
கழிவுநீர் தொட்டி என்பது எனது வாஸ்து பயண நிகழ்வில் எதிர்மறை அமைப்பாக பார்க்கப்படுகிறது. கழிவுநீர் தொட்டி களைப் பொறுத்த அளவில் ஒரு இல்லத்தின் வெளிப்புறப் பகுதியில் அமைக்க முடிந்தால் அமைப்பது சாலச் சிறந்தது. இல்லை என்று சொன்னால் தென கிழக்கு மூலையில் அமைந்தால் கூட என்னைப் பொருத்தளவில் தவறு என்றுதான் சொல்லுவேன். ஒரு சில மக்கள் வீடு கட்டுவதற்கு முன்பாகவே கழிவுநீர் தொட்டியை பள்ளம் பறித்து விடுவார்கள். ஆனால் என்னை பொறுத்த அளவில் கழிவுநீர் தொட்டியில் முதலில் பள்ளம் நோண்டுவது என்பது வேண்டாம் என்றுதான் சொல்லுவேன். முதலில் வேலை தொடங்க வடகிழக்கு தண்ணீர் தொட்டியை தோண்டிய பிறகு அனைத்து வேலைகளும் நிறைவான பிறகு கழிவுநீர் தொட்டியை தோண்டுவது அல்லது, அதற்கு முன்பாக எடுக்க வேண்டாம் என்றுதான் சொல்லுவேன். பெரிய இடங்களில் கழிவு நீர் தொட்டி அமைப்பதாக இருந்தால் வீட்டின் சுற்றுச் சுவருக்கு வெளியில் அமைப்பது மிக மிகச் சாலச் சிறந்தது. வாஸ்துவின் ரீதியாக கழிவுநீர் தொட்டி மிகமிக எதிரிடை பலனைக் கொடுக்கக் கூடிய இடமாக தென்மேற்கு பகுதியில் வட கிழக்குப் பகுதியும் வருகின்றது. அந்த வகையில் இந்த இரண்டு பகுதிகளையும் 100% தவிர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக மீதமிருக்கிற பகுதி என்பது வடமேற்கு, தென்கிழக்கு,இதில் 100% சதவீதம் கழிவு நீர் தொட்டி வரக் கூடிய இடமாக வடமேற்குப் பகுதி திகழ்கின்றது . ஆனால் ஒரு சில இடங்களில் வடக்கு இடமில்லை என்று சொல்வார்கள் அந்த இடங்களில் தென்கிழக்குப் பகுதியில் கழிவுநீர் தொட்டியை அமைத்துக் கொள்ளலாம் என்றாலும் கூட வடகிழக்குப் பகுதிகள் அதாவது வடக்கு பகுதியில் இடம் இல்லாத அமைப்பாக மாறி வாஸ்துவின் வகையில் வேறு தவறுகளை கொடுக்கும். ஆகவே எந்த அளவிற்கு நீங்கள் வடக்குப் பகுதியில் இடத்தை காலியாக விட்ட பிறகு அங்கு மட்டுமே கழிவுநீர் தொட்டி வருவதற்கு முயற்சிக்க வேண்டும். அல்லது நீங்களே சமாதானம் செய்து கிழக்குப் பகுதியில் போட்டுக்கொள்ளலாம். கிழக்குப் பகுதியில் இடம் இருக்கிறது என்று முடிவு செய்தால், வாஸ்து கழிவுநீர்த் தொட்டி சார்ந்த விஷயத்தில் தவறு செய்யாது வேறொரு வகையில் இடம் சார்ந்த நிகழ்வுகளில் தவறாக முடிந்து விடும் . கழிவுநீர் தொட்டி அமைப்பது என்பது வடமேற்கு சார்ந்த பகுதியில் தென்கிழக்கு மூலையில் வடமேற்கு மூலையில் இடைப்பட்ட கோடுகளில் எப்பொழுதும் கழிவுநீர் தொட்டி அமைக்க கூடாது. கழிவுநீர்த் தொட்டியை பொருத்த அளவில் பெரிய அளவில் கட்டிடத்தின் மனைகள் எங்கும் தொடாத அமைப்போடு அமைத்துக்கொள்ள வேண்டும். கழிவுநீர் தொட்டி என்பது வீட்டின் தந்தை சுவரையும், காம்பவுண்ட் சுவரையும் வீட்டில் தாய் சூடான வடக்கு சுவரையும் எப்பொழுதும் இணைக்கும் அமைப்பில் அமைக்கக்கூடாது. ஒரு சில இடங்களில் தவிர்க்க முடியாத பட்சத்தில் தென்கிழக்கு தான் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யும் பொழுது இடத்தை நான்காக பிரித்து, பிறகு இரண்டாகப் பிரித்து, நான்கு பாதத்திற்கு சார்ந்த மூன்றாவது பாகத்திற்கும் நான்காவது பாகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் தென்கிழக்கு சேராது, கிழக்கு மத்திய பாகம் சேராது, அமைத்துக் கொள்வது தவிர்க்க முடியாத பட்சத்தில் நல்லது. அல்லது வடக்கில் பெரிய அளவில் இடம் இல்லை கிழக்கில் மட்டுமே இடம் இருக்கிறது என்று முடிவு செய்தால் அதனை மிகச் சரியான முறையில் அமைக்கும் போது கிழக்கு பகுதியை வெளிப்புற காலியிடத்தில் சேர்த்த பிறகு சுற்றுச்சுவரை கொஞ்சம் மேற்கில் அமைத்துக்கொண்டு வெளிப்புறப் பகுதியில் கழிவுநீர் தொட்டியை அமைக்கும் பொழுது பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது. வடமேற்குப் பகுதியில் கழிவுநீர் தொட்டி இருந்தால் என்ன பலன் கொடுக்கும் அதே பலனை கொடுக்கும். ஆகவே கழிவுநீர்த் தொட்டி அமைக்கும் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். என்னை பொறுத்த அளவில் இன்றைய காலகட்டங்களில் கழிவுநீர் தொட்டி என்பது பயோ செப்டிக் டேங்க் என்கிற விஷயம் இப்பொழுது நடைமுறையில் இருக்கிறது. முடிந்த அளவிற்கு அதனை உபயோகிப்பது நல்லது. அதேபோல நகர்ப்புற பகுதிகளில் மிகப்பெரும் நகராட்சி பகுதிகளில், கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் தாராளமாக கழிவுநீர் குழாய்களை இணைத்துக்கொள்ளலாம். அதில் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது . கழிவு நீர் குழாய்களில் தொட்டி இணைப்பை ஏற்படுத்திக் கொண்டாலும், கூட பெரிய அளவில் உங்களுக்கு கழிவுநீர் தொட்டி இல்லாத இடமாக மாறிவிடும். ஒரு சில மக்கள் மேற்குப் பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைத்து இருப்பார்கள். வடமேற்கு மேற்கு பகுதியில் அப்படி அமைக்கின்ற போது அதுவும் வாஸ்து ரீதியாக மேற்கு பள்ளமாக மாறிவிடும். அந்த தவறுகளை எப்பொழுதும் செய்ய வேண்டாம் என்பது எனது கருத்து . கழிவுநீர் தொட்டிக்கு மிகச் சரியான இடம் வடமேற்கு வடக்கு சார்ந்த பகுதியே. அதனை தவிர்த்து வடமேற்கு மேற்கு பகுதியில் அமைப்பதும், தென்கிழக்கு தெற்கு பகுதியில் அமைப்பதும், வாஸ்துவின் ரீதியாக மிகப்பெரிய தவறுகளில் முடிந்துவிடும்.