காலண்டர் சென்னை வாஸ்து 29.9.2022

காலண்டர் சென்னை வாஸ்து 29.9.2022

29.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி

தினசரி நாள்காட்டி 29.9.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.12ந் தேதி . வியாழக்கிழமை இரவு 12.10 வரை சதுர்த்தி திதி . பிறகு  வ.பஞ்சமி திதி.விடியற்காலை 5.00 வரை விசாகம் நட்சத்திரம். பிறகு அனுசம் நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am.

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்   .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

கட்டிடத்தில் விரிசல் ஏற்பட வாஸ்து தவறுகள் காரணமா என்கிற கேள்வியை நிறைய மக்கள் என்னிடம் கேட்டிருக்கின்றனர் அதற்கான இந்த பதிவு கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்படுவது ஒரு சில இடங்களில் பூமி சார்ந்த விஷயத்திலும் இருக்கும் இதனை எங்களைப் போல் இருக்கிற வாழ்த்து நிறுவனங்கள் ஜியோபதிக் டிரஸ் என்று சொல்லி நான் அதை கட்டுப்படுத்துகிறேன் என்று சொல்லி பூமியின் வெடிப்பு சார்ந்த விஷயத்தில் கேஸ் ரிலீஸ் என்று கூட சொல்கின்றனர் இதனை நான் அரசு செய்து கொள்கிறேன் அந்த ஜியோபதிக் டிரஸ் கட்டுப்படுத்தி விடுகிறேன் ஒரு கட்டிடத்தில் எங்கு வெடிப்பு இருக்கிறதோ அங்கு தான் இந்த ஜியோபதி ட்ரஸ் என்கிற விஷயம் இருக்கும் என்று சொல்வார்கள் என்னைப் பொறுத்த அளவில் அது உண்மைதான் ஆனால் அதனை மனிதர்களால் நிறுத்த முடியுமா என்று சொன்னார் நிச்சயமாக முடியாது அதற்கு ஒரு வழி இருக்கிறது கட்டிடம் கட்டும்போது சரியாக செய்து கொண்டால் இது போன்ற தவறான விஷயங்களை நாம் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது என்று சொல்வேன் அதுவும் கூட ஒரு வாஸ்து ஏமாற்று பரிகாரம் என்று தான் சொல்லுவேன் இந்த இடத்தில் இரண்டு வகையிலும் கவனிக்க வேண்டும் கட்டிடம் கட்டும்பொழுது கலவை தயாரிக்கும் பொழுது அதில் கவனம் வேண்டும் சிமென்ட் அளவில் சரி பாதி அளவிற்கு தண்ணீர் கலக்கப்பட வேண்டும் பவுடர் வடிவில் இருக்கும் சிமெண்ட் தன் ஒட்டும் திறனை செயல்படுத்த அதனுடைய தண்ணீர் சேர்க்கப்படுகிறது இந்த வேதிவினையின்போது சிமெண்ட் இருந்து பெரும்பாலும் வெப்பம் வெளியேறும் இவ்வாறு வெளியேறு வெப்பமானது குறிப்பிட்ட நிலையில் கட்டுப்படுத்த வேண்டும் அதற்குரிய அளவில் தண்ணீர் சேர்ப்பு என்கிற விஷயம் உதவுகிறது அதே சமயம் தண்ணீர் அதிகமானாலும் சிமெண்ட் இருந்து வெளியேறு சிமெண்ட் சார்ந்த விஷயத்தைக் கூட வெளியேற்றக் கூடிய தன்மையாக முடிந்து விடும் ஆகவே பூச்சு கலவையில் தண்ணீர் அதிகரிப்பது தான் அல்லது தண்ணீர் குறைவது தான் அல்லது மணல் அதிகரிப்பது தான் இந்த வெடிப்புகளுக்கு காரணம் அதை சரியாக நாம் பார்த்துக் கொண்டால் இந்த வெடிப்பு என்கிற விஷயம் ஒரு கட்டிடத்தில் வராது அதே சமயம் இரண்டாவது வகையில் ஜியோபதிக் டிரஸ் என்று சொல்லக்கூடிய பூமியின் அழுத்தம் சார்ந்த வாயு வெளியேற்றம் பாறை வெடிப்புகள் போன்ற விஷயங்கள் நேர்கோடுகளில் விடுப்புக்களை ஏற்படுத்தும் அதனை கட்டிடம் கட்டும்பொழுது பெல்ட் பீம் சரியான முறையில் அமைக்கும் பொழுது அதனை ஒரு இல்லத்தில் தவிர்த்துக் கொள்ளலாம் சுற்றுச்சூழலும் அந்த முறையை கடைபிடிக்கும் போது அதனையும் வெடிப்புகளை தவிர்த்துக் கொள்ள முடியும் நாள் மட்டுமே கொடுக்க முடியும் காலண்டர் சென்னை வாஸ்து 29.9.2022

______________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – குழப்பம்
ரிஷபம்- பணிவு
மிதுனம்- பெருமை
கடகம்- களிப்பு
சிம்மம்- அலைச்சல்
கன்னி- விருத்தி
துலாம் – நன்மை
விருச்சிகம்- பக்தி
தனசு- சிரமம்
மகரம்- சினம்
கும்பம்- பேராசை
மீனம் – ஆக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_29

உலக இதய தினம்

சர்வதேச காபி தினம்

அர்ஜெண்டீனா கண்டுபிடிப்பாளர்கள் தினம்

ஓமன், அரபுக் கூட்டமைப்பில் இணைந்தது(1971)

ஜான் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார்(1916)

கனடாவின் முதல் செயற்கைகோளான அலூட் 1 ஏவப்பட்டது(1962)

Loading