரி செய்து வாங்கிக் கொள்ளலாம். ஆனால் தென்மேற்குப் பகுதியில், மேற்கு சார்ந்தும், தென் மேற்கு பகுதி தெற்கு சார்ந்தும் இழுத்த மனைகளாக இருக்கும்போது அதை சரி செய்வது கொஞ்சம் கடினம்.  எந்த இடத்திலும் மனைகள் என்பது பலவித கோணங்களிலும், முக்கோண வடிவிலும், வட்ட வடிவிலும் இருக்கும் பொழுது மனைகளால் பெரிய அளவில் பிரயோஜனம் இருக்காது. அப்படிப்பட்ட மனைகளை தவிர்த்துக்கொள்வது நல்லது. ஏற்கனவே வேறு ஒரு பதிவில் தெருக்குத்துக்கள் எவை, தெருத்தாக்கங்கள் எவை எவை? என்கிற விஷயத்தை நான்  சொல்லியிருக்கிறேன். அதனையும் தெரிந்துகொண்டு,ஆக ஒரு காலி இடத்தை வாங்கி வீடு கட்டுவதற்கு முன்பாக தெரிந்துகொண்டு இல்லத்தை அமைக்க வேண்டும் . மனைகளை பொறுத்தளவில், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கிற வகையில் மாறிவிடும். அந்த வகையில் மனை தேர்ந்தெடுப்பது என்பது வாஸ்து ரீதியாக மிக மிக முக்கியம். ஏனெனில் அதில் செய்கிற தவறு எக்காரணம் கொண்டும் திருத்த முடியாத செயலாக மாறிவிடும். கட்டிடம் கட்டினால் கூட தவறுகளை செய்தால் ஏதோ தவறாக கட்டிய தவறுகளை சரி செய்து கொள்ளலாம். ஆனால் இடம் தவறாக இருந்தால் எந்த பரிகாரமும் செய்து சரி செய்ய முடியாது என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *